)
பொதுவாக நடுத்தர மக்களின் வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது. வருமானத்திற்கும் செலவுகளுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு, அன்றாட வாழ்க்கையே சவாலாக மாறிவிட்ட நிலையில் அவர்களது கோடீஸ்வர கனவு நனவாவது மிகவும் கடினம் என்றே பலர் நினைக்கின்றனர். ஆனால் சரியான திட்டமிடல் மூலம், கோடீஸ்வர கனவை நினைவாக்கலாம்.
இன்றைய காலகட்டத்தில், முதலீட்டில் பெரிய அளவிலான கார்பசை உருவாக்க பல வாய்ப்புகள் உள்ளன. திட்டமிட்டு முதலீடுகளை தடையில்லாமல் தொடர்வது, ஆரம்ப கட்டத்தில் கடினமான விஷயமாக தோன்றினாலும், போகப் போக எளிதாகிவிடும். நடுத்தர வர்க்கத்தினர், முதுமை காலத்தில் எவரையும் சாராமல் இருக்கவும், நிதி பொறுப்புகளை கடன் வாங்காமல் திறம்பட நிர்வகிக்கவும் உதவும் சிறந்த முதலீட்டு டிப்ஸ்களை இன்றைய பதிவில் அறிந்து கொள்ளலாம்.
சம்பாதிக்க தொடங்கிய உடனே முதலீடு செய்யவும்
இளம் வயதில் சம்பாதிக்க தொடங்கிய உடனேயே, சேமிப்பு மற்றும் முதலீடுகளை தொடங்குவது வியக்கத்தக்க வகையில் பலனை அளிக்கும். பலனை பன்மடங்காக, மியூச்சுவல் ஃபண்ட் என்னும் எஸ்ஐபி முதலீடுகள் சிறந்த வகையில் கை கொடுக்கும். இதில் ஆயிரங்களை எளிதில் கோடிகளாகலாம். அதேபோன்று பிபிஎஃப் என்னும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டமும், சிறிய தொகையை பெருந்தொகையாக மாற்றும் சிறிய திட்டமாக இருக்கும்.
வரவு மற்றும் செலவுகளை திறம்பட திட்டமிடுதல்
வருமானத்திற்கு ஏற்ற செலவுகளை செய்வது அவசியம். தேவையற்ற செலவுகளை குறைப்பதால், சேமிப்பை அதிகரித்து, முதலீட்டு பலன்களை அதிகபட்சம் பெறலாம். அதே நேரத்தில் கடன் வாங்கும் நிலையும் தவிர்க்கலாம். வருமானம் அதிகரிக்கும் போது, அதற்கேற்ற வகையில் செலவுகளை அதிகரிக்க நினைக்காதீர்கள். பெரிய வீட்டிற்கு குடி பெயர்வது, மின்னணு சாதனங்களில் அதிகம் செலவிடுவது போன்றவற்றை தவிர்ப்பதால், அதிக பணத்தை சேமிக்கலாம்.
அவசர கால நிதியை உருவாக்குவது அவசியம்
வாழ்க்கையில் அவசர நிலை எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். மருத்துவ அவசர நிலை, வேலை இழப்பினால் ஏற்படும் நிதி நெருக்கடி போன்ற எதிர்பாராத செலவுகள் நிதி நிலைமையை பெரிதும் பாதிக்கும். எனவே அவசரகால தேவைகளை கருத்தில் கொண்டு, அதற்காக ஒரு குறிப்பிட்ட அளவு நிதியை ஒதுக்கி வைப்பது நல்லது. இதனால் கடன் வாங்கும் நிலைமையை தவிர்க்கலாம். முதலீடுகளையும் தடையில்லாமல் தொடங்கலாம்.
முதலீட்டை பல்வகைப்படுத்துதல்
ஒரே இடத்தில் முதலீடு செய்வது எப்போதுமே ஆபத்தானது. உங்கள் முதலீட்டில் பரஸ்பர நிதியம், அரசாங்கத் திட்டங்கள், கடன் ரியல் எஸ்டேட் என அனைத்தும் இருக்க வேண்டும். பண்டுகள் பணத்தை பன்மடங்காக்கும். அதே சமயத்தில் அரசாங்கத்தின் திட்டங்கள் கடன் நிதிகள் போன்ற பாதுகாப்பான முதலீடுகள் நிலையான வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கும்.
அவசர காலத்தில் கைகொடுக்கும் காப்பீடுகள்
காப்பீடு என்பது அனைவருக்கும் தேவை. உங்கள் மருத்துவ செலவுகளை சமாளிக்க உடல் நலக் காப்பீடு அவசியம். அதே போன்று துரதிஷ்டவசமான சம்பவங்களிலிருந்து குடும்பத்தை காக்க ஆயுள் காப்பீடும் அவசியம். இது சார்ந்து இருப்பவர்களுக்கு பாதுகாப்பான அரணாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ