)
Best Pension Scheme: நாட்டின் குடிமக்களுக்காக மத்திய அரசு பல சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதியவர்களை நிதி ரீதியாக வலிமையாக்கும் பல திட்டங்கள் உள்ளன. பலதரப்பட்ட மக்களுக்கான பல பிரத்யேக திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்களில் ஒரு முக்கியமான மற்றும் பிரபலமான திட்டம்தான் அடல் ஓய்வூதியத் திட்டம்.
தினசரி கூலித் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் முதல் சிறு கடைக்காரர்கள் வரை, அனைவரும் தங்கள் எதிர்காலத்தை நிதி ரீதியாக வலிமையாக்க ஒரு நல்ல திட்டத்தில் சேர விரும்புகிறார்கள். மத்திய அரசால் நடத்தப்படும் அடல் ஓய்வூதியத் திட்டம் அவர்களுக்கு ஏற்ற ஒரு திட்டமாக இருக்கும். அடல் ஓய்வூதியத் திட்டத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்தத் திட்டத்தின் மூலம், பயனாளிகள் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 முதல் ரூ.5000 வரை ஓய்வூதியம் பெறலாம். இந்தத் திட்டத்தில் சேருவதன் மூலம், முதியவர்களுக்கு நிதி உதவி கிடைப்பது மட்டுமல்லாமல் சமூக மரியாதை கிடைக்கிறது. அரசாங்கம் இந்த திட்டத்தை மே 9, 2025 முதல் நடத்தி வருகிறது. அடல் ஓய்வூதியத் திட்டம் தொடர்பான முக்கியமான விஷயங்களை இங்கே அறிந்து கொள்ளலாம்.
நாடு முழுவதும் உள்ள மக்கள் பல்வேறு துறைகளில் வேலை செய்கிறார்கள். சிலர் விவசாயிகளாக, சிலர் தொழிலாளர்களாக, வீட்டு உதவியாளர்களாக, ரிக்ஷாக்காரர்களாக, சிறு கடைக்காரர்களாக, இப்படி பல வேலைகளில் பலர் ஈடுபட்டுள்ளனர். இவை அனைத்தும் அமைப்புசாரா தொழில்கள் என்பதால் இவர்களுக்கு முதுமையில் எந்த ஆதரவும் கிடைப்பதில்லை. அடல் ஓய்வூதியத் திட்டத்தின் நோக்கம், வயதான காலத்தில் இதுபோன்றவர்களுக்கு உதவுவதாகும். அரசாங்கம் இதை ஒரு சமூகத் திட்டமாக நடத்தி வருகிறது. இந்தத் திட்டம் நிதி உதவியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், முதுமையில் ஆதரவையும் வழங்கும்.
- அடல் ஓய்வூதியத் திட்டத்தின் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
- இதன் பொருள் இங்கு முதலீடு செய்வது அனைத்து வழிகளிலும் பாதுகாப்பானது.
- அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 60 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும்.
- பயனாளியின் முதலீட்டிற்கு ஏற்ப அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.
- பயனாளிகளுக்கு 60 வயதானவுடன் மாதத்திற்கு ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.5,000 வரை ஓய்வூதியம் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தில் பயனாளியாக உள்ள நபர் இறந்துவிட்டால், வாழ்க்கைத் துணைவருக்கு ஓய்வூதியத்தின் பலன் தொடர்ந்து கிடைக்கும். இருவரும் இறந்தால், முழுத் தொகையும் பரிந்துரைக்கப்பட்ட நாமினிக்கு அளிக்கப்படும்.
அடல் ஓய்வூதியத் திட்டத்தில் சேர மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தத் திட்டத்தில் சேருவதன் மூலம் மக்கள் பெரும் நன்மைகளைப் பெற முடியும். ஏதேனும் காரணத்திற்காக பயனாளி இந்தத் திட்டத்தைப் பாதியில் நிறுத்த விரும்பினால், அதுவரை அவர் டெபாசிட் செய்த பணம் அவருக்குத் திரும்பப் கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ