EPF vs VPF vs NPS: ஓய்வுகாலத்திற்கான சிறந்த ஓய்வூதிய திட்டம் எது? முழுமையான ஒப்பீடு இதோ

Best Pension Schemes: இந்த திட்டங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான நன்மைகள் மற்றும் வரி நன்மைகளை வழங்குகின்றன. திட்டங்களின் ஒப்பீட்டை இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 7, 2025, 04:58 PM IST
  • ஊழியர் வருங்கால வைப்பு நிதி.
  • தன்னார்வ வருங்கால வைப்பு நிதி.
  • தேசிய ஓய்வூதிய அமைப்பு.
EPF vs VPF vs NPS: ஓய்வுகாலத்திற்கான சிறந்த ஓய்வூதிய திட்டம் எது? முழுமையான ஒப்பீடு இதோ

EPF vs VPF vs NPS: இந்தியாவில் ஊழியர்களுக்கு, EPF, VPF மற்றும் NPS உள்ளிட்ட பல பிரபலமான ஓய்வூதிய சேமிப்பு விருப்பங்கள் உள்ளன. EPF (ஊழியர் வருங்கால வைப்பு நிதி) திட்டம் என்பது சம்பளம் பெறும் ஊழியர்களுக்காக அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாகும். VPF அல்லது தன்னார்வ வருங்கால வைப்பு நிதி என்பது EPF இன் விருப்ப நீட்டிப்பு திட்டமாகும். NPS எனப்படும் தேசிய ஓய்வூதிய அமைப்பு, அனைத்து இந்தியர்களும் சேரக்கூடிய சந்தையுடன் இணைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாகும்.

Add Zee News as a Preferred Source

Pension Schemes: ஓய்வூதிய திட்டங்கள்

இந்த திட்டங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான நன்மைகள் மற்றும் வரி நன்மைகளை வழங்குகின்றன. பணி ஓய்வு காலத்தில் கூடுதல் ஓய்வூதியத் தொகைக்கு சரியான திட்டத்தைத் தேர்வுசெய்யும்போது, ​​நிதி இலக்குகள் மற்றும் முதலீட்டு காலம் போன்ற காரணிகளை ஒருவர் மதிப்பிட வேண்டும். இது பாதுகாப்பான ஓய்வூதியத்திற்காக மக்கள் தங்கள் கூடுதல் பணத்தை முதலீடு செய்ய உதவும்.

EPF, VPF மற்றும் NPS இன் நன்மைகளை ஒப்பிட்டு பார்க்கலாம்

Employee Provident Fund: ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் நன்மைகள் (EPF)

EPF என்பது மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றாகும். ஏனெனில் இது அமைப்புசார்ந்த இந்திய பணியாளர்களில் பெரும் பகுதியினருக்கு கட்டாயமான ஒரு திட்டமாக உள்ளது. ரூ.15,000 வரை அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி (DA) வரை சம்பாதிக்கும் ஊழியர்கள் EPF இல் பங்களிக்க வேண்டும். அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் இந்த சேமிப்புத் திட்டத்தில், ஒரு ஊழியர் மற்றும் அவரது நிறுவனம் என இரு தரப்பினரும் பணியாளரின் அடிப்படை சம்பளத்தில் 12% பங்களிக்க வேண்டும். இந்தப் பங்களிப்புகள் பல ஆண்டுகளுக்கு வட்டியைப் பெறுகின்றன. 

தற்போது EPF -இல் ஆண்டுக்கு 8.25% வட்டி கிடைக்கிறது. மருத்துவ அவசரநிலைகள் அல்லது திருமணம் போன்ற நிகழ்வுகளில் பகுதியளவு பணத்தைத் திரும்பப் பெறவும் EPF திட்டம் அனுமதிக்கிறது. எனவே, இது உறுதியான வருமானத்துடன் கூடிய நெகிழ்வான சேமிப்பு விருப்பமாக பார்க்கப்படுகின்றது. 

ஒரு வருடத்தில் EPF கணக்கில் செய்யப்படும் பங்களிப்புகள் பிரிவு 80C இன் கீழ் வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. ஊழியர் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாக EPF கணக்கில் தொடர்ந்து பங்களித்திருந்தால் மட்டுமே EPF -இலிருந்து எடுக்கப்படும் பணத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்பதை ஊழியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Voluntary Provident Fund: தன்னார்வ வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் (VPF) நன்மைகள்

EPF சேமிப்பில் கட்டாயமாக உள்ள 12% தவிர கூடுதலாக பங்களிக்க விரும்பும் சம்பளதாரர்கள் VPF ஐத் தேர்வுசெய்யலாம். இந்தத் திட்டம் ஊழியர்கள் தங்கள் PF கணக்கில் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 100% வரை கூடுதல் தொகையை பங்களிக்க அனுமதிக்கிறது. EPF திட்டத்திற்கு வழங்கப்படும் அதே வட்டி இதிலும் கிடைக்கிறது. இது ஒரு தன்னார்வத் திட்டம் என்பதால், இதில் நிறுவனங்கள் பங்களிப்புகளைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. 

பணியாளர் குறைந்தது ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியான சேவையை பங்களிப்புகளுடன் முடித்திருந்தால் VPF பங்களிப்புகள், வட்டி மற்றும் முதிர்வு வருமானங்களுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

National Pension System: தேசிய ஓய்வூதிய அமைப்பின் (NPS) நன்மைகள்

சந்தையுடன் இணைக்கப்பட்ட இந்த ஓய்வூதிய சேமிப்புத் திட்டமும் தன்னார்வ இயல்புடையது. NPS இல் குறைந்தபட்ச தேவையான பங்களிப்பு ஒரு நிதியாண்டுக்கு ரூ.1,000 ஆகும். NPS இல் பங்களிப்பு செய்யும் ஊழியர்கள் தங்கள் பங்களிப்புகளுக்கு வரிச் சலுகைகளைப் பெறுகிறார்கள். பிரிவு 80CCE இன் ரூ.1.5 லட்சம் வரம்பிற்குள் பிரிவு 80CCD(1) இன் கீழ் சம்பளத்தில் 10% (அடிப்படை + DA) வரை விலக்கு கோரலாம். கூடுதலாக, இந்த வரம்பைத் தாண்டி, பிரிவு 80CCD(1B) இன் கீழ் கூடுதலாக ரூ.50,000 விலக்கு பெறுகிறார்கள்.

பொதுவாக, இந்தத் திட்டம் ஆண்டுதோறும் 8-10% வருமானத்தை வழங்குகிறது. NPS திட்டம் 60 வயதில் ஓய்வு பெறும்போது கார்பஸ் நிதியில் 60% மொத்தத் தொகையாக திரும்பப் பெற அனுமதிக்கிறது. மீதமுள்ள 40% தொகையை வருடாந்திர கொடுப்பனவுகளாகவோ அல்லது ஓய்வூதியமாகவோ மாற்றலாம்.

மூன்று திட்டங்களும் பணி ஓய்வு ஆண்டுகளுக்கு நிதி பாதுகாப்பை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது உங்கள் நிதி நிலைமைகள் மற்றும் முதலீட்டு இலக்குகளைப் பொறுத்தது.

(பொறுப்பு துறப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல் முதலீட்டு ஆலோசனை அல்ல. இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த திட்டங்கள் குறித்த  சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.)

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: 2026 முதல் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.... யாருக்கு, எவ்வளவு? லெவல் வாரியான கணக்கீடு இதோ

மேலும் படிக்க | 3 மடங்கு அதிகரிக்கும் மாத ஓய்வூதியம்: PF உறுப்பினர்களுக்கு விரைவில் நல்ல செய்தி, முக்கிய அப்டேட்   

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News