Public Provident Fund: அனைவருக்கும் பணத்திற்க்கான தேவை உள்ளது. பணி ஓய்வு காலத்தில் இதற்கான தேவை இன்னும் அதிகமாகின்றது. பணி ஓய்வு காலத்திற்கான பல நல்ல சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. இவை பாதுகாப்பான, நல்ல வருமானத்தை அளிக்கின்றன. பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானத்தை ஈட்டுவதற்கான வழியை தேடும் நபர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மிகவும் பயனுள்ள ஒரு திட்டமாக உள்ளது.
பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், ஓய்வு பெற்ற பிறகு மாதத்திற்கு ரூ.60,000 வழக்கமான வருமானத்தை ஈட்ட முடியும். இதன் மூலம் ஓய்வு காலத்தில் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். பிபிஎஃப் மூலம் மாதம் ரூ.60,000 ஈட்டுவதற்கான வழியை இங்கே காணலாம்.
Public Provident Fund: பொது வருங்கால வைப்பு நிதி
PPF -இல் ஒரு வருடத்தில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். தற்போது, இந்தத் திட்டம் 7.1% வட்டியை வழங்குகிறது. இந்த வட்டி கூட்டுத்தொகை அடிப்படையில் அதிகரிக்கிறது. PPF இன் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். ஆனால் முதலீட்டாளர்கள் அதை இரண்டு முறை 5 ஆண்டுகள் கொண்ட தொகுதிகளாக நீட்டித்து முதலீடு செய்ய வேண்டும். அதாவது, முதலீட்டாளர்கள் 25 ஆண்டுகளுக்கு ரூ.1.5 லட்சத்தை அதில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்.
15 ஆண்டுகளில் ரூ.1 கோடி நிதி சேரும்
- PPF-இல் ஆண்டுதோறும் ரூ.1.5 லட்சத்தை 25 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும்போது, முதலீட்டாளர்களின் மொத்த முதலீடு ரூ.37,50,000 ஆக இருக்கும்.
- மேலும் 7.1 சதவீத விகிதத்தில் ரூ.65,58,015 வட்டி கிடைக்கும்.
- இந்த வழியில், உங்கள் PPF கணக்கில் மொத்தம் ரூ.1,03,08,015 இருக்கும்.
இதன் பிறகு என்ன செய்ய வேண்டும்? அதிக வருமானத்தை ஈட்ட, 25 ஆண்டுகளுக்குப் பிறகும், முதலீட்டாளர்கள் இந்தப் பணத்தை கணக்கிலிருந்து எடுக்காமல் இருக்க வேண்டும். அப்படி செய்தால், முதலீட்டாளரின் PPF கணக்கில் எவ்வளவு தொகை டெபாசிட் செய்யப்பட்டாலும், PPF கணக்கீட்டின்படி வட்டி தொடர்ந்து கிடைக்கும். முதலீட்டாளர்கள், இந்தக் கணக்கிலிருந்து முழுத் தொகையையும் எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம் அல்லது வருடத்திற்கு ஒரு முறை எடுக்கலாம்.
ரூ.60,000 மாத வருமானம் பெறுவது எப்படி?
முதலீட்டாளர் முழுத்தொகையான ரூ.1,03,08,015 -ஐ கணக்கில் வைத்திருந்தால், 7.1% என்ற விகிதத்தில், ரூ.7,31,869 வட்டியாகப் பெறுவார். முதலீட்டாளர் ஒவ்வொரு ஆண்டும் வட்டித் தொகையை மட்டும் எடுக்கலாம். ரூ.7,31,869 ஐ 12 மாதங்களில் பிரித்தால், அது ரூ.60,989 ஆக இருக்கும். இந்த வழியில், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.60,989 என்ற நல்ல தொகையை பெறலாம். இது தவிர ரூ.1,03,08,015 நிதி உங்கள் கணக்கில் இருக்கும்.
PPF: கணக்கை நீட்டித்தால் இதை நினைவில் கொள்ளுங்கள்
- பிபிஎஃப் கணக்கை 5 ஆண்டுகள் பங்களிப்புடன் நீட்டிக்க, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லது தபால் நிலையத்திற்கு ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதிர்வு தேதியிலிருந்து 1 வருடம் நிறைவடைவதற்கு முன்பு இந்த விண்ணப்பத்தை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
- பிபிஎஃப் கணக்கில் (PPF Account) 25 ஆண்டுகளுக்கு பங்களிப்பைத் தொடர இதில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
மேலும் படிக்க | தனியார் துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்: ஓய்வூதிய உயர்வு... EPFO அதிரடி அப்டேட்
மேலும் படிக்க | EPFO 3.0... மாறும் விதிகள்... கூடும் வசதிகள்... அமைச்சர் கூறிய முக்கிய தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









