)
Senior Citizens Savings Scheme: பெரும்பாலான மூத்த குடிமக்கள் பணி ஓய்வுக்கு பிறகு வாழ்க்கை நடத்த ஓய்வூதியத்தை நம்பி இருக்கிறார்கள். ஆனால் அனைவருக்கும் ஓய்வூதியம் பெறுவதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு பணி ஓய்வுக்கு பிறகு உதவ பல சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்.
இது மூத்த குடிமக்களுக்கு ஒரு நம்பகமான மற்றும் பாதுகாப்பான திட்டமாக பார்க்கப்படுகின்றது. இந்தத் திட்டத்தின் மூலம், மூத்த குடிமக்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.20,000 வழக்கமான வருமானத்தை ஈட்ட முடியும், தபால் நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மூலம் கிடைக்கும் இந்த அரசுத் திட்டம், நிலையான வட்டி விகிதத்தில் உங்களுக்கு வழக்கமான வருமானத்தை அளிக்கிறது. இதன் மூலம் ஓய்வூதியத்திற்குப் பிறகும் நிதி நிலைத்தன்மையை நீடிக்கிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் ஒரே கணக்கு மூலம் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தக் கணக்கில் சேர குறைந்தபட்சம் ரூ.1000 டெபாசிட் செய்வது அவசியமாகும். தொகை ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், பணத்தை ரொக்கமாக டெபாசிட் செய்யலாம். வைப்புத் தொகை ரூ.1 லட்சத்திற்கு மேல் இருக்கும்போது, முதலீட்டாளர் காசோலை மூலம் பணம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், ஒரே வீட்டில் 2 வெவ்வேறு கணக்குகள் இருந்தால், இரண்டிலும் அதிகபட்ச வைப்புத்தொகை ரூ.60 லட்சமாக இருக்கலாம்.
- 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்.
- 55 முதல் 60 வயதுக்குட்பட்ட, பணி ஓய்வு பெற்ற, VRS அல்லது சிறப்பு VRS இன் கீழ் ஓய்வு பெற்றவர்கள்.
- பாதுகாப்புப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் (சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் தவிர) 50 வயதிலிருந்து சில நிபந்தனைகளுடன் கணக்கைத் திறக்கலாம்.
இந்த கணக்கை தனியாகவோ அல்லது உங்கள் வாழ்க்கை துணையுடன் சேர்ந்து கூட்டாகவோ திறக்கலாம்.
வட்டி வைப்புத் தேதியிலிருந்து காலாண்டின் இறுதி வரை (மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30, டிசம்பர் 31) கணக்கிடப்பட்டு அடுத்த மாதத்தின் முதல் வேலை நாளில் (ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1, ஜனவரி 1) செலுத்தப்படுகின்றது.
கணக்கைத் தொடங்கிய 5 ஆண்டுகளுக்குப் பிறகு அதை மூடலாம்.
இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். எனினும், இந்தத் திட்டம் நிறைவடைவதற்கு முன்பு விண்ணப்பித்தால், மேலும் 3 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை நீட்டிக்கலாம். இந்தியாவில் வசிக்கும் மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ மொத்த முதலீடுகளைச் செய்யலாம். இதன் மூலம் வரிச் சலுகைகளுடன் வழக்கமான வருமானத்தையும் பெற முடியும்.
SCSS திட்டத்தில், தேவைப்பட்டால், சில நிபந்தனைகளின் கீழ் கணக்கை முன்கூட்டியே மூடவும் வசதி உள்ளது.
இந்தத் திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் என்பது தபால் நிலையத்தின் அதிக வட்டி செலுத்தும் சிறு சேமிப்புத் திட்டமாகும். தற்போது, இந்தத் திட்டத்தில் முதலீட்டிற்கு ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டி கிடைக்கிறது. இந்தியாவில் வசிக்கும் மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ மொத்தமாக முதலீடு செய்யலாம். இதன் மூலம் வரிச் சலுகையுடன் வழக்கமான வருமானத்தையும் பெறலாம். கணவன் மனைவி இருவரும் 2 தனித்தனி கணக்குகளையும் திறந்தால், இரட்டைப் பலன் கிடைக்கும்.
SCSS இல் ஆண்டுக்கு 8.2% நிலையான விகிதத்தில் பெறப்படும் வட்டி, முதலீட்டாளரின் கணக்கில் ஒவ்வொரு காலாண்டிலும் அதாவது ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் டெபாசிட் செய்யப்படும். 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இதில் முதலீடு செய்து 5 ஆண்டுகளுக்கு இந்த வட்டி விகிதத்தின் பலனைப் பெறலாம்.
முதலீடு செய்யப்பட்ட தொகையின் அடிப்படையில், இந்தத் திட்டம் 3 மாதங்களுக்கு ஒரு முறை அதிகபட்சமாக ரூ.61,500 வரை வட்டி வழங்குகிறது. இது சராசரியாக மாதந்தோறும் ரூ.20,500 ஆகும். கீழே உள்ள கணக்கீட்டிலிருந்து விவரங்களைப் புரிந்து கொள்ளுங்கள்
ரூ.20,000 மாத வருமானத்தின் கணக்கீட்டைப் புரிந்து கொள்ளுங்கள்
மூத்த குடிமகன் இந்தத் திட்டத்தில் சுமார் ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், 8.2% ஆண்டு வட்டி விகிதத்தில், அவருக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.60,150, அதாவது மாதந்தோறும் ரூ.20,000 வருமானம் கிடைக்கும்.
ஒற்றைக் கணக்கில் அதிகபட்ச வைப்புத்தொகை: ரூ.30 லட்சம்
வட்டி விகிதம்: ஆண்டுக்கு 8.2 சதவீதம்
முதிர்வு காலம்: 5 ஆண்டுகள்
காலாண்டு வட்டி: ரூ.60,150
மாத வட்டி: ரூ.20,050
5 ஆண்டுகளில் மொத்த வட்டி: ரூ.12,03,000
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் என்பது அரசாங்க ஓய்வூதிய சலுகைத் திட்டம் போன்றது. மூத்த குடிமக்கள் மட்டுமே இந்தக் கணக்கில் முதலீடு செய்ய முடியும். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) கணக்கில் டெபாசிட் செய்யும் நபர்களுக்கு, வைப்புத்தொகைக்கு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வட்டி கிடைக்கும். வட்டி காலாண்டு அடிப்படையில் செலுத்தப்படுகிறது.
இந்தத் திட்டம் இந்திய அரசாங்கத்தால் முழுமையாக ஆதரிக்கப்படுகிறது. ஆகையால், இதில் முதலீட்டுத் தொகை மற்றும் வட்டி இரண்டுக்கு உத்தரவாதமான பாதுகாப்பு கிடைக்கும். சந்தை ஏற்ற இறக்கங்களின் விளைவால் பாதிக்கப்படாமல், இது ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானத்தை உறுதி செய்கிறது.
60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராகவும், நிலையான ஓய்வூதியத்தை நாடுபவராகவும் இருந்தால், SCSS-ல் முதலீடு செய்து ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்தை உறுதி செய்யலாம். ஆபத்தைத் தவிர்த்து உறுதியான வருமானத்தை விரும்புவோருக்கு இது சிறந்த சேமிப்பு திட்டமாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ