)
Senior Citizens Savings Scheme: மனிதர்களின் வாழ்க்கைக்கு பணம் மிக அவசியம். அதுவும் முதுமையில் பணத்திற்கான தேவை இன்னும் அதிகமாகின்றது. பணி ஓய்வுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் இருந்தால், வாழ்க்கை மிகவும் நிம்மதியாக இருக்கும். பொதுவாக முதுமையில், பாதுகாப்பான முதலீடு மற்றும் உத்தரவாதமான வருமானத்தை வழங்கும் திட்டங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
- தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் பாதுகாப்பான வழியில் உத்தரவாதமான வருமானத்தை வழங்கும் திட்டங்களின் மிகவும் பிரபலமான ஒரு திட்டமாகும்.
- இது நல்ல வட்டி விகிதத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வரி சேமிப்பு மற்றும் வழக்கமான வருமானத்தையும் உறுதி செய்கிறது.
- ஓய்வுக்குப் பிறகு எந்த ஆபத்தும் இல்லாமல் தங்கள் சேமிப்பில் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்தை விரும்பும் மூத்த குடிமக்களுக்காக இந்தத் திட்டம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- SCSS என்பது ஒரு பாதுகாப்பான சேமிப்புத் திட்டமாகும்.
- இதில் தற்போது 8.2% வருடாந்திர வட்டி வழங்கப்படுகிறது.
- இது பல வங்கிகளின் நிலையான வைப்புத்தொகையை விட அதிகம்.
- முதலீட்டாளர்கள் இதில் குறைந்தபட்சமாக ரூ.1,000 -ஐ முதலீடு செய்யலாம்.
- மேலும் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
- 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட எவரும் இந்தத் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யலாம்.
- ஒரு அரசு ஊழியர் 55 முதல் 60 வயதுக்குள் தன்னார்வ ஓய்வு பெற்றிருந்தால், அவருக்கும் இதில் சேர தகுதி கிடைக்கும்.
- ஓய்வு பெற்ற பாதுகாப்புப் பணியாளர்கள் 50 முதல் 60 வயது வரை முதலீடு செய்யலாம்.
- உங்கள் மனைவி/கணவருடன் கூட்டுக் கணக்கையும் திறக்கலாம்.
- ஒருவர் இந்தத் திட்டத்தில் மொத்தமாக ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், அவருக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.2.46 லட்சம் வட்டி கிடைக்கும்.
- இந்தப் பணம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கணக்கில் வந்து சேரும்.
- அதாவது, மாதத்திற்கு சுமார் ரூ.20,500 வழக்கமான வருமானத்திற்கு உத்தரவாதம் கிடைக்கும்.
- ஒருவர் இந்த திட்டத்தில் ரூ.20 லட்சம் முதலீடு செய்தால், ஐந்து ஆண்டுகளில் வட்டி உட்பட மொத்த வருமானம் சுமார் ரூ.28.2 லட்சமாக இருக்கும்.
- இந்தக் காலகட்டத்தில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுமார் ரூ.41,000, அதாவது ரூ.13,666 வருமானம் பெறலாம்.
SCSS மூலம், பிரிவு 80C இன் கீழ் ஆண்டுதோறும் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்.
- இந்தத் திட்டம் 5 ஆண்டுகளுக்குரியது. இதை 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம்.
- ஒரு வருடத்திற்கு முன் கணக்கை மூடினால், வட்டி எதுவும் வழங்கப்படாது.
- 2 முதல் 5 ஆண்டுகளுக்குள் கணக்கை மூடினால், 1% வட்டி கழிக்கப்படும்.
SCSS திட்ட நன்மைகள் சுருக்கமாக....
- SCSS திட்டத்தில் அரசாங்க உத்தரவாதம் கிடைக்கிறது.
- இதில் நல்ல வட்டி விகிதம், வரி சேமிப்பு மற்றும் நிலையான வருமானம் ஆகிய நன்மைகள் கிடைக்கின்றன.
- இவை அனைத்தும் SCSS ஐ ஓய்வு பெற்றவர்களுக்கு நம்பகமான மற்றும் லாபகரமான ஒப்பந்தமாக ஆக்குகின்றன.
- ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானத்தை பெற விரும்பும் நபர்களுக்கு SCSS நல்ல சிறந்த வழியாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ