இவைதான் மிகச்சிறந்த சிறு சேமிப்புத் திட்டங்கள்: SSY, RD, POMIS, PPF..... தபால் நிலையமே பகிர்ந்த ரகசியம்

Small Saving Schemes: சிறிய முதலீட்டாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக மட்டுமல்லாமல், வரியைச் சேமிக்கவும் வாய்ப்பளிக்கும் அஞ்சல் அலுவலகத்தின் மிகவும் பிரபலமான 4 திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 13, 2025, 01:00 PM IST
  • சுகன்யா சம்ரிதி யோஜனா பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு சிறந்த முதலீட்டு தேர்வாகும்.
  • இதில் தற்போது 8.2% ஆண்டு வட்டி கிடைக்கிறது.
  • பெண் குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் 0 முதல் 10 வயது வரையிலான தங்கள் மகளின் பெயரில் இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு கணக்கைத் திறக்கலாம்.
இவைதான் மிகச்சிறந்த சிறு சேமிப்புத் திட்டங்கள்: SSY, RD, POMIS, PPF..... தபால் நிலையமே பகிர்ந்த ரகசியம்

Best Small Saving Schemes: பாதுகாப்பான திட்டங்களில் பணத்தை எந்த ஆபத்தும் இல்லாமல் முதலீடு செய்து, அதன் மூலம் நல்ல வருமானத்தைப் பெற விரும்பினால், அஞ்சல் அலுவலகத்தின் சிறு சேமிப்புத் திட்டங்கள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்தத் திட்டங்கள் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுகின்றன. மேலும் அவற்றின் வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் புதுப்பிக்கப்படுகின்றன. இந்த திட்டங்களின் தற்போதைய சிறப்பு என்னவென்றால், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிற்கு அதாவது ஜூலை-செப்டம்பர் 2025 காலாண்டிற்கான அஞ்சல் அலுவலகத் திட்டங்களின் வட்டி விகிதங்களை அரசாங்கம் மாற்றாமல் அப்படியே வைத்துள்ளது. 

Add Zee News as a Preferred Source

Post Office: அஞ்சல் அலுவலகம் பகிர்ந்த வீடியோ

மிகச்சிறந்த சிறுசேமிப்பு திட்டங்களான தொடர் வைப்புத்தொகை (Recurring Deposit), மாதாந்திர வருமானத் திட்டம் (Monthly Income Scheme), பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund) மற்றும் சுகன்யா சம்ரிதி யோஜனா என்று அழைக்கப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் (Sukanya Samriddhi Yojana) ஆகிய 4 முக்கிய திட்டங்கள் குறித்து அஞ்சல் அலுவலகம் X இல் ஒரு சிறிய வீடியோவைப் பகிர்ந்துள்ளது.

இந்த பதிவின் மூலம், அஞ்சல் அலுவலகம் இந்த நான்கு திட்டங்களையும் சிறந்த முதலீட்டு விருப்பங்கள் என்று விவரித்துள்ளது. மேலும், முதலீட்டாளர்கள் இந்தத் திட்டங்களைப் புறக்கணிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சிறிய முதலீட்டாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக மட்டுமல்லாமல், வரியைச் சேமிக்கவும் வாய்ப்பளிக்கும் அஞ்சல் அலுவலகத்தின் மிகவும் பிரபலமான 4 திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகை (RD)

தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகை (PORD) திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு ஜூலை-செப்டம்பர் 2025 இல் 6.7% ஆண்டு வட்டி கிடைக்கிறது. இது காலாண்டு அடிப்படையில் கூட்டு செய்யப்படுகிறது. திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். மேலும் இதில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ.100 முதலீடு செய்யலாம். ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையைச் சேமித்து பாதுகாப்பான முதலீடுகளைச் செய்ய விரும்புவோருக்கு இந்தத் திட்டம் சிறந்ததாக கருதப்படுகின்றது. இந்தக் கணக்கைத் தனியாகவோ அல்லது கூட்டாகவோ திறக்கலாம். மேலும் சில நிபந்தனைகளுடன் அந்த கணக்கை முன்கூட்டியே மூடும் வசதியும் உள்ளது.

வட்டி விகிதம்: ஆண்டுக்கு 6.7% (நடப்பு காலாண்டிற்கு)
முதலீட்டு காலம்: 5 ஆண்டுகள்
தொகை: குறைந்தபட்சம் ரூ.100 மாதந்தோறும்
நன்மை: வழக்கமான சிறு சேமிப்பாளர்களுக்கு ஏற்றது, வட்டி காலாண்டு கூட்டு அடிப்படையில் செலுத்தப்படுகிறது.
வரிச் சலுகைகள்: வட்டிக்கு வரி விதிக்கப்படும், ஆனால் முதலீட்டில் எந்த விலக்கும் இல்லை.

மாதாந்திர வருமானத் திட்டம் (MIS)

ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற விரும்புவோருக்கு, குறிப்பாக ஓய்வு பெற்ற அல்லது மூத்த குடிமக்களுக்கு, அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) ஒரு சிறந்த வழி. இதில் முதலீடு செய்பவர்களுக்கு 7.4% வருடாந்திர வட்டி கிடைக்கிறது. இந்த வட்டித் தொகை மாதா மாதம் முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகின்றது. இந்தத் திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். முதலீட்டாளர்கள் தனிநபர் கணக்கில் ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் வரையிலும் (கணவன் அல்லது மனைவி இருவரும்) முதலீடு செய்யலாம்.

வட்டி விகிதம்: ஆண்டுக்கு 7.4%
முதலீட்டு காலம்: 5 ஆண்டுகள்
தொகை: அதிகபட்சம் ரூ.9 லட்சம் (தனிநபர்), ரூ.15 லட்சம் (கூட்டு)
பயன்:  ஒவ்வொரு மாதமும் வட்டி வடிவில் வருமானம் கிடைக்கும். ஓய்வு பெற்ற அல்லது மூத்த குடிமக்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வரிச் சலுகைகள்: வட்டிக்கு வரி செலுத்த வேண்டும், கூடுதல் வரி விலக்கு இல்லை.

பொது வருங்கால வைப்பு நிதி (PPF)

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) ஒரு பிரபலமான நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும். இது வரி திட்டமிடலுடன் பாதுகாப்பான வருமானத்தை விரும்புவோருக்கு ஏற்றதாக கருதப்படுகின்றது. இந்த திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு 7.1% வருடாந்திர வட்டி கிடைக்கும். இது காலாண்டு கூட்டு அடிப்படையில் சேர்க்கப்படுகிறது. முதலீட்டு காலம் 15 ஆண்டுகள். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.500 மற்றும் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் ஆண்டுதோறும் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டம் EEE பிரிவின் கீழ் வருகிறது, அதாவது முதலீடு, வட்டி மற்றும் முதிர்வுத் தொகை - மூன்றுக்கும் வரி விலக்கு அளிக்கப்படுகின்றது. இந்த திட்டத்தில் பகுதி திரும்பப் பெறுதல் மற்றும் கடன் வழங்கும் வசதியும் கிடைக்கின்றது.

வட்டி விகிதம்: ஆண்டுக்கு 7.1% (ஆண்டு கூட்டுத்தொகை)
முதலீட்டு காலம்: 15 ஆண்டுகள்
தொகை: ஆண்டுக்கு ரூ.500 முதல் ரூ.1.5 லட்சம் வரை
பயன்: நீண்ட கால சேமிப்பு மற்றும் வரி சேமிப்புக்கு சிறந்தது.
வரிச் சலுகைகள்: EEE பிரிவின் கீழ் வருகிறது (முதலீடு, வட்டி மற்றும் முதிர்வுத் தொகை - மூன்றுக்கும் வரி விலக்கு).

சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY)

சுகன்யா சம்ரிதி யோஜனா பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு சிறந்த முதலீட்டு தேர்வாகும். இதில் தற்போது 8.2% ஆண்டு வட்டி கிடைக்கிறது (இது காலாண்டு அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது). பெண் குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் 0 முதல் 10 வயது வரையிலான தங்கள் மகளின் பெயரில் இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு கணக்கைத் திறக்கலாம். இதன் முதிர்வு காலம் மகளுக்கு 21 வயது ஆகும் வரை அல்லது திருமணம் ஆகும் வரை ஆகும். இதில், ஆண்டுதோறும் ரூ.250 முதல் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இது மட்டுமின்றி, இந்த திட்டம் EEE வரி வகையின் கீழ் வருகிறது, அதாவது, முதலீடு, வட்டி மற்றும் முதிர்வு தொகை அனைத்துக்கும் வரி விலக்கு அளிக்கப்படும்.

வட்டி விகிதம்: ஆண்டுக்கு 8.2% (அனைத்து திட்டங்களிலும் அதிகபட்சம்)
முதலீட்டு காலம்: 21 ஆண்டுகள் அல்லது மகளின் திருமணம் வரை (முன்னர் திரும்பப் பெற முடியும்)
தொகை: ரூ.250 முதல் ரூ.1.5 லட்சம் வரை
பயன்: பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான சிறந்த திட்டம், அரசாங்க உத்தரவாதத்துடன் அதிக வட்டி விகிதம்.
வரிச் சலுகை: முற்றிலும் வரி விலக்கு (EEE).

இந்தத் திட்டம் அதிக வட்டி விகிதம் மற்றும் வரி விலக்கு காரணமாக பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம் போன்ற பெரிய செலவுகளுக்கு மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.

மேலும் படிக்க | PM Kisan 20வது தவணை இந்த நாளில் வருகிறது: ஆனால், இதை செய்யவில்லை என்றால் பணம் வராது

மேலும் படிக்க | பென்ஷன் கவலையை போக்கும் NPS... வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.80,000 ஓய்வூதியம் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News