EPFO EDLI Scheme: உறுப்பினர்களுக்கு பெரிய அப்டேட்.... 3 முக்கிய விதிகளில் மாற்றம்!!

EPFO Update: இபிஎஃப்ஓ இடிஎல்ஐ திட்டங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன? இவற்றால் ஊழியர்கள் எவ்வாறு பயனடைவார்கள்?

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 11, 2025, 11:25 AM IST
  • இடிஎல்ஐ திட்டம் என்றால் என்ன?
  • புதிய விதி என்ன?
  • குடும்ப உறுப்பினர்களுக்கு முழுப் பலனும் எப்படி கிடைக்கும்?
EPFO EDLI Scheme: உறுப்பினர்களுக்கு பெரிய அப்டேட்.... 3 முக்கிய விதிகளில் மாற்றம்!!

EPFO EDLI Scheme: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. ​​ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), ஊழியர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டு (EDLI) திட்டத்தில் 3 முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. இது பிஎஃப் செயல்முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும். இபிஎஃப் உறுப்பினர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

Employees Deposit Linked Insurance Scheme

இந்த மாற்றங்கள், EPF உறுப்பினரின் திடீர் மறைவு ஏற்பட்டால் நிதிப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு  ஒரு நிவாரணமாக இருக்கும். EPFO-வின் 237வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவுகள் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு பயனளிக்கும். இறப்பு கோரிக்கை செயல்முறையை எளிதாக்குவதற்கும் கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்கும் இந்த நடவடிக்கைகள் குறிப்பாக எடுக்கப்பட்டுள்ளன. இபிஎஃப்ஓ இடிஎல்ஐ திட்டங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன? இவற்றால் ஊழியர்கள் எவ்வாறு பயனடைவார்கள்? இந்த விவரங்களை இங்கே காணலாம்.

1. ஒரு வருட சேவைக்கு முன்பே EDLI சலுகைகள் கிடைக்கும்

முன்னர், ஒரு EPF உறுப்பினர் பணியில் சேர்ந்து ஒரு வருடத்திற்கு முன்னரே பணியின் போது இறந்தால், அந்தக் குடும்பத்திற்கு EDLI இறப்புப் பலன் கிடைக்காது என்ற நிலை இருந்தது. இப்போது இந்த விதி மாற்றப்பட்டுள்ளது.

புதிய விதி என்ன?

ஒரு EPF உறுப்பினர் ஒரு வருடத்திற்கும் குறைவான சேவைக் காலத்திற்குள் இறந்தாலும், அவரது குடும்பத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 50,000 காப்பீட்டுப் பலன் கிடைக்கும்.

பலன்

இதன் மூலம் ஆண்டுதோறும் 5,000 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைவார்கள்.

2. பங்களிப்பு இல்லாத காலத்திற்குப் பிறகும் நன்மைகள் கிடைக்கும்

முன்னர், ஒரு EPF உறுப்பினர் சிறிது காலத்திற்கு EPF-க்கு பங்களிப்பு செய்யாமல் இருந்து பின்னர் இறந்துவிட்டால், அந்தக் குடும்பத்திற்கு EDLI சலுகை கிடைக்காது. இப்போது அது மாற்றப்பட்டுள்ளது.

புதிய விதி

கடைசியாக பங்களிப்பு செய்த தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் EPF உறுப்பினர் இறந்துவிட்டால், அவரது பெயர் நிறுவனத்தின் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்றால், அந்தக் குடும்பம் EDLI இறப்புப் பலனைப் பெறும்.

பலன்

இந்த மாற்றத்தால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 14,000 குடும்பங்கள் பயனடைவார்கள்.

3. வேலை மாறும்போது பணிக்கால இடைவெளியிலும் பலன் கிடைக்கும்

முன்னர், ஒரு இபிஎஃப் உறுப்பினர் (EPF Member) வேலை மாறும்போது 1-2 நாட்கள் இடைவெளி எடுத்தால், அது சேவை காலத்தில் ஒரு இடைவேளையாகக் கருதப்பட்டது. இதன் காரணமாக, அந்தக் குடும்பத்திற்கு குறைந்தபட்ச EDLI சலுகை (Minimum EDLI benefit) (ரூ.2.5 லட்சம்) மற்றும் அதிகபட்ச இறப்பு சலுகை (Maximum death benefit) (ரூ.7 லட்சம்) கிடைக்காத நிலை இருந்தது. 

புதிய விதி

இப்போது இரண்டு வேலைகளுக்கு இடையே இரண்டு மாத இடைவெளி இருந்தாலும், அது தொடர்ச்சியான சேவையாகக் கருதப்படும்.

பலன்

ஒவ்வொரு ஆண்டும் 1,000 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதன் மூலம் நேரடிப் பயனடைவார்கள்.

EDLI Scheme: இடிஎல்ஐ திட்டம் என்றால் என்ன? 

EPFO -வின் EDLI திட்டம் 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு (EPF Subscribers) ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை வழங்குகிறது. ஒரு ஊழியர் பணியின் போது இறந்தால், அவரது குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் வரை சலுகைகள் கிடைக்கும்.

குடும்ப உறுப்பினர்களுக்கு முழுப் பலனும் எப்படி கிடைக்கும்?

- உறுப்பினர்கள் எப்போதும் இபிஎஃப் நாமினி விவரங்களை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.

- வேலை மாறும்போது, ​​தொடர்ச்சியான சேவையை உறுதிசெய்ய உறுப்பினர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கை (EPF Account) மாற்றிக்கொள்ள வேண்டும்.

- EPFO தொடர்பான அனைத்து மாற்றங்கள் மற்றும் புதுப்பித்தல்கள் பற்றிய தகவல்களை தெரிந்துவைத்திருப்பது மிக அவசியமாகும்.

EPF Interest Rate: இபிஎஃப் வட்டி விகிதம்

2024-25 நிதியாண்டுக்கான EPFO ​​வட்டி விகிதமும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு இபிஎஃப் இருப்புக்கு 8.25% வட்டி கிடைக்கும். இந்த ஆண்டு இதில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் அப்படியே தொடரபட்டுள்ளது.

மேலும் படிக்க | SIP Mutual Fund: கோடீஸ்வர கனவை நனவாக்க... மாதம் ரூ.3000 முதலீடு போதும்... எளிய கணக்கீடு இதோ

மேலும் படிக்க | மத்திய அரசின் பரிசு, இனி 60 வயதுக்கு மேல் அனைவருக்கும் பென்ஷன்: புதிய ஓய்வூதியத் திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News