மாதம் ரூ.5,000 பென்ஷன்.. அதுவும் 7 நாளில்; இந்த திட்டத்தில் சேர்வது எப்படி?

Atal Pension Yojana: ஓய்வு பெற்றப் பிறகும் நிலையான வருமானத்தைப் பெற விரும்பினால், அடல் ஓய்வூதியத் திட்டம் உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். இந்த திட்டத்தில் எப்படி சேர்வது, எவ்வளவு பென்ஷன் கிடைக்கும் என்கிற முழுமையான தகவலை இங்கே பெறுங்கள். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 9, 2025, 12:21 PM IST
  • அடல் ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன?
  • ரூ.5,000 ஓய்வூதியத்தைப் பெறலாம்.
  • ஒவ்வொரு மாதமும் ரூ.210 மட்டுமே செலுத்த வேண்டிருக்கும்.
மாதம் ரூ.5,000 பென்ஷன்.. அதுவும் 7 நாளில்; இந்த திட்டத்தில் சேர்வது எப்படி?

Atal Pension Yojana: ஓய்வு பெற்றப் பிறகும் நிலையான வருமானத்தைப் பெற விரும்பினால், அடல் ஓய்வூதியத் திட்டம் உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். இந்த திட்டத்தில் எப்படி சேர்வது, எவ்வளவு பென்ஷன் கிடைக்கும் என்கிற முழுமையான தகவலை இங்கே பெறுங்கள்.

Add Zee News as a Preferred Source

ரிடயர்மென்ட் காலத்தில் பிறகு மாதா மாதம் பென்ஷன் பெற விரும்பினால் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அடல் ஓய்வூதியத் திட்டம் இந்திய அரசாங்கத்தால் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் மக்களுக்காக கொண்டு வரப்பட்ட ஒரு சமூக பாதுகாப்புத் திட்டமாகும். நீங்கள் ஒரு நாளைக்கு ரூ.7 சேமித்தால் ஓய்வு பெற்றப் பிறகு ரூ.5,000 ஓய்வூதியத்தைப் பெறலாம். ஏனெனில் இந்த திட்டத்தில் முக்கிய நோக்கம் என்னவென்றால் அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்கள் வயதான காலத்தில் ஒரு நிலையான வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்வதே ஆகும்.

அதுமட்டுமின்றி இந்தத் திட்டத்தின் முக்கிய நன்மைகளில் ஒன்று, மிகக் குறைந்த முதலீட்டில் நீங்கள் தொடங்கலாம். உதாரணமாக, உங்களின் வயது 18 என்றால் இந்தத் திட்டத்தில் சேர்வதன் மூலம், ஒவ்வொரு மாதமும் ரூ.210 மட்டுமே செலுத்த வேண்டிருக்கும். இதற்கு ஈடாக, நிற்றங்கள் உங்களின் 60 வயதை எட்டியவுடன், ரூ.5,000 மாத ஓய்வூதியமாக பெறுவீர்கள். அதேசமயம் 32 வயதில் இந்தத் திட்டத்தில் சேர்ந்தால், மாதாந்திர பங்களிப்பு ரூ.689 ஆக இருக்கும்.

அடல் ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன?

அடல் ஓய்வூதியத் திட்டம் (APY) 2015-16 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படுகிறது. இந்தத் திட்டம் 60 வயதிற்குப் பிறகு அரசாங்க உத்தரவாதத்துடன் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரையிலான மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்குவதை உறுதி செய்கிறது.

கூடுதலாக, அரசாங்கம் இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1,000 அல்லது உங்கள் மொத்த வைப்புத்தொகையில் 50%, எது குறைவாக இருக்கிறதோ அதை பங்களிப்பதன் மூலம் ஒரு பங்கை வகிக்கிறது. இருப்பினும், இந்த நன்மை வரி செலுத்தாத மற்றும் வேறு எந்த சமூக பாதுகாப்பு திட்டத்திலும் சேராத நபர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

அடல் ஓய்வூதிய திட்டத்தில் யார் விண்ணப்பிக்கலாம்?

18 வயது முதல் 40 வயது வரை உள்ள இந்தியக் குடிமக்கள், வருமான வரி செலுத்துபவராக (Income Tax Payer) இல்லாவிட்டால், இத்திட்டத்தில் சேரலாம். (அக்டோபர் 1, 2022 முதல், வருமான வரி செலுத்துபவர்கள் இந்தத் திட்டத்தில் சேர தகுதியற்றவர்கள்). சந்தாதாரர்கள் 60 வயதை அடைந்த பிறகு, அவர்களின் மாதாந்திர பங்களிப்பைப் பொறுத்து, மாதம் ஒன்றுக்கு ₹1,000, ₹2,000, ₹3,000, ₹4,000, அல்லது ₹5,000 என உத்தரவாத ஓய்வூதியம் பெறுவார்கள். ஓய்வூதியம் பெற, குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தில் பங்களிப்பது கட்டாயமாகும்.

நீங்கள் மாதாந்திர/காலாண்டு/அரையாண்டு பங்களிப்புத் தொகையை சரியான தேதியில் செலுத்தத் தவறினால், அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் நீங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

மேலும் படிக்க | Jackpot! லட்சங்களை அள்ளித் தரும் 20 ரூபாய் நோட்டு உங்க கிட்ட இருக்கா!

மேலும் படிக்க | டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்பவரா நீங்கள்...? முக்கிய எச்சரிக்கை - கவனம் மக்களே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News