)
9K Gold: தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக, இந்தியா மீது அமெரிக்கா அதிக வரிகளை விதித்ததன் மூலம் தங்கக்கட்டிகளின் விலையும் உயர்ந்திருக்கிறது. இதனாலும் தங்கத்தின் விலை அதிகமாகி, வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனும் மந்தமடைந்துள்ளது.
உலகில் அதிக தங்கத்தை வாங்கும் நாடு என்றால் இந்தியாதான். அப்படியிருக்க, கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் இந்தியாவின் தங்க விற்பனையில் 60% சரிவு ஏற்பட்டுள்ளதன் மூலம் இந்த பிரச்னையின் தீவிரத்தை புரிந்துகொள்ள முடியும்
எனவே, பொதுமக்களை தங்கம் வாங்குவதில் ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு ஹால்மார்க் தரநிலைகளில் 9 காரட் தங்கத்திற்கு கடந்த மாதம் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது. இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) ஹால்மார்க்கிங் அமைப்பின் 9 கேரட் தங்கமும் சேர்க்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அதிகாரப்பூர்வமாக ஹால்மார்க் தூய்மைகளில் 14K, 18K, 20K, 22K, 23K, 24K உள்ளிட்டவை உடன் தற்போது 9K சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கமாக பலரும் முதலீடு செய்யும் 24K தூய்மையான தங்கத்திற்கும், இப்போது சேர்க்கப்பட்டுள்ள 9 காரட் தங்கத்திற்கும் என்ன வித்தியாசம் என்பதை இங்கு காணலாம்.
24 காரட் தங்கம் என்பது 99.9 தூய்மையான தங்கம் ஆகும், அதாவது அதில் வேறு உலோகங்கள் இருக்காது. அதேநேரத்தில், 9 காரட் தங்கம் என்பது 37.5% மட்டும் தூய்மையான தங்கம் இருக்கும். மொத்த 24 பங்கில் 9 பங்கு மட்டுமே தங்கம் என்பது பொருள். மீதம் உள்ள 62.5% என்பது செம்பு, வெள்ளி, துத்தநாகம் என அலாய் உலோகங்கள் மட்டுமே இருக்கும்.
24 காரட் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பலரும் அதில் முதலீடு செய்வதை குறைத்துள்ளனர். அதேநேரத்தில், இளம் முதலீட்டாளர்கள் மற்றும் கிராமபுற வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பலரும் 9 காரட் தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பம் காட்டுகின்றனர். இதன் விலையும் குறைவு, இதை வடிவமைப்பதும் எளிதும். எனவே குறைவான பட்ஜெட்டுடன் தங்கம் வாங்க நினைப்பவர்கள் இதையே வாங்குகிறார்கள். மேலும், 9 காரட் தங்கம் விலை மலிவு என்பதால் திருடர்களும் கூட இதை திருடுவதை குறைத்துக்கொள்வார்கள். எனவே பாதுகாப்பான முதலீடாகவும் இது அமைகிறது.
தற்போது 24 காரட் தங்கம் ஒரு கிராம் சுமார் ரூ.10 ஆயிரம் அளவில் உள்ளது. அதாவது 10 கிராம் ரூ.1 லட்சம் அளவில் விற்பனையாகுகிறது. அதேநேரத்தில் 9 காரட் தங்கம் கிராம் ரூ.3,700 ஆகும். 10 கிராம் ரூ.37 ஆயிரம் ஆகும். அடுத்து தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வர இருப்பதால், சரியான சமயத்தில் இந்திய அரசு 9 காரட் தங்கத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் மத்தியில் நிலவும் தங்கத்தின் மீதான டிமாண்டை தாக்குபிடிக்க இது உதவும் என்றும் கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ