)
Central Government Health Scheme: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சுகாதார சேவைகளின் முதுகெலும்பாக இருக்கும் மத்திய அரசு சுகாதாரத் திட்டம் (CGHS) கடந்த பத்து ஆண்டுகளில் பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது. 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் காலம் (2016–2025) இப்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. இதற்கிடையில் அரசாங்கம் 2025 இல் CGHS -இல் பல முக்கியமான சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியுள்ளது.
8வது ஊதியக் குழுவை முறையாக அறிமுகப்படுத்துவது தாமதமாகி வருகிறது. 8வது ஊதியக்குழுவில் பல வித மாற்றங்கள் இருக்கும் என்பது நிச்சயம். குறிப்பாக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக்குழுவிற்கான புதிய பரிந்துரைகளை பற்றியும் இதில் சுகாதார வசதிகளில் ஏற்படக்கூடிய வசதிகளை பற்றி தெரிந்துகொள்வது பற்றியும் ஆவலாக உள்ளனர்.
CGHS பற்றிய இந்த கேள்வி பலரிடம் உள்ளது. 8வது ஊதியக்குழுவில், CGHS -க்கு பதிலாக காப்பீட்டு அடிப்படையிலான மற்றொரு திட்டம் கொண்டுவரப்படுமா என்ற கேள்வியும் உள்ளது. இதை பற்றி எதையும் அரசாங்கம் இன்னும் தெளிவாக கூறவில்லை என்றாலும், இது பற்றிய குறிப்புகள் பலமுறை வந்துள்ளன.
7வது ஊதியக்குழு காலத்தில் CGHS -இல் தொடர்ச்சியான டிஜிட்டல் மற்றும் கட்டமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.
CGHS Card அட்டைகளை வழங்குவதில் எளிமை: CGHS பங்களிப்புக்காக சம்பளம் கழிக்கப்படும் ஊழியர்களுக்கு இப்போது தானியங்கி முறையில் அட்டைகள் வழங்கப்படுகின்றன.
வார்டு ஒதுக்கீட்டில் மாற்றங்கள்: தனியார் மருத்துவமனைகளில் பொது, செமி-ப்ரைவேட் மற்றும் ப்ரைவேட் வார்டுகளுக்கான தகுதி ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது.
ABHA ஐடியுடன் இணைத்தல்: CGHS அட்டையை ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்குடன் (ABHA) இணைக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டன. இருப்பினும், அதை கட்டாயமாக்கும் முடிவு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.
எளிதான பரிந்துரை செயல்முறை: அரசு மருத்துவமனைகளில் பரிந்துரை இல்லாமல் சிகிச்சை வசதி, தனியார் மருத்துவமனைகளில் ஒரே பரிந்துரையில் மூன்று சிறப்பு மருத்துவர்களுடன் கலந்தாலோசித்தல் மற்றும் முதுமை வரம்பை 70 ஆண்டுகளாகக் மாற்றுதல் போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன.
இந்த சீர்திருத்தங்கள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சுகாதார சேவைகளுக்கான அணுகலை கணிசமாக எளிதாக்கின.
2025 இல், CGHS ஐ முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்கு மத்திய அரசு பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது.
ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் உபகரண ஒப்புதல்: இப்போது CPAP, BiPAP மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டி போன்ற சாதனங்களின் ஒப்புதலுக்கு டிஜிட்டல் செயல்முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
கட்டண முறையில் முன்னேற்றம்: பழைய முறை நிறுத்தப்பட்டு, ஒரு புதிய HMIS போர்டல் செயல்படுத்தப்பட்டது. இப்போது அனைத்து கட்டணங்களும் இந்த போர்டல் மூலம் செய்யப்படும்.
MyCGHS செயலி அறிமுகம்: அட்டை பரிமாற்றம், சார்புடையவர்களைச் சேர்ப்பது மற்றும் பிற அம்சங்கள் இப்போது மொபைல் செயலி மூலம் கிடைக்கின்றன.
புகைப்பட விதிகளில் தளர்வு: அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, சேர்க்கை மற்றும் வெளியேற்றத்தின் போது மட்டுமே புகைப்படங்கள் தேவைப்படும். கடுமையான நோய்கள் மற்றும் முதுமையில் இந்த செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
பிசியோதெரபி சேவைகளின் விரிவாக்கம்: இப்போது வீட்டிலேயே நோயாளிகளுக்கு பிசியோதெரபி சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காலக்கெடுவுக்குட்பட்ட ஒப்புதல்கள் மற்றும் எச்சரிக்கைகள்: மருத்துவ உபகரணங்களுக்கான அங்கீகாரத்தை இப்போது ஐந்து நாட்களுக்குள் பெற முடியும். மேலும் விண்ணப்பத்தின் நிலை பற்றிய தகவல்களும் SMS மற்றும் மின்னஞ்சல் மூலம் வழங்கப்படுகின்றன.
இந்த சீர்திருத்தங்கள் CGHS ஐ ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகவும் வெளிப்படையானதாகவும், வேகமானதாகவும், டிஜிட்டல் நட்பு செயல்முறையுடனும் மேம்டுத்தியுள்ளது.
8வது ஊதியக் குழு அறிவிக்கப்பட்டிருந்தாலும், குறிப்பு விதிமுறைகள் மற்றும் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நியமனம் இன்னும் நிலுவையில் உள்ளன. இந்த தாமதம் ஒரு பக்கம் இருக்க, 8வது ஊதியக்குழு குறித்த எதிர்பார்ப்புகள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இடையே அதிகரித்து வருகின்றன.
- சுகாதார சேவைகள் மிகவும் விரிவானதாகவும் நவீனமாகவும் இருக்கும் வகையில் CGHS -க்கு பதிலாக புதிய காப்பீட்டு அடிப்படையிலான திட்டத்தை (CGEPHIS) அறிமுகம் செய்வது குறித்து வலுவான விவாதம் நடந்து வருகிறது. 8வது ஊதியக்குழுவில் இது நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- புதிய திட்டம் செயல்படுத்தப்படும் வரை, சிகிச்சைக்கான அணுகலை எளிதாக்க CS(MA) மற்றும் ECHS மருத்துவமனைகளை CGHS இல் சேர்க்க வேண்டும் என்று ஊழியர்கள் கோருகின்றனர்.
- ஃபிட்மென்ட் ஃபாக்டரில் ஏற்படக்கூடிய அதிகரிப்பால் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் அதிகரிப்பது மட்டுமல்லாமல், சுகாதார பங்களிப்பும் அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், வசதிகளும் அதே விகிதத்தில் மேம்பட வேண்டும் என்று ஊழியர்கள் விரும்புகிறார்கள்.
8வது ஊதியக்குழுவில் CGHS மாற்றங்கள்.....
- கடந்த பத்து ஆண்டுகளில், 7வது ஊதியக்குழுவில், CGHS சுகாதார சேவைகளின் அணுகல் மற்றும் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
- 2025 இல் ஏற்பட்ட டிஜிட்டல் மாற்றங்கள் அதை இன்னும் நவீனமாக்கியுள்ளன.
- இப்போது அனைவரின் கவனமும் 8வது ஊதியக்குழுவின் மீது உள்ளது.
- இதில், ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் மட்டுமல்லாமல், சுகாதார சேவைகளின் நோக்கமும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ