)
SBI Credit Card: SBI வங்கி வாடிக்கையாளரா நீங்கள்? உங்களிடம் SBI கிரெடிட் கார்டு உள்ளதா? அப்படியென்றால், இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். செப்டம்பர் 16, 2025 முதல், பாலிசி புதுப்பிக்கும் போது, தற்போதுள்ள அனைத்து கிரெடிட் கார்டு பாதுகாப்புத் திட்டங்களும் (CPP) தானாகவே புதுப்பிக்கப்பட்ட திட்டங்களுக்கு மாற்றப்படும் என்று SBI கிரெடிட் கார்டு அறிவித்துள்ளது.
அனைத்து கிரெடிட் கார்டு பாதுகாப்புத் திட்டங்களிலும் (CPP) இந்த மாற்றம் அவர்களின் பாலிசி புதுப்பிக்கப்பட வேண்டிய தேதியிலிருந்து பொருந்தும். புதுப்பிப்பதற்கு குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்பே வாடிக்கையாளர்களுக்கு இந்த மாற்றம் குறித்து SMS மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என்று SBI கார்டு தெரிவித்துள்ளது.
SBI கார்டு வலைத்தளத்தில், 'செப்டம்பர் 16, 2025 முதல், அனைத்து CPP வாடிக்கையாளர்களும் தங்கள் பாலிசி புதுப்பிக்கப்பட்ட தேதியின்படி தானாகவே புதுப்பிக்கப்பட்ட திட்டங்களுக்கு மாற்றப்படுவார்கள்.' என தெரிவிக்கப்படுள்ளது. புதுப்பிக்கப்பட்ட CPP திட்டத்தின் கட்டணம் பழைய திட்டத்தை விட குறைவாக உள்ளது.
கார்டு பாதுகாப்புத் திட்டம் (CPP) என்பது பாதுகாப்பை வழங்கும் ஒரு பாதுகாப்பு சேவை நிறுவனமாகும். பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளரின் அட்டை தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ அது பாதுகாப்பை வழங்குவதாக SBI கார்டின் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. CPP மூலம், SBI கார்டு வாடிக்கையாளர் கார்டு தொலைந்து போனாலோ அல்லது திருட்டு போனாலோ பாதுகாப்பு, அவசரகாலத்தில் கார்டை முடக்கும் சேவை மற்றும் DL மற்றும் பாஸ்போர்ட் போன்ற முக்கியமான ஆவணங்கள் தொடர்பான உதவி ஆகியவற்றைப் பெறுகிறார்.
கார்டு பாதுகாப்புத் திட்டம் (CPP) வாடிக்கையாளரை அனைத்து வித மோசடி அல்லது ஏமாற்று வேலைகளிலிருந்து பாதுகாக்கிறது. இது PIN, ஃபிஷிங், டெலி-ஃபிஷிங் அல்லது OTP தேவையில்லாத பரிவர்த்தனைகள் தொடர்பான மோசடி உள்ளிட்ட ரூ.3 லட்சம் வரையிலான மோசடிகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது.
இந்த பாதுகாப்புத் திட்டங்கள் நான்கு வகைகளாக உள்ளன:
- கிளாசிக் லைட்,
- கிளாசிக் பிளஸ்,
- பிரீமியம் பிளஸ் மற்றும்
- பிளாட்டினம் பிளஸ்.
மேம்படுத்தப்பட்ட பிறகு, அவை கிளாசிக், பிரீமியம் மற்றும் பிளாட்டினமாக மாற்றப்பட்டுள்ளன.
- தற்போது, கிளாசிக் லைட்டுக்கு ரூ.1199 மற்றும் கிளாசிக் பிளஸுக்கு ரூ.1899 செலுத்த வேண்டும்.
- ஆனால் இப்போது இவை இரண்டும் கிளாசிக்காக மாற்றப்பட்டுள்ளன.
- இதற்கு ரூ.999 செலுத்த வேண்டும்.
- இதேபோல், முன்பு பிரீமியம் பிளஸுக்கு ரூ.2499 கட்டணம் இருந்தது, இது இப்போது பிரீமியத்தின் கீழ் ரூ.1499 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
- இது தவிர, பிளாட்டினம் பிளஸ்ஸுக்கு இருந்த ரூ.3199 கட்டணம் இப்போது பிளாட்டினத்தின் கீழ் ரூ.1999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
கட்டணத்தைச் செலுத்திய பிறகு, CPP வாடிக்கையாளருக்கு ஒரு வரவேற்பு கிட் அனுப்பப்படும் என்று SBI கார்டு தெரிவித்துள்ளது. அவர்களின் உறுப்பினர் எண் அதில் இருக்கும். அந்தக் கிட்டில் ஒரு பதிவு படிவம் இருக்கும், அதை வாடிக்கையாளர்கள் நிரப்பி CPP -க்கு திருப்பி அனுப்ப வேண்டும். வாடிக்கையாளர் விரும்பினால், அவர் தனது அட்டை மற்றும் ஆவணங்களைப் பதிவு செய்ய CPP இன் அழைப்பு மையத்தையும் அழைக்கலாம்.
SBI கார்டின் FAQ (அவ்வப்போது கேட்கப்படும் கேள்விகள்) -இன் படி, அட்டை தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ வாடிக்கையாளருக்கு அட்டை தொடர்பான பாதுகாப்பை வழங்கும் நாட்டின் முதல் நிறுவனம் CPP ஆகும். CPP இந்தியா CPP குழுமத்தின் துணை நிறுவனமாகும். அதன் தலைமையகம் UK இல் உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ