)
Major Changes from December 1 2025: இன்னும் 2 நாட்களில் டிசம்பர் மாதம் பிறக்கவுள்ளது. ஒவ்வொரு மாத துவக்கத்திலும் பல புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. மாத கடைசியில் பல காலக்கெடுக்கள் நிறைவடைகின்றன. அந்த வகையில், நவம்பர் 30 ஆம் தேதி சில முக்கியமான பணிகளை முடிப்பதற்கான காலக்கெடுவாகும். இது தவறினால் அபராதம் அல்லது நிதி இழப்புகள் ஏற்படக்கூடும். நவம்பர் 30 ஆம் தேதி எதெற்கெல்லாம் காலக்கெடு முடிவடையும்? டிசம்பர் முதல் ஏற்படவுள்ள முக்கிய மாற்றங்கள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு இது ஒரு முக்கியமான பணியாகும். ஓய்வூதுயதாரர்கள் தங்கள் மாதாந்திர ஓய்வூதியத்தைத் தொடர்ந்து பெறுவதற்கு நவம்பர் 30 ஆம் தேதிக்குள் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும். இது சரியான நேரத்தில் சமர்ப்பிக்கப்படாவிட்டால், ஓய்வூதியம் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் நிறுத்தப்படலாம். ஓய்வூதியதாரர்கள் அதை நேரிலோ அல்லது டிஜிட்டல் முறையிலோ சமர்ப்பிக்கலாம்.
மத்திய அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதிய அமைப்பிலிருந்து (NPS) புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மாற இதுவே கடைசி வாய்ப்பு. இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான காலக்கெடு நவம்பர் 30 ஆகும். டிசம்பர் 1 ஆம் தேதி முதல் இந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்காது என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
TDS அறிக்கைகள் (பிரிவு 194-IA, 194-IB, முதலியன) மற்றும் பரிமாற்ற விலை அறிக்கைகள் (பிரிவு 92E) போன்ற பல முக்கியமான வரி தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 30 ஆகும். அவ்வாறு செய்யத் தவறினால் அபராதம் விதிக்கப்படலாம்.
எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி வீட்டு உபயோக சிலிண்டர்கள் மற்றும் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலைகளை மாற்றியமைக்கின்றன. இந்த திருத்தங்கள் சர்வதேச சந்தை போக்குகளைப் பொறுத்து செய்யப்படுகின்றன. புதிய விலைகள் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்படும், இது உங்கள் சமையலறை பட்ஜெட்டை நேரடியாக பாதிக்கும்.
விமான டர்பைன் எரிபொருள் (ATF) விகிதங்களும் டிசம்பர் 1 ஆம் தேதி புதுப்பிக்கப்படும். ATF விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் விமானக் கட்டணங்களை பாதிக்கலாம்.
இந்த மாத தொடக்கத்தில் 8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டது, பரிந்துரை விதிமுறைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. டிசம்பர் மாதத்தில் இதில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பல எதிர்பார்க்கப்படுகின்றன. ToR -இல் கோரப்பட்ட மாற்றங்களுக்கும், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கோரியுள்ள மாற்றங்ளுக்கும் டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பதில்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த மாதம் அல்லது ஜனவரி மாதத்தில் இபிஎஃப் மத்திய அறங்காவலர் குழு கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் இபிஎஃப் ஊதிய உச்சவரம்பில் அதிகரிப்பு, இபிஎஸ் குறைந்தபட்ச ஓய்வூதிய உயர்வு ஆகியவை பற்றிய முக்கிய முடிவு எடுக்கப்படலாம். இந்த மாதம் இந்த கூட்டம் நடந்தால் டிசம்பரிலேயே இபிஎஃப் உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ