)
Big Changes From July 1 2025: இன்னும் சில நாட்களில் ஜூலை மாதம் பிறக்கவுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்தை போலவே ஜூலை 2025 -இலும் பல முக்கிய மாற்றங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இவை பொது மக்களின் அன்றாட பட்ஜெட்டையும் நிதி திட்டமிடலையும் பாதிக்கலாம். ஜூலை மாதத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன. இவற்றின் மூலம் பான் கார்டு, ஆதார், கிரெடிட் கார்டு, ரயில் டிக்கெட் முன்பதிவு போன்ற பல விதிகள் மாறக்கூடும். ஜூலை 1 முதல் நிகழவுள்ள 5 பெரிய மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
1. Pan Aadhaar: பான் கார்டுக்கு இனி ஆதார் தேவை
ஜூலை 1 முதலான புதிய விதிகளில் பான் தொடர்பான மாற்றங்களும் அடங்கும். இனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படும். இந்த விதி ஜூலை 1, 2025 முதல் மத்திய நேரடி வரி வாரியத்தால் (CBDT) செயல்படுத்தப்படும். உங்களிடம் ஏற்கனவே பான் மற்றும் ஆதார் இரண்டும் இருந்தால், அவற்றை ஒன்றாக இணைப்பதும் அவசியம். இதற்கு, டிசம்பர் 31, 2025 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிறகும், நீங்கள் இணைக்கவில்லை என்றால், உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது உங்கள் பான் கார்டு செல்லாததாகக் கருதப்படலாம்.
2 Tatkal Ticket: தத்கால் டிக்கெட் முன்பதிவுக்கான புதிய விதி
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் (IRCTC) படி, இனி தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு OTP அங்கீகாரம் தேவை. IRCTC-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது மொபைல் செயலியில் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு OTP தேவைப்படும். இது கணக்குடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணில் பெறப்படும்.
3. Credit Card: HDFC வங்கி கிரெடிட் கார்டு விதிகள்
கிரெடிட் கார்டு விதிகளை HDFC வங்கி மாற்றவுள்ளது. கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் ஒவ்வொரு மாதமும் கேமிங் செயலிகளில் ரூ.10,000 வரை செலவிட்டால், அதற்கு தனியாக 1 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். இதேபோல், பேடிஎம், ஃப்ரீசார்ஜ் போன்ற மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதற்கு 1 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும்.
4 ATM Charges: ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படும்
நீங்கள் ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளராக இருந்து ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் எடுத்தால், கட்டணம் செலுத்த வேண்டும். இப்போது ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் வேறு எந்த வங்கியின் ஏடிஎம்மிலிருந்தும் ஒரு மாதத்திற்கு மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு கூடுதல் நிதி பரிவர்த்தனைக்கும் ₹ 23 மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ₹ 8.50 வசூலிக்கப்படும்.
5 Utility Bills: பயன்பாட்டு பில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்
நீங்கள் HDFC கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், ஜூலை 1 முதல் பயன்பாட்டு பில் செலுத்துவதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் ரூ.50,000 மதிப்புள்ள பயன்பாட்டு பில்களுக்கு 1 சதவீதம் கட்டணம் விதிக்கப்படும். இந்த விதி எரிபொருள் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும். ரூ.15,000 மதிப்புள்ள எரிபொருள் பரிவர்த்தனைகளுக்கு 1 சதவீதம் கட்டணம் விதிக்கப்படும்.
6 LPG Cylinder Price: எல்பிஜி சிலிண்டர் விலை
மாத தொடக்கத்தில் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டரின் விலையை திருத்துகின்றன. பல முறை சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமலும் இருப்பதுண்டு. ஜூலை மாதத்தில் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றங்கள் இருக்கலாம் என கூறப்படுகின்றது.
7 EPFO: ஊழியர் வருங்கால வைப்பி நிதி அமைப்பு
ஜூன் மாதமே EPFO அதன் புதிய பதிப்பான EPFO 3.0 -ஐ தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி நடக்காவிட்டால், கண்டிப்பாக ஜூலை மாதம் இது அமலுக்கு வரும். இதன் மூலம், பணம் எடுப்பது, விவரங்களைக் கோருவது, க்ளெய்ம்கள் அல்லது புதுப்பித்தல் போன்ற PF தொடர்பான சேவைகள் முன்பை விட மிக எளிதாகிவிடும். இது அமலுக்கு வந்த பிறகு இபிஎஃப் உறுப்பினர்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பது போல EPF ATM அட்டையைப் பயன்படுத்தி PF கணக்கிலிருந்து நேரடியாக ATM -இலிருந்து பணத்தை எடுக்க முடியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ