EPF Withdrawal Rules: விரைவில் விதிகளில் மாற்றம்.... ATM, Phonepe, Paytm மூலம் பணம் எடுக்கலாம்

EPF Withdrawal Rules: இபிஎஃப் உறுப்பினர்கள் விரைவில் PhonePe, Paytm போன்ற UPI பரிவர்த்தனைகள் மூலமாகவோ அல்லது ATM மூலமாகவோ தங்கள் இபிஎஃப் தொகையை (EPF Amount) எடுக்கும் வசதி கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 28, 2025, 05:51 PM IST
  • இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அதிகரித்த வசதிகள்.
  • 7 நாட்களின் வேலை நிமிடங்களில் முடிந்துவிடும்
  • க்ளெய்ம்கள் எளிய முறையில் செட்டில் செய்யப்படும்.
EPF Withdrawal Rules: விரைவில் விதிகளில் மாற்றம்.... ATM, Phonepe, Paytm மூலம் பணம் எடுக்கலாம்

EPF Withdrawal Rules: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமீப காலங்களில் அதன் செயல்பாட்டில் பல வித மாற்றங்களை செய்துள்ளது. குறிப்பாக இபிஎஃப் கணக்கில் உள்ள தொகையை எடுக்கும் விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்ட்டுள்ளன. இதற்கான செயல்முறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. தற்போது, ​​ஊழியர்கள் தங்கள் PF கணக்கிலிருந்து பணத்தை எடுக்க நீண்ட செயல்முறையை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

Add Zee News as a Preferred Source

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அதிகரித்த வசதிகள்

இபிஎஃப் உறுப்பினர்கள் விரைவில் PhonePe, Paytm போன்ற UPI பரிவர்த்தனைகள் மூலமாகவோ அல்லது ATM மூலமாகவோ தங்கள் இபிஎஃப் தொகையை (EPF Amount) எடுக்கும் வசதி கிடைக்கும். இந்த வசதியை மிக விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

EPFO: தயார் நிலையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இந்தத் திட்டத்தின் முழு வரைபடத்தையும் தயாரித்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த வசதியை செயல்படுத்த இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்துடன் (NPCI) பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அனத்தும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடந்தால், இந்த வசதி அடுத்த 2-3 மாதங்களில் UPI தளத்தில் நேரலையில் வரலாம். EPFO ​​இன் சுமார் 7 கோடி உறுப்பினர்கள் இதன் பலனைப் பெறுவார்கள். 

EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு செயல்முறைகள் எளிதாகும்

UPI ஒருங்கிணைப்புக்குப் பிறகு, EPFO ​​உறுப்பினர்கள் தாங்கள் க்ளெய்ம் செய்யும் தொகையை நேரடியாக டிஜிட்டல் வாலட்டில் பெற முடியும். இதனால் பணம் எடுக்கும் செயல்முறை விரைவாகவும், எளிமையாகவும், எந்த வித பிரச்சனையும் இல்லாமலும் நடக்கும்.

7 நாட்களின் வேலை நிமிடங்களில் முடிந்துவிடும்

EPFO UPI வசதியைத் தொடங்கியதும், ஊழியர்களுக்கு பரிவர்த்தனை மிகவும் எளிதாகிவிடும். தற்போது, ​​பணம் இபிஎஃப் கணக்கை (EPF Account) அடைய நிறைய காத்திருக்க வேண்டியுள்ளது. பொதுவாக, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் PF -இல் இருந்து பணம் எடுக்கும் செயல்முறை சுமார் 7 நாட்களில் நிறைவடைகிறது. ஆனால், UPI ஒருங்கிணைப்பு வசதி செயல்படுத்தப்பட்ட பிறகு, அது சில மணிநேரங்கள் அல்லது நிமிடங்களில் நிறைவடைந்து பணம் மக்களின் கணக்கை சென்றடையும்.

EPF Claim Settlement: க்ளெய்ம்கள் எளிய முறையில் செட்டில் செய்யப்படும்

EPFO -வின் UPI வசதியின் மற்றொரு நன்மை என்னவென்றால், உரிமைகோரல்கள் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படும். மேலும் பரிவர்த்தனைகளில் அதிக வெளிப்படைத்தன்மை இருக்கும். இருப்பினும், இந்த வசதி குறித்து EPFO ​​இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. EPFO ​​இது குறித்து முறையான அறிவிப்பை வெளியிடும்போதுதான் இது பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைக்கும். 

EPF ATM Withdrawal: இபிஎஃப் ஏடிஎம் வித்ட்ராயல்

UPI தவிர, EPFO ​​ஒரு புதிய ATM வசதியையும் வழங்குகிறது. இதன் மூலம் EPFO ​​சந்தாதாரர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) தொகையை நேரடியாக ATM இல் இருந்து எடுக்க வழிவகை செய்யப்படும். EPFO ​​3.0 முயற்சி பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதையும் சேமிப்பை எளிதாக அணுக வழிவகை செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் காகிதம் அடிப்படையிலான ஆவண வேலைகளையும் இது குறைக்கிறது.

EPFO ATM Card எவ்வாறு செயல்படும்?

EPFO ஆல் தொடங்கப்பட்ட ஏடிஎம் கார்டு வசதி ஒரு டெபிட் கார்டு போலவே இருக்கும். இதன் மூலம் பணம் எடுக்க, உங்கள் UAN-ஐ இணைக்க வேண்டும். இதற்குப் பிறகு, நீங்கள் OTP-ஐ சரிபார்த்து பின்னர் பணத்தை எடுக்கலாம். இந்த வசதி மூலம், இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் முதலாளி / நிறுவனத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் தங்கள் PF தொகையை எடுக்க முடியும். அதாவது இப்போது PF பணத்தை எடுக்க முதலாளி / நிறுவனத்தின் அனுமதி உங்களுக்குத் தேவை இருக்காது.

மேலும் படிக்க | ஆயுஷ்மான் வய வந்தனா கார்டு: 70+ வயதினர் அனைவருக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை

மேலும் படிக்க | தொழிலாளியோ தொழிலதிபரோ, இனி 60 வயதுக்கு மேல் அனைவருக்கும் பென்ஷன்: அரசின் புதிய ஓய்வூதியத் திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News