New Rules from 1 April 2025: புதிய நிதியாண்டு நாளை முதல் தொடக்க உள்ளது, இதனிடையே பல முக்கிய விதிகள் மாறப் போகின்றன, இது உங்கள் பட்ஜெட்தாய் நேரடியாக பாதிக்கலாம். அதன்படி நாளை முதல் அதாவது ஏப்ரல் 1, 2025 முதல், வங்கி, ஜிஎஸ்டி, வருமான வரி மற்றும் டிஜிட்டல் பணம் செலுத்துதல் போன்ற பல மாற்றங்கள் ஏற்படயுள்ளது.
அத்தகைய சூழ்நிலையில், ஏப்ரல் 1, 2025 முதல் என்னென்ன மாற்றங்கள் நிகழப் போகிறது என்பதை காண்போம்.
யுபிஐ பரிவர்த்தனைகள்:
ஏப்ரல் 1 முதல், பயனர்கள் தங்கள் மொபைல் எண்களைப் புதுப்பிக்கவில்லை என்றால் வங்கிச் சேவைகளுக்கான அணுகலை இழக்க நேரிடும். அதன்படி தங்கள் மொபைல் எண்ணை மாற்றி, அதை தங்கள் வங்கியில் புதுப்பிக்காதவர்கள், தங்கள் வங்கிக்குத் தெரிவிக்காமல் தங்கள் எண்ணை செயலிழக்கச் செய்த பயனர்கள், பழைய எண்கள் வேறொருவருக்கு ஒதுக்கப்பட்ட UPI பயனர்கள் ஆகியவர்களுக்கு இது முக்கியமானது. அழைப்புகள், செய்திகள் அல்லது பிற சேவைகளுக்குப் பயன்படுத்தப்படாத செயலற்ற எண்களும் அகற்றப்படும்.
FD இல் அதிக நன்மை:
ஃபிக்சட் டெபாசிட் இல் முதலீடு செய்து வந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஏப்ரல் 1 முதல், வங்கிகள் FD, RD மற்றும் பிற சேமிப்புத் திட்டங்களில் ரூ.1 லட்சம் வரையிலான வட்டிக்கு TDS கழிக்கப்படாது. இந்த வரம்பு மூத்த குடிமக்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிலையான வைப்புத்தொகை வட்டி விகிதங்கள்:
SBI, HDFC வங்கி, இந்தியன் வங்கி, IDBI வங்கி மற்றும் பஞ்சாப் & சிந்து வங்கி உள்ளிட்ட பல வங்கிகள் தங்கள் FD வட்டி விகிதங்களை திருத்தி வருகின்றன. அதிக வருமானம் தரும் சிறப்பு FD கால அவகாசங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
எல்பிஜி சிலிண்டர்
ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் எண்ணெய் நிறுவனங்கள் LPG சிலிண்டர் விலைகளை மாற்றியமைக்கின்றன. ஏப்ரல் 1, 2025 அன்று, வீட்டு உபயோக மற்றும் வணிக LPG சிலிண்டர்களுக்கான புதிய விலைகள் அறிவிக்கப்படும். விலைகளில் ஏற்படும் அதிகரிப்பு அல்லது குறைப்பு சாமானியர்களின் வரவு செலவை பாதிக்கலாம்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS)
ஏப்ரல் 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) அமலுக்கு வரும். தேசிய ஓய்வூதிய அமைப்பின் (National Pension System) கீழ் உள்ள ஊழியர்கள் விருப்பப்பட்டால் இந்த புதிய ஓய்வூதிய முறையை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
புதிய வருமான வரி விதி மாற்றம்
2025 பட்ஜெட் உரையின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது புதிய வரி அடுக்குகள் மற்றும் விகிதங்களுடன் புதிய வருமான வரி விதி மாற்றங்களையும் அறிவித்தார். அதன்படி ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் நிலையில், ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. சம்பளம் வாங்கும் நபர்களுக்கு, ரூ.75,000 நிலையான விலக்கு பொருந்தும்.
மேலும் படிக்க | கௌதம் அதானிக்கு மேலும் சிக்கலா? இந்திய அரசின் உதவியை நாடிய அமெரிக்கா!
மேலும் படிக்க | EPFO claim செயல்முறையில் ஏப்ரல் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: முழு லிஸ்ட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









