)
Central Government Pensioners Latest News: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஊழியர்களின் குடும்பத்தாருக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. அரசு ஊழியர்களின் விவாகரத்து பெற்ற மகள்களும் பெற்றோர் இறந்த பிறகு குடும்ப ஓய்வூதியம் பெற உரிமை பெறுவார்கள் என்று அரசாங்கம் சமீபத்தில் தெளிவுபடுத்தியுள்ளது. பெற்றோரின் வாழ்நாளில் விவாகரத்து பெற்றவர்களும், அல்லது அவர்களின் வாழ்நாளில் விவாகரத்துக்கு விண்ணப்பித்து அதற்கான நடவடிக்கைகள் தகுதிவாய்ந்த நீதிமன்றத்தில் தொடங்கப்பட்டுள்ளவர்களும் இந்த ஓய்வூதியத்திற்கும் தகுதி பெறலாம்.
சில காரணங்களால், திருமணம் முறிந்த பிறகு மகள்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு இந்த முடிவு முக்கியமானதாக இருக்கும்.
இதுவரை குடும்ப ஓய்வூதியம் குறித்து சில முக்கிய சந்தேகங்கள் இருந்தன:
- விவாகரத்து பெற்ற மகளுக்கு ஓய்வூதியம் கிடைக்குமா?
- ஆம் எனில், எந்த நிபந்தனைகளின் கீழ் ஓய்வூதியம் கிடைக்கும்?
இந்தக் கேள்வி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோது, இது தொடர்பான தெளிவான விதிகள் ஏற்கனவே மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிகள், 2021 மற்றும் அதைத் தொடர்ந்து 26 அக்டோபர் 2022 தேதியிட்ட அலுவலக குறிப்பாணையில் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்தியது.
எந்த சூழ்நிலையில் மகள்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும்?
அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட விதிகளின்படி:
- ஒரு அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரர் இறந்து, அவரது கணவன் / மனைவி உயிருடன் இல்லையென்றால், அல்லது மகன் அல்லது மகள் இல்லை என்றால், அல்லது அவர்கள் தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்றால் (25 வயதைக் கடப்பது அல்லது சொந்த வருமான ஆதாரம் இருப்பது போன்றவை), அத்தகைய சூழ்நிலையில், திருமணமாகாத, விதவை அல்லது விவாகரத்து பெற்ற மகள் 25 வயதிற்குப் பிறகும் வாழ்நாள் முழுவதும் குடும்ப ஓய்வூதியத்தைப் பெறலாம்.
இருப்பினும், சில நிபந்தனைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன:
- மகள் தனது பெற்றோரைச் சார்ந்திருக்க வேண்டும்.
- மகள் விதவையாக இருந்தால், கணவர் பெற்றோரின் வாழ்நாளில் இறந்திருக்க வேண்டும்.
- மகள் விவாகரத்து பெற்றிருந்தால், விவாகரத்து பெற்றோரின் வாழ்நாளில் நடந்திருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் நீதிமன்றத்தில் விவாகரத்து நடவடிக்கைகள் அவர்களின் வாழ்நாளில் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- அவர் மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் வரை அல்லது வாழ்க்கைக்கு தேவையான வருமானத்தை ஈட்டத் தொடங்கும் வரை மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கும்.
இந்த விதி மத்திய சிவில் சர்வீஸ் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, ரயில்வே மற்றும் பாதுகாப்பு சேவைகள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் சமமாக பொருந்தும். அதாவது, இதன் நோக்கம் பெரியது என்பதையும் லட்சக்கணக்கான குடும்பங்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடிகின்றது.
இந்திய சமூகத்தில் விவாகரத்து பெற்ற பெண்களின் நிலை பெரும்பாலும் பாதுகாப்பற்றதாகவே உள்ளது. குறிப்பாக அவர்களிடம் நிதி ஆதாரங்கள் இல்லாதபோது நிலைமை மோசமடைகிறது. அத்தகைய சூழ்நிலையில், அரசு ஊழியர்களின் குடும்பங்களில் இப்படிப்பட்ட நிலையில் உள்ள மகள்களுக்கு இந்த உரிமை கிடைப்பது அவர்களின் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யும். இந்த விதி சமூகப் பாதுகாப்பு மற்றும் பெண்களின் தன்னம்பிக்கையை நோக்கிய ஒரு பெரிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ