300 மில்லியன் டாலர் மோசடி அம்பலம்: இந்த தளத்தில் TV நிகழ்ச்சிகளை பார்ப்பவர்கள் உஷார்

Illegal Content Streaming: சட்டவிரோதமாக ஒளிபரப்பாகும் தளங்களுக்கு எதிராக அதிகாரிகள் பயனர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 9, 2025, 11:24 AM IST
  • சட்டவிரோதமாக ஒளிபரப்பாகும் தளங்கள்.
  • 200 முதல் 300 மில்லியன் டாலர் அளவிலான இழப்பு.
  • ஒரு குற்றவாளி கைது.
300 மில்லியன் டாலர் மோசடி அம்பலம்: இந்த தளத்தில் TV நிகழ்ச்சிகளை பார்ப்பவர்கள் உஷார்

Illegal Content Streaming: திருட்டு கண்டெண்ட், அதாவது உள்ளடக்கத்தை ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யும் சட்டவிரோத இண்டர்நெட் ப்ரோடோகால் டெலிவிஷனின் (IPTV) ஒரு பெரிய நெட்வொர்க் இருப்பது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நெட்வொர்க்கை அம்பலப்படுத்த ஒரு பெரிய சர்வதேச நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்த நெட்வொர்க்  Boss IPTV, Guru IPTV, Tashan IPTV மற்றும் Indian IPTV போன்ற பல பெயர்களில் இந்தியா உட்பட உலகம் முழுவதிலுமிருந்து பல பிரீமியம் சேனல்களை சட்டவிரோதமாக ஒளிபரப்பி வந்தது. இந்த தளங்களுக்கு எதிராக அதிகாரிகள் பயனர்களுக்கு கடுமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர்.

Add Zee News as a Preferred Source

சட்டவிரோத ஒளிபரப்பு இப்படித்தான் நடக்கிறது

இந்த ஒளிபரப்பு சேவை உரிமம் இல்லாமல் ஸ்டார், ஜீ நெட்வொர்க், கலர்ஸ், சோனி, நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் லீக் போன்ற சேனல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை சட்டவிரோதமாகக் காட்டி வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சேவைகள் ஆண்ட்ராய்டு, லினக்ஸ் செட்-அப் பெட்டிகள் அல்லது ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் செயலிகள் மூலம் இயக்கப்பட்டன. அவை மலிவு விலையில் சமூக ஊடகங்கள் மற்றும் பல வலைத்தளங்களில் விற்கப்பட்டன.

200 முதல் 300 மில்லியன் டாலர் அளவிலான இழப்பு

இந்த தளங்கள் அசல் கண்டெண்ட் உரிமையாளர்களுக்கு பணம் செலுத்தவில்லை என்பதும், இதன் காரணமாக பொழுதுபோக்குத் துறை ஆண்டுதோறும் சுமார் 200 முதல் 300 மில்லியன் டாலர்கள் வரை பெரும் இழப்பை சந்திக்க வேண்டியிருந்தது என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது மட்டுமல்லாமல், இந்த சேவை பயனர்களின் தனியுரிமைக்கும் மிகவும் ஆபத்தானது. ஏனெனில் அவை பெரும்பாலும் பயனர்களின் கிரெடிட் கார்டு மற்றும் தனிப்பட்ட தரவைத் திருடும் வேலையையும் செய்கின்றன. இதன் பிறகு, ஃபிஷிங் மோசடிகள் மற்றும் போதைப்பொருள் வணிகம் மற்றும் பயங்கரவாதம் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் அவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த விஷயத்தில் போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஒரு குற்றவாளி கைது, ஆண்டு வருமானம் 700 கோடி

2021 ஆம் ஆண்டில், YuppTv இன் புகாரின் பேரில், ஃபரிதாபாத் சைபர் குற்றப்பிரிவு Boss IPTVயின் இடங்களில் சோதனை நடத்தியது. இதில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இது தவிர, காந்திநகரில் உள்ள சைபர் குற்றப் பிரிவு சமீபத்தில் முகமது முர்துசா அலியை கைது செய்தது. இவர் Boss IPTV என்ற பெரிய நெட்வொர்க்கை நடத்தி வந்தார். அலியின் நெட்வொர்க்கில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் இருந்தனர். அவர்களிடமிருந்து அவருக்கு கிடைத்த ஆண்டு வருமானம் சுமார் ரூ.700 கோடி.

அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்தியாவைத் தவிர, YuppTV அமெரிக்காவில் உள்ள Boss IPTV மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு எதிராகவும் வழக்குத் தொடர்ந்துள்ளது. அமெரிக்க சட்டத்தின் கீழ், திருட்டு சேவைகளைப் பயன்படுத்துவது கடுமையான குற்றமாகும். இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஒரு குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படலாம். மேலும், குற்றம் சாட்டப்பட்டபர் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். இந்த வழக்குகளில் அமெரிக்க குடிமகன் அல்லாத ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் நாட்டிலிருந்து நாடு கடத்தப்படலாம். இதுபோன்ற சட்டவிரோத சேவையைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்திய நிகழ்சிகளைப் பார்க்க சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் மற்றும் உரிமம் பெற்ற தளமான YuppTV ஐப் பயன்படுத்தவும். www.yupptv.com -க்கு சென்று உங்களுக்குப் பிடித்த சேனலை சட்டப்பூர்வமாகவும் பாதுகாப்பாகவும் பார்க்கலாம்.

மேலும் படிக்க | UPS: 50% ஓய்வூதியம், ஏகப்பட்ட நன்மைகள், ஜூன் 30 விண்ணப்பிக்க கடைசி நாள், விவரம் இதோ

மேலும் படிக்க | ஹனிமூனில் கணவர் கொலை; மனைவியே கொன்றது அம்பலம்.. சினிமாவையே மிஞ்சும் ட்விஸ்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News