)
EPS Pension Latest News: தனியார் துறை ஊழியரா நீங்கள்? மாதா மாதம் இபிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். இபிஎஃப்ஓ மூலம் அளிக்கப்படும் இபிஎஸ் ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இதில் ஒரு முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (Employee Pension Scheme) கீழ் அளிக்கப்படும் இபிஎஸ் ஓய்வூதியம் உயர்த்தப்படுமா? இதில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? சமீபத்திய அப்டேட் என்ன? இவை அனைத்தையும் பற்றி இந்த பதிவில் காணலாம்.
PF ஊழியர்கள் அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இவற்றை மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. ஊழியர்களின் பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவருவதில் EPFO -வும் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது. PF ஊழியர்களின் மிக முக்கியமான கோரிக்கை EPS இன் கீழ் பெறப்படும் ஓய்வூதியத் தொகையை அதிகரிப்பதாகும்.
PF ஊழியர் அமைப்புகள் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை ரூ.7500 ஆக உயர்த்த வேண்டும் என்று கோருகின்றன. மோடி அரசு OPS -க்கு பதில் UPS ஐ அறிமுகப்படுத்தியதிலிருந்து, இந்தக் கோரிக்கை வேகம் பெற்று வருகிறது. இதில் தீபாவளிக்கு முன் அரசாங்கம் ஒரு பெரிய முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பிற்கு ஒரு பெரிய காரணமும் உள்ளது. அக்டோபர் மாதம் PF ஊழியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கக்கூடும். இருப்பினும், இதுவரை இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வரவில்லை.
PF ஊழியர்களுக்கு எளிதான வசதிகளை வழங்க EPFO நடவடிக்கை எடுத்து வருகிறது. வசதிகளை எளிதாகவும் எளிமையாகவும் மாற்ற EPFO 3.0 என்ற முயற்சி வரும் மாதத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா தலைமையில் அக்டோபர் 10-11 தேதிகளில் EPFO மத்திய அறங்காவலர் குழுவின் ஒரு பெரிய கூட்டம் நடைபெற உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அறங்காவலர் குழு EPFO வில் முக்கிய முடிவுகளை எடுக்கும் மிக உயர்ந்த அமைப்பாகக் கருதப்படுகிறது. நிறுவனங்கள், ஊழியர்கள், மாநில அரசு மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தில் சில ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய அறங்காவலர் குழுவின் கூட்டத்தில் எந்தெந்த விஷயங்கள் விவாதிக்கப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும், தீபாவளிக்கு முன் EPFO பயனர்களுக்கு பெரிய சலுகைகளை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், பின்வரும் விஷயங்கள் முக்கியமாக விவாதிக்கப்படலாம் என கூறப்படுகின்றது:
- குறைந்தபட்ச மாத இபிஎஃப் ஓய்வூதியத்தை அதிகரிப்பது
- EPFO 3.0 -இன் அமலாக்கம்
- உயர் ஓய்வூதியம்
இபிஎஸ் ஓய்வூதியம் சுருக்கமாக...
- தற்போது EPS இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000 ஆகவும், அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆகவும் உள்ளது.
- ஓய்வூதியத்தைக் கணக்கிடுவதற்கான அதிகபட்ச ஓய்வூதிய சம்பளம் ரூ. 15,000 ஆகும்.
- குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை ரூ.1,000 லிருந்து ரூ.7,500 ஆக, அல்லது குறைந்தபட்சம் ரூ.3,000 ஆக உயர்த்த வேண்டும் என்று ஊழியர் சங்கங்களும் தொழிற்சங்கங்களும் கோரி வருகின்றன.
- அக்டோபர் மாதம் நடக்கவுள்ள கூட்டத்தில் இது தொடர்பான ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ