தனியார் துறை ஊழியர்கள்: வலுக்கும் போராட்டம், பன்மடங்கு அதிகரிக்கும் மாத ஓய்வூதியம்... புத்தம் புதிய அப்டேட் இதோ

EPFO Update: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் உள்ள தனியார் துறை ஊழியர்கள் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதாந்திர ஓய்வூதியத்தை அதிகரிக்கக் கோரி வருகின்றனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 25, 2025, 11:19 AM IST
  • இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கான தேவை என்ன?
  • அவர்களது கோரிக்கை என்ன?
  • அரசாங்கம் இதற்கு என்ன நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது?
தனியார் துறை ஊழியர்கள்: வலுக்கும் போராட்டம், பன்மடங்கு அதிகரிக்கும் மாத ஓய்வூதியம்... புத்தம் புதிய அப்டேட் இதோ

EPS Pension Latest News: மாதா மாதம் இபிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. பணி ஓய்வுக்கு பிறகு இபிஎஃப் உறுப்பினர்களுக்கு கிடைக்கும் இபிஎஸ் ஓய்வூதியத்தின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 

Add Zee News as a Preferred Source

Private Sector Employees: தனியார்துறை ஊழியர்கள்

மத்திய அரசு கடந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும். இதன் மூலம் ஊழியர்களுக்கு பல நன்மைகள் அதிகரித்துள்ளன. 

யுபிஎஸ் அறிவிப்புக்குப் பிறகு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் உள்ள தனியார் துறை ஊழியர்களும் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதாந்திர ஓய்வூதியத்தை அதிகரிக்கக் கோரத் தொடங்கியுள்ளனர். இதற்கு முன்னருன் இதற்கான கோரிக்கை இருந்தபோதிலும், தற்போது இந்த கோரிக்கை தீவிரமாகியுள்ளது. இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கான தேவை என்ன? அவர்களது கோரிக்கை என்ன? அரசாங்கம் இதற்கு என்ன நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது? இந்த வரங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

EPS Pensioners: இபிஎஸ் ஓய்வூதியதாரர்களின் கோரிக்கை என்ன?

தற்போது இபிஎஸ் பயனாளிகளுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.1,000 கிடைக்கின்றது. இது மிகவும் குறைந்த அளவாக உள்ளது. இந்தத் தொகையுடன் வாழ்க்கை நடத்துவது மிகக் கடினம். இந்த குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை ரூ.9,000 ஆக உயர்த்த வேண்டும் என தனியார் துறை ஊழியர்களும் ஓய்வுதியதாரர்களும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர். இது தவிர, ஓய்வூதியதாரர்கள் இலவச மருத்துவ வசதிகள் மற்றும் அகவிலைப்படியையும் கோருகின்றனர்.

அமைச்சர் மன்சுக் மண்டாவியாவுக்கு எழுதப்பட்ட கடிதம்

சமீபத்தில் சென்னை EPF ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கம் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டாவியாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தக் கடிதத்தில், குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை அகவிலைப்படியுடன் ரூ.9 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

EPS-95: 80 லட்சம் ஓய்வூதியதாரர்கள்

தற்போது, ​​EPS-95 இன் கீழ் சுமார் 186 நிறுவனங்கள் உள்ளன. சுமார் 80 லட்சம் ஓய்வூதியதாரர்கள் இந்த பிரிவின் கீழ் வருகிறார்கள். இவர்களின் நலனுக்காக எழுப்பப்பட்டுள்ள இந்த கோரிக்கை அரசாங்கத்தால் பரிசீலிக்கப்படும். மாத ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டால், அது தனியார் துறையைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும். ஓய்வூதிய உயர்வு குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் நீட்டிக்கப்படும்.

Minimum Monthly Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்

குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.9,000 ஆக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டால், அது ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும். இது ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அதிக பொருளாதார பாதுகாப்பை வழங்கும்.பெரும்பாலான ஓய்வூதியதாரர்கள் ரூ.1,000 மூலம் தங்கள் குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்ய முடிவதில்லை. ஓய்வூதிய உயர்வு EPFO ​​-க்கு இதை தேவையற்ற முறையில் சுமையாக மாற்றாமல் அதிகரிப்புக்கு நிதியளிக்கும் முறையை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

Pension Hike: இதற்கு முந்தைய ஓய்வூதிய உயர்வு எப்போது நடந்தது?

இதற்கு முன் 2014 ஆம் ஆண்டு மாத ஓய்வூதியம் ரூ.1,000 ஆக மாற்றப்பட்டது. அது நடந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், இன்னும் அதில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், அதற்கு பிறகு வாழ்க்கை செலவுகள் வெகுவாக அதிகரித்துள்ளன. எனினும், ஓய்வூதியத் தொகையை அரசு மாற்றாமல் வைத்திருப்பது தனியார் துறை ஊழியர்களின் நிதி சுமையை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தில் அரசாங்கம் விரைவில் சில நேர்மறையான நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பாக்கப்படுகின்றது.

EPS Calculation : இபிஎஸ் கணக்கீடு

EPS திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான தற்போதைய சூத்திரம்: (அடிப்படை சம்பளம் X 60 மாத சேவை காலம்) / 70.

மேலும் படிக்க | UPS ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்... 23 லட்சம் பேர் பலனடையும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு 20%-100% கூடுதல் ஓய்வூதியம்: பென்ஷன் உயர்வு குறித்த அரசு உத்தரவு, முக்கிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News