EPFO Rule Change: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். ஊழியர் வருங்கால ஓய்வூதிய அமைப்பான EPFO, உறுப்பினர்களின் செயல்முறைகளை எளிதாக்கவும், வசதிகளை அதிகரிக்கவும் பல வித புதிய விதிகளை உருவாக்குகின்றது, புதிய விதிகளிலும் மாற்றங்களை செய்கிறது. அந்த வகையில், சமீபத்தில் இபிஎஃப்ஓ சில மாற்றங்களை செய்துள்ளது. இந்த மாற்றங்கள் இபிஎஃப் உறுப்பினர்களின் செயல்முறைகளை எளிதாக்கியுள்ளது.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அதிகரித்த வசதிகள்
ஊழியர்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களைப் புதுப்பிப்பதற்கான செயல்முறையை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) எளிமைப்படுத்தியுள்ளது. இப்போது, உறுப்பினர்களின் யுனிவர்சல் கணக்கு எண் (UAN) ஆதாருடன் இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டிருந்தால், அவர்கள் தங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம் மற்றும் இது போன்ற முக்கிய தகவல்களை எந்த ஆவணங்களையும் பதிவேற்ற வேண்டிய அவசியமின்றி புதுப்பிக்கலாம். இந்த மாற்றம் EPF உறுப்பினர்களுக்கு சுயவிவரப் புதுப்பிப்புகளை விரைவாகவும் தொந்தரவில்லாமலும் செய்ய உதவுகிறது.
EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு முன்னர் நிறுவன ஒப்புதல் தேவைப்பட்டது
முன்னதாக, EPF உறுப்பினர்கள் தங்கள் ப்ரொஃபைலைப் புதுப்பிக்க தங்கள் முதலாளி / நிறுவனத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. இது சராசரியாக சுமார் 28 நாட்கள் தாமதத்திற்கு வழிவகுத்தது. இருப்பினும், புதிய விதியின் மூலம், பல மாற்றங்களை இப்போது விரைவாகச் செய்ய முடியும். “2024-25 நிதியாண்டில் முதலாளிகள் / நிறுவனங்கள் மூலம் திருத்தம் செய்வதற்காக EPFO இல் பெறப்பட்ட மொத்த 8 லட்சம் கோரிக்கைகளில், மாற்றக் கோரிக்கைகளில் கிட்டத்தட்ட 45% முதலாளி / நிறுவனத்தின் சரிபார்ப்பு அல்லது EPFO இன் ஒப்புதல் இல்லாமல் உறுப்பினரால் சுயமாக அங்கீகரிக்கப்படக்கூடியவை” என இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது.
எந்தப் புதுப்பிப்புகளுக்கு நிறுவனத்தின் ஒப்புதல் தேவை?
அக்டோபர் 1, 2017 க்கு முன்பு UAN வழங்கப்பட்டிருந்தால், சில சந்தர்ப்பங்களில் மட்டுமே முதலாளி சான்றிதழ் தேவைப்படுகிறது.
உங்கள் இபிஎஃப் கணக்கை (EPF Account) புதுப்பிக்க அல்லது பணம் எடுக்க, உங்கள் ஆதார் மற்றும் PAN இரண்டையும் இணைக்க வேண்டும். உங்கள் EPF விவரங்களுக்கும் ஆதாருக்கும் இடையில் ஏதேனும் பொருந்தாத தன்மை இருந்தால், அது ஒப்புதல்களை தாமதப்படுத்தக்கூடும். முதலாளி / நிறுவனமும் EPFO -வும் திருத்தங்களைச் செயல்படுத்த எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து, இந்த முரண்பாடுகளைத் தீர்க்க சில வாரங்கள் ஆகலாம்.
How to Update Your EPF Profile Details: உங்கள் இபிஎஃப் ப்ரொஃபைல் விவரங்களை எவ்வாறு புதுப்பிப்பது?
உங்கள் EPF ப்ரொஃபைல் விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்க இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்:
- ஸ்டெப் 1: ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்ட்டலுக்கு முதலில் செல்லவும்.
- ஸ்டெப் 2: உங்கள் UAN (யுனிவர்சல் கணக்கு எண்), கடவுச்சொல் மற்றும் கேப்ட்சாவைப் பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.
- ஸ்டெப் 3: மேல் மெனுவிலிருந்து 'மேனேஜ்' டேபைக் கிளிக் செய்யவும்.
- ஸ்டெப் 4: பெயர், பிறந்த தேதி அல்லது பாலினம் போன்ற விவரங்களைப் புதுப்பிக்க ‘Modify Basic Details’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- ஸ்டெப் 5: உங்கள் ஆதார் அட்டையின்படி சரியான விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
போர்ட்டலில் உள்ள ‘டிராக் ரிக்வெஸ்ட்’ பிரிவின் கீழ் உங்கள் கோரிக்கையின் நிலையை நீங்கள் கண்காணிக்கலாம்.
UAN என்றால் என்ன?
UAN (யுனிவர்சல் அக்கவுண்ட் எண்) என்பது ஒரு தனித்துவமான 12 இலக்க எண்ணாகும். இது ஊழியர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை எளிதாக நிர்வகிக்க உதவுகிறது. EPFO -இன் கீழுள்ள வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற, உறுப்பினர்கள் தங்கள் UAN ஐ செயல்படுத்தி தங்கள் வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைக்க வேண்டும். இதற்கான காலக்கெடு தற்போது மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









