)
8th Pay Commission Latest News: மத்திய அரசு இன்னும் சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடக்கூடும். 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்காக காத்திருக்கும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வரும் வாரங்களில் பல முக்கிய செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கை
8வது ஊதியக்குழுவிற்கான ஆயத்தப்பணிகள் முழு முனைப்புடன் நடந்துவரும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும், ஊழியர் அமைப்புகளும் ஒரு கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். இது மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மிகவும் பழைய கோரிக்கையாக இருந்தாலும், இப்போது அதை அரசு அங்கீகரிக்கக்கூடும் என நம்பப்படுகின்றது. மத்திய அரசு ஊழியர்களின் அந்த முக்கிய கோரிக்கை என்ன? அதனால் கிடைக்கவுள்ள நன்மைகள் என்ன? இந்த அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
கம்யூடட் பென்ஷன் விதிகளில் மாற்றம்
கம்யுடேஷன் பென்ஷன் மீட்கப்படும் கால அளவை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரி வருகின்றனர். ஊழியர்கள் பணி ஓய்வு பெறும்போது, ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை ஒரே நேரத்தில் எடுக்க வழிவகை உள்ளது. இது கம்யூடட் பென்ஷன் அதாவது மாற்றப்பட ஓய்வூதியம் என்றழைக்கப்படுகிறது.
இதன் பிறகு, மொத்தமாக எடுக்கப்பட தொகையின் ஒரு பகுதி மாதா மாதம் ஓய்வூதியத்திலிருந்து கழிக்கப்படுகின்றது. இதனால் ஓய்வூதியதாரர்களுக்கு குறைக்கப்பட்ட ஓய்வூதியம் கிடைக்கின்றது. இந்த கழித்தல் இப்போது 15 ஆண்டுகளுக்கு நடக்கிறது. அதாவது 15 ஆண்டுகளுக்கு பிறகுதான் ஓய்வூதியதாரர்களால் முழு ஓய்வூதியத்தை பெற முடியும். இந்த காலத்தை 12 ஆண்டுகளாக மாற்ற வேண்டும் என ஊழியர்களும் ஊழியர் சங்கங்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் இந்தப் பிரச்சினை இப்போது மீண்டும் 8வது ஊதியக் குழுவின் விவாதத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனுடன், ஊதியக் குழுவின் குறிப்பு விதிமுறைகள் இறுதி செய்யப்படுவதற்கு முன்பு இந்தக் கோரிக்கையை உரக்க எழுப்ப ஊழியர் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. ஊழியர் அமைப்பின் இந்த பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஓய்வு பெற்ற ஊழியர்கள் விரைவில் தங்கள் முழு ஓய்வூதியத்தின் பலனைப் பெறத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அவர்களுக்கு நிதி நிவாரணத்தையும் வழங்கும்.
- ஓய்வூதிய மீட்பு காலத்தை 15 ஆண்டுகளுக்குப் பதிலாக 12 ஆண்டுகளாக குறைத்தால், ஓய்வு பெற்ற ஊழியர்கள் 3 ஆண்டுகள் முன்னதாகவே தங்கள் முழு ஓய்வூதியத்தையும் பெறத் தொடங்குவார்கள்.
- இது அவர்களது வயது மூப்பில் மருத்துவம், சமூகப் பொறுப்புகள் மற்றும் குடும்பச் செலவுகளை சிறப்பாக நிர்வகிக்க உதவும்.
- மேலும், 15 -க்கு பதிலாக 12 ஆண்டு காலம் என்பது அரசாங்கத்தின் வருவாயிலும் அதிக சுமையை ஏற்படுத்தாது.
- ஏனெனில் முன்னர் கழிக்கப்பட்ட தொகை மற்றும் வட்டியின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா?
ஓய்வூதியதாரர்கள், 8வது ஊதியக்குழுவில் ஓய்வூதிய மீட்பு காலம் கண்டிப்பாக குறைக்கப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இது அவர்களுக்கு வயதான காலத்தில் மாத வருமானத்தை அதிகரிப்பதோடு, நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ