பெண்களுக்கு LIC வழங்கும் சிறப்பு பரிசு.. மாதம் மாதம் ஆயிரம் கணக்கில் சம்பாதிக்கலாம்

LIC Bima Sakhi Yojana: எல்ஐசியின் இந்த சிறப்பான திட்டத்தில் பெண்கள் இணைவதன் மூலம் ஒவ்வொரு மாதம் 7000 ரூபாய் வரை கவலையில்லாமல் சம்பாதிக்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 18, 2025, 11:00 AM IST
  • எல்.ஐ.சி இன் கீழ் செயல்பட்டு வருகிறது.
  • இந்த சிறப்பு திட்டத்தின் பெயர் எல்ஐசி பீமா சகி ஆகும்.
  • இந்த திட்டத்தின் முழு விவரம்.
பெண்களுக்கு LIC வழங்கும் சிறப்பு பரிசு.. மாதம் மாதம் ஆயிரம் கணக்கில் சம்பாதிக்கலாம்

LIC Bima Sakhi Yojana Details: பெண்களுக்கு அவர்களுக்கான அதிகாரம் அளிக்க தற்போது மத்திய மட்டும் மாநில அரச பல்வேறு திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து அவற்றை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது இது போன்ற மிக முக்கிய திட்டங்களில் ஒன்றைப் பற்றி தான் இப்போது காணப் போகிறோம். இந்த அற்புதமான திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 50,000க்கும் மேற்பட்ட பெண்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த திட்டமானது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் அதாவது எல்.ஐ.சி இன் கீழ் செயல்பட்டு வருகிறது. 

Add Zee News as a Preferred Source

இந்த சிறப்பு திட்டத்தின் பெயர் எல்ஐசி பீமா சகி ஆகும். இந்த திட்டம் பெண்களுக்காக பிரத்யேகமாக தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் நோக்கம் நாட்டின் பெண்களுக்கு அவர்களது அதிகாரத்தை அளிப்பதாகும். தற்போது இந்த திட்டத்தின் முழு விவரத்தை தெரிந்துக்கொள்வோம்:

எல்ஐசி பீமா சகி திட்டமானது (LIC Bima Sakhi Yojana) பெண்கள் தநகளின் பங்களிப்பை காப்பீட்டுத் துறையில் அதிகரிக்கும் நோக்கித்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பெண்கள் இணைவதன் மூலம் எல்ஐசி முகவர்களாகி பொருளாதார ரீதியாக பலம் பெற முடியும். இதில் மிக சிறப்பான விஷயம் என்னவென்றால் எல்ஐசி நிறுவனம் தகுதியுள்ள பெண்களுக்கு முகவர்களாக மாற மூன்று வருட சிறப்பு பயிற்சியையும் அளிக்கிறது. இதன் மூலம் பெண்களுக்கு இந்த காலகட்டத்தில் மாதந்தோறும் பணம் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | SIP Mutual Fund: ஆயிரங்களை லட்சங்களாக பெருக்க... மாதம் ரூ.2000 முதலீடு போதும்

எல்ஐசி பீமா சகி திட்டத்தில் பெண்களுக்கு முதல் ஆண்டில் மாதம் 7000 ரூபாய், இரண்டாம் ஆண்டில் 6000 ரூபாய் மற்றும் மூன்றாம் ஆண்டில் 5000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. எல்ஐசி (Life Insurance Corporation of India) பீமா சகி திட்டத்தின் கீழ், பெண்கள் காப்பீட்டு பாலிசிகளை விற்க வேண்டும். எல்ஐசி நிர்ணயித்த ஆண்டு இலக்கை பெண்கள் அடைய வேண்டும். பாலிசிகளை விற்பதற்கும் பெண்களுக்கு கமிஷன் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் இணைய 18 முதல் 70 வயதுக்குட்பட்ட 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற எந்தப் பெண்ணும் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே உள்ள முகவர்களின் உறவினர்கள் அல்லது எல்ஐசி பணியாளர்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெற மாட்டார்கள். அதேபோல், ஓய்வு பெற்ற ஊழியர்களோ அல்லது எல்ஐசியின் முன்னாள் முகவர்களோ இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மாற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த திட்டத்தில் நீங்கள் இணைய வேண்டும் ஏராள இப்போதே அருகிலுள்ள எல்ஐசி அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://licindia.in/web/guest/lic-s-bima-sakhi) ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்துடன் கட்டாயம் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வயதுச் சான்று, முகவரிச் சான்று மற்றும் 10வது சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும். இதனுடன், வங்கி கணக்கு விவரங்களையும் வழங்க வேண்டும்.

மேலும் படிக்க | Fact Check | சமூக ஊடகங்களில் பரவும் புதிய 350 ரூபாய் நோட்டு? ஆர்பிஐ சொன்ன அதிர்ச்சி தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News