Unified Pension Scheme: 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய செய்தி உள்ளது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் செயல்படுத்தப்பட உள்ளது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் நன்மைகள் என்ன? இதை யாரெல்லாம் பயன்படுத்தலாம். இது குறித்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம்
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்பது பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme) மற்றும் தேசிய ஓய்வூதிய முறை (National Pension System) ஆகியவற்றில் உள்ள முக்கிய அம்சங்களை சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள புதிய ஓய்வூதியத் திட்டமாகும். இது உறுதியான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றது. NPS-ஐப் பின்பற்றும் மத்திய அரசு ஊழியர்கள் UPS-க்கு மாறலாம்.
அரசாங்க பங்களிப்பு எவ்வளவு?
NPS இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு மட்டுமே UPS பொருந்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். UPS -ஐத் தேர்ந்தெடுத்த ஊழியர்களுக்கு வேறு எந்த கொள்கைச் சலுகையோ, கொள்கை மாற்றமோ, நிதிச் சலுகையோ கிடைக்காது. UPS -ஐத் தேர்ந்தெடுத்த பிறகு, ஊழியர்கள் தங்கள் முடிவை மாற்ற முடியாது. இந்தத் திட்டத்தில், அரசாங்கத்தின் பங்களிப்பு மொத்த அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் (DA) 18.5% ஆக இருக்கும். இது முன்பு 14% ஆக இருந்தது. ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியத்திற்கு 10% தொடர்ந்து பங்களிப்பார்கள்.
யுபிஎஸ்: எந்தெந்த ஊழியர்கள் பயனடைவார்கள்?
- மார்ச் 31, 2025 க்குப் பிறகு NPS இன் கீழ் ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெறவிருக்கும் அனைத்து ஊழியர்களும் இந்த நன்மையைப் பெறுவார்கள்.
- மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலையான ஓய்வூதியம் வழங்கப்படும், இது 12 மாத சராசரி அடிப்படை சம்பளத்தில் 50% ஆக இருக்கும்.
- ஓய்வூதியம் பெற, பணியாளர் குறைந்தது 25 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்.
- ஊழியர் இறந்துவிட்டால், ஊழியரின் குடும்பத்தினருக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக (Family Pension) கிடைக்கும்.
- 10 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
- பணியாளரின் சேவை 25 ஆண்டுகளுக்குக் குறைவாகவும் 10 ஆண்டுகளுக்கு மேல் இருந்தால், ஓய்வூதியத் தொகை விகிதாசார ஒதுக்கீட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
- பணியாளரின் பணி ஆண்டுகளின் எண்ணிக்கை எதுவாக இருந்தாலும், அவரது குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்காது.
UPS: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் 4 முக்கிய விஷயங்களை அறிந்து கொள்வோம்.
- Assured Pension: உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம்
குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவை புரிந்து ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடைசி 12 மாதங்களில் பெறப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக அளிக்கப்படும்.
- Family Pension: உறுதி செய்யப்பட்ட குடும்ப ஓய்வூதியம்:
பணியாளரின் இறந்தால், அவர் கடைசியாக பெற்ற ஓய்வூதியத்தில் 60 சதவீதம் அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும்.
- Assured Minimum Pension: உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம்
குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு ஓய்வு பெறும்போது மாதத்திற்கு ரூ.10,000 உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம் கிடைக்கும்.
- Inflation Index: பணவீக்க குறியீடு
தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPE-IW) அடிப்படையாகக் கொண்ட அகவிலைப்படி நிவாரணம் வழங்கப்படும். ராணுவ வீரர்களைப் பொறுத்தவரை, பணிக்கொடையுடன் கூடுதலாக, ஓய்வுபெறும் நேரத்தில் மொத்த தொகை, ஒவ்வொரு ஆறு மாத சேவைக்கும், ஓய்வுபெறும் தேதியன்று மாதாந்திர ஊதியத்தில் (ஊதியம் + டிஏ) 1/10 பங்கு வழங்கப்படும். இந்தக் கொடுப்பனவு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத்தின் அளவைக் குறைக்காது.
யார் எந்தப் படிவத்தை நிரப்ப வேண்டும்?
- தற்போதுள்ள ஊழியர்கள், ஜனவரி 1, 2004 க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்கள், NPS-ஐத் தேர்ந்தெடுத்தவர்கள் UPS-ஐத் தேர்வுசெய்யலாம். அவர்கள் படிவம் A2-ஐ நிரப்ப வேண்டும்.
- ஏப்ரல் 1, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியில் சேரும் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களும் இந்த விருப்பத்தைத் தேர்வு செய்யலாம். அவர்கள் படிவம் A1 ஐ நிரப்ப வேண்டும்.
- முன்னதாக NPS-ஐத் தேர்ந்தெடுத்த ஓய்வு பெற்ற பணியாளர்களும் UPS-இல் சேரலாம். அவர்கள் eKYC ஆவணங்களுடன் படிவம் B2-ஐ சமர்ப்பிக்க வேண்டும்.
- ஊழியர் இறந்தால், சட்டப்பூர்வமாக திருமணமான வாழ்க்கைத் துணை eKYC ஆவணங்களுடன் படிவம் B6 ஐ சமர்ப்பிக்க வேண்டும்.
- தன்னார்வ ஓய்வு (VRS) பெற்றவர்களுக்கு, 25 ஆண்டுகள் சேவை புரிந்தவர்க்களுக்கான விதிகள் பொருந்தும். எனினும், அத்தகைய ஊழியர்கள் ஓய்வூதியம் பெற 60 வயதை அடையும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
யுபிஎஸ்: எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?
- ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். உதாரணமாக, ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களுக்கு ஒரு ஊழியரின் சராசரி அடிப்படை சம்பளம் ரூ.50,000 ஆகவும், அந்த ஊழியர் 10 சதவீத மாதாந்திர பங்களிப்புடன் 25 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால், மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 25,000 + DR ஆக இருக்கும்.
- ஊழியர் 15 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால், ஓய்வூதியம் ரூ.15,000 + DR ஆக இருக்கும், இது 30 சதவீத விகிதத்தில் கணக்கிடப்படும்.
- ரூ.40,000 அடிப்படை சம்பளம் மற்றும் 20 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள ஒரு ஊழியருக்கு 40 சதவீத ஓய்வூதியம் கிடைக்கும், இது ரூ.16,000 + DR க்கு சமம்.
(பொறுப்பு துறப்பு: இந்த புள்ளிவிவரங்கள் மதிப்பீடுகளாகக் காட்டப்பட்டுள்ளன. பணியாளர்கள் தங்கள் ஓய்வூதிய அளவை தாங்களே கணக்கிடலாம்).
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









