EPFO 3.0: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை உங்கள் கணக்கில் டெபாசிட் செய்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். இந்த மாதம் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPFO: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இந்த மாதம், EPFO 3.0 ஐ அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக பல ஊடக அறிகைகள் தெரிவிக்கின்றன. இந்த மேம்படுத்தலின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, UPI மற்றும் ATM மூலம் பணம் எடுக்கும் முறை. இந்த மாதமே இவை அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது PF கணக்குகளை நிர்வகிப்பதையும் அணுகுவதையும் முன்னெப்போதையும் விட வேகமாகவும் வசதியாகவும் மாற்றும் என கூறப்படுகின்றது.
What is EPFO 3.0? EPFO 3.0 என்றால் என்ன?
EPFO 3.0 என்பது EPF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சேவைகளை விரைவாகவும் எளிதாகவும் மாற்றி, செயல்முறைகளை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய டிஜிட்டல் தளமாகும். இது மேம்படுத்தப்பட்ட IT அமைப்புகளால் ஆதரிக்கப்படுகிறது. பயனர்கள் பிஎஃப் நிதியை திரும்பப் பெறுதல் அல்லது கணக்கு விவரங்களை புதுப்பித்தல் போன்ற முக்கியமான பணிகளைச் செய்ய இது அனுமதிக்கும். சம்பளம் பெறும் ஊழியர்கள் மற்றும் முறைசாரா துறையில் உள்ளவர்களுக்கு நிதி சேவைகளை எளிமைப்படுத்தவும், செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்கவும் தொழிலாளர் அமைச்சகம் எடுத்து வரும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சி உள்ளது.
EPF ATM Withdrawal: UPI மற்றும் ATM மூலம் பணம் எடுக்கும் செயல்முறை
UPI மற்றும் ATM மூலம் பணம் எடுக்கும் செயல்முறை பற்றிய முழு விவரங்கள் இன்னும் வெளியிடவில்லை. எனினும் இது குறித்த சில தகவல்கள் கசிந்துள்ளன. EPFO 3.0 PF கணக்குகளை UPI மற்றும் ATM நெட்வொர்க்குகளுடன் இணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்தாதாரர்கள் தங்கள் தகுதியான EPF நிதியை நேரடியாக UPI செயலிகள் அல்லது வங்கி ATMகள் மூலம் விரைவில் எடுக்க உதவும். PIN அல்லது ஆதார் சரிபார்ப்பு போன்ற பாதுகாப்பான முறைகளைப் பயன்படுத்தி பணம் எடுக்க அனுமதிக்கப்படும் என கூறப்படுகின்றது.
EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களின் பணத்திற்கு முழு பாதுகாப்பு
இபிஎஃப் சந்தாதார்ரகளின் பணத்திற்கு முழு பாதுகாப்பை அளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் எடுக்கும் வரம்புகள் மற்றும் பாதுகாப்பு விதிகள் அமலில் இருக்கும். பல கட்ட சரிபார்ப்புகள் மூலம் இந்த செயல்முறையின் பாதுகாப்பு அம்சங்கள் வலுப்படுத்தப்படும்.
EPFO 3.0 எப்போது தொடங்கப்படும்?
EPFO 3.0 ஜூன் 2025, அதாவது இந்த மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் முன்னோடி சோதனையுடன் இந்த வெளியீடு தொடங்கப்படலாம். முழுமையாக செயல்படுத்தப்பட்டவுடன், இந்த மேம்படுத்தல் இந்தியா முழுவதும் 6 கோடிக்கும் மேற்பட்ட EPF உறுப்பினர்களுக்கு பயனளிக்கும்.
EPS Pension: எந்த வங்கியிலிருந்து வேண்டுமானாலும் இபிஎஸ் ஓய்வூதியத்தை பெறும் செயல்முறை
ஜனவரி 1, 2025 முதல், ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) 1995 இன் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்தியா முழுவதும் உள்ள எந்த வங்கிக் கிளையிலிருந்தும் தங்கள் ஓய்வூதியத்தைப் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது இபிஎஸ் ஓய்வூதியதார்ரகள் ஒரு குறிப்பிட்ட கிளையுடன் பிணைக்கப்பட மாட்டார்கள். அவர்களுக்கு எந்த வங்கியிலிருந்து வேண்டுமானாலும், எந்த கிளையில் வேண்டுமானாலும் ஓய்வூதியத்தை எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இது ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நன்மையாக அமைந்தது. மேலும் இது செயல்முறையை மிகவும் நெகிழ்வானதாகவும் வசதியாகவும் மேம்படுத்தியது.
மேலும் படிக்க | SIP vs PPF: ரூ.5,000 மாத முதலீட்டில்... உங்களை லட்சாதிபதியாக ஆக்கும் திட்டம் எது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









