Commercial LPG Cylinder Price Reduced: வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 24 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ஆம் தேதியான இன்று முதல் இந்த விலை மாற்றம் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.
Commercial LPG Cylinder Price: சென்னையில் இப்போது விலை எவ்வளவு?
சென்னையை பொருத்தவரை, வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று ரூ.15.50 குறைந்துள்ளது. கடந்த மே 1ஆம் தேதி ரூ.1,921.50 ஆக இருந்த சிலிண்டர் தற்போது ரூ.1906 ஆக உள்ளது. தலைநகர் டெல்லியில் இன்றைய விலை மாற்றத்திற்கு பின்னர் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று ரூ.1,723.50 ஆக உள்ளது.
Commercial LPG Cylinder Price: முக்கிய நகரங்களில் விலை எவ்வளவு?
ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி, முக்கிய நகரங்களான பெங்களூருவில் 1820.50 ரூபாயில் இருந்து குறைந்து 1796.50 ரூபாயாகவும், புவனேஷ்வரில் 1892.00 ரூபாயில் இருந்து குறைந்து 1868.00 ரூபாயாகவும், சண்டிகரில் 1767.00 ரூபாயில் இருந்து குறைந்து 1743.00 ரூபாயாகவும், ஜெய்ப்பூரில் 1776.00 ரூபாயில் இருந்து குறைந்து 1752.00 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 1851.50 ரூபாயில் இருந்து குறைந்து 1827.50 ரூபாயாகவும், மும்பையில் 1699.00 ரூபாயில் இருந்து குறைந்து 1675.00 ரூபாயாகவும், நொய்டாவில் 1747.50 ரூபாயில் இருந்து குறைந்து 1723.50 ரூபாயாகவும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உள்ளது.
Commercial LPG Cylinder Price: வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி சிலிண்டர் விலை எவ்வளவு?
கடந்த ஏப்ரல் மாதமும் 19 கிலோ கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.41 வரை குறைக்கப்பட்டிருந்தது. இந்த மாதமும் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 14 கிலோ கொண்ட வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் அதே விலையில் தொடர்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் 50 ரூபாய் அளவில் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, அந்த சிலிண்டர் விலை சென்னையை பொருத்தவரை ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி ரூ.868.50 ஆக உள்ளது.
Commercial LPG Cylinder Price: ஏன் விலை மாற்றம்?
ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் கொண்டுவரும். அதன் அடிப்படையில் இன்று ரூ.24 வரை விலை குறைப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திற்கும், உள்ளூர் வரிகள், போக்குவரத்து செலவுகள் உள்ளிட்டவற்றின் காரணமாக எல்பிஜி சிலிண்டரின் விலைகள் ஒவ்வொரு நகரங்களிலும் வெவ்வேறு விலையில் கிடைக்கும்ய
கச்சா எண்ணெய் விலை நிலவரம், தற்போதைய மாற்று விகிதங்கள், சர்வதேச LPG அளவுகோல் விகிதங்கள் உள்ளிட்ட உலகளாவிய, உள்நாட்டு பல முக்கிய காரணிகளைப் பொறுத்து எல்பிஜி சிலிண்டரின் விலையிலும் மாற்றம் ஏற்படும்.
மேலும் படிக்க | ஆயுஷ்மான் வே வந்தனா அட்டை பெறுவது எப்படி? தகுதிகள், விண்ணப்பிக்கும் வழிமுறை இங்கே
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









