அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய செய்தி... சம்பள உயர்வு இந்த தேதியில் நடக்கும்

DA Hike: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படியை 2% அதிகரிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 28, 2025, 02:44 PM IST
  • அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கப் படும்?
  • அகவிலைப்படி 53% இலிருந்து 55% ஆக உயர்த்தப்படும்.
  • அகவிலைப்படியில் மிகக் குறைந்த அதிகரிப்பாகும்.
அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய செய்தி... சம்பள உயர்வு இந்த தேதியில் நடக்கும்

DA Hike: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படியை 2% அதிகரிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது. இதன் மூலம் அகவிலைப்படி 53% இலிருந்து 55% ஆக உயர்த்தப்படும். எனினும் இந்த அதிகரிப்பானது கடந்த 78 மாதங்களில் மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படியில் மிகக் குறைந்த அதிகரிப்பாகும்.

Add Zee News as a Preferred Source

அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கப் படும்?
இந்நிலையில் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (CPI-IW) வெளியிடப்பட்ட பிறகு, ஜனவரி 2025 முதல் DA/DR 2 சதவீதம் அதிகரிக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேசயம் டிசம்பர் 2024க்கான AICPI-IW 143.7 ஆக இருந்தது, DA கணக்கீட்டை 55.98% ஆகக் கொண்டு சென்றது. எனினும் இந்த முறை இது 53% இலிருந்து 55% ஆக மட்டுமே அதிகரிக்கப்படும்.

கடந்த சில ஆண்டுகளில், அகவிலைப்படி 3 அல்லது 4 சதவீதம் என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளது. எனினும் 78 மாதங்களில் முதல் முறையாக அகவிலைப்படி 2% மட்டுமே அதிகரிக்கிறது. 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அகவிலைப்படி 2 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு 3 அல்லது 4 சதவீத தொடர்ச்சியான அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. எனவே தான் தற்போதைய உயர்வானது மத்திய ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DA உயர்வால் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?
எடுத்துக்காட்டாக ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.50,000 என்றால், 2% அதிகரிப்புக்குப் பிறகு, அவரது DA அதிகரிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலின் படி இருக்ககூடும்.

சம்பளம் (Basic Salary) முதல் டிஏ - DA (53%) புதிய DA (55%) அதிகரிப்பு (2%)
₹50,000 ₹26,500 ₹27,500 ₹1,000
₹70,000 ₹37,100 ₹38,500 ₹1,400
₹1,00,000 ₹53,000 ₹55,000 ₹2,000

யார் யார் பயனடைவார்கள்?
இந்நிலையில் இந்த அகவிலைப் படி உயர்வு நாடு முழுவதும் 1.2 கோடி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும் என்று நம்பப்படுகிறது. இதன் மூல லட்சக்கணக்கான குடும்பங்களின் நிதி சுமை குறையலாம். 

ஊதியக்குழு அல்லது சம்பள கமிஷன் என்றால் என்ன?
மத்திய அரசு ஒவ்வொரு குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் அமைப்பது வழக்கம். அந்த குழு தான் அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை திருத்துவது குறித்த பரிந்துரை அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும். அந்த வகையில் நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தற்போது வரை 7 முறை சம்பள கமிஷன் அமைத்துள்ள மத்திய அரசு, தற்போது அரசு ஊழியர்களுக்கு கணிசமான ஊதியத்தை வழங்கி வருகிறது. மேலும் இந்த ஊதியக் குழு ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை மாற்றியமைக்க அமைக்கப்படுகிறது.

மேலும் படிக்க | பரஸ்பர நிதியம்: SIP அல்லது STP முறையில் முதலீடு... இரண்டில் அதிக பலன் கொடுப்பது எது?

மேலும் படிக்க | நாட்டு மக்கள் அனைவருக்கும் இனி பென்ஷன்: மத்திய அரசின் புதிய மெகா ஓய்வூதிய திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News