ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்: 65 வயதிலேயே இனி 5%, 10%, 15% கூடுதல் ஓய்வூதியம்

Central Government Pensioners Latest News: தற்போது 80 வயதுக்கு பிறகு கிடைக்கும் அதிகரித்த ஓய்வூதியத்தின் பலன் 65 வயதிலிருந்து கிடைக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு மீண்டும் பரிந்துரைத்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 3, 2025, 05:08 PM IST
  • 65 வயதுக்கு பிறகு கூடுதல் ஓய்வூதியம் கிடைத்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
  • வயது அடிப்படையிலான ஓய்வூதிய உயர்வு எவ்வாறு செயல்படுத்தப்படும்?
  • ஓய்வூதியதாரர்கள் அதன் நேரடிப் பலனை எவ்வாறு பெறுவார்கள்?
ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்: 65 வயதிலேயே இனி 5%, 10%, 15% கூடுதல் ஓய்வூதியம்

Additional Pension For Central Government Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. தற்போது 80 வயதுக்கு பிறகு கிடைக்கும் அதிகரித்த ஓய்வூதியத்தின் பலன் 65 வயதிலிருந்து கிடைக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு மீண்டும் பரிந்துரைத்துள்ளது. இந்த திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய அளவிலான நிதி நிவாரணம் கிடைக்கும். 

Add Zee News as a Preferred Source

65 வயதுக்கு பிறகு கூடுதல் ஓய்வூதியம் கிடைத்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? வயது அடிப்படையிலான ஓய்வூதிய உயர்வு எவ்வாறு செயல்படுத்தப்படும்? ஓய்வூதியதாரர்கள் அதன் நேரடிப் பலனை எவ்வாறு பெறுவார்கள்? இந்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

Compassionate Allowance: வயதுக்கு ஏற்ப கருணைத் தொகையை அதிகரிப்பதற்கான திட்டம் எப்படி செயல்படும்?

ஓய்வூதியதாரர்களின் வயதுக்கு ஏற்ப கூடுதல் ஓய்வூதிய உயர்வை அமல்படுத்துமாறு நாடாளுமன்றக் குழு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. தற்போது, ​​80 வயதிற்குப் பிறகுதான் 20% கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கிறது. இது வயதிற்கு ஏற்ப அதிகரிக்கிறது. புதிய திட்டத்தின்படி, இந்த கூடுதல் ஓய்வூதியப்பலன் 65 வயதிலிருந்து தொடங்கக்கூடும்.

Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கு ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்

65 வயதுக்கு பிறகு கூடுதல் ஓய்வூதியத்தை வழங்கத் தொடங்க வேண்டும் என்ற நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஓய்வூதிய உயர்வு பின்வருமாறு இருக்கும்:

65 வயதில்: 5% கூடுதல் ஓய்வூதியம்
70 வயதில்: 10% கூடுதல் ஓய்வூதியம்
75 வயதில்: 15% கூடுதல் ஓய்வூதியம்
80 வயதில்: 20% கூடுதல் ஓய்வூதியம் (இது ஏற்கனவே உள்ளது)

Parliamentary Committee: நாடாளுமன்றக் குழு இந்த கோரிக்கையை எழுப்ப காரணம் என்ன?

கடந்த பல ஆண்டுகளாக அரசாங்கம் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டு வருவதாக நாடாளுமன்றக் குழு கண்டறிந்தது. இதுபோன்ற பரிந்துரைகள் இதற்கு முன்பும் செய்யப்பட்டன, ஆனால் அரசாங்கம் அதில் எந்த உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. ஓய்வூதியம் பெறுவோர் வயதாகும்போது, சரியான வயதில், நிதி உதவியைப் பெறும் வகையில், இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு குழு அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த விதி ஏற்கனவே மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது

இந்த விதி ஏற்கனவே பல மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது:

- இமாச்சலப் பிரதேசத்தில் மூத்த ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
- ராஜஸ்தான் அரசு சமீபத்தில் இந்தக் கொள்கையை அமல்படுத்தியுள்ளது.
- ஆனால் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் இன்னும் இந்த சலுகைக்காக காத்திருக்கிறார்கள்.

Pension: ஓய்வூதிய உயர்வு எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கும்?

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஓய்வூதியதாரர்கள் நேரடிப் பலனைப் பெறுவார்கள். சில உதாரணங்கள் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.

அடிப்படை ஓய்வூதியம்: ரூ.20,000

வயது: 65, அடிப்படை ஓய்வூதியம்: ரூ.20,000, அதிகரிப்பு: 5%,  புதிய ஓய்வூதியம்: ரூ.21,000
வயது: 70, அடிப்படை ஓய்வூதியம்: ரூ.20,000, அதிகரிப்பு: 10%,  புதிய ஓய்வூதியம்: ரூ.22,000
வயது: 75, அடிப்படை ஓய்வூதியம்: ரூ.20,000, அதிகரிப்பு: 15%,  புதிய ஓய்வூதியம்: ரூ.23,000
வயது: 80, அடிப்படை ஓய்வூதியம்: ரூ.20,000, அதிகரிப்பு: 20%,  புதிய ஓய்வூதியம்: ரூ.24,000

அடிப்படை ஓய்வூதியம்: ரூ.50,000

வயது: 65, அடிப்படை ஓய்வூதியம்: ரூ.50,000, அதிகரிப்பு: 5%,  புதிய ஓய்வூதியம்: ரூ.52,5000
வயது: 70, அடிப்படை ஓய்வூதியம்: ரூ.50,000, அதிகரிப்பு: 10%,  புதிய ஓய்வூதியம்: ரூ.55,000
வயது: 75, அடிப்படை ஓய்வூதியம்: ரூ.50,000, அதிகரிப்பு: 15%,  புதிய ஓய்வூதியம்: ரூ.57,5000
வயது: 80, அடிப்படை ஓய்வூதியம்: ரூ.50,000, அதிகரிப்பு: 20%,  புதிய ஓய்வூதியம்: ரூ.60,000

Central Government Pensioners: மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள்

மத்திய அரசின் மீது அழுத்தம் அதிகரிக்கும் நிலையில், மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் நல்ல செய்திக்காக காத்திருக்கிறார்கள். சில மாநில அரசுகள் ஏற்கனவே இந்த விதியை அமல்படுத்தியுள்ளதால், மத்திய அரசின் மீது இதை அமல்படுத்துவதற்கான அழுத்தமும் அதிகரித்துள்ளது. மூத்த குடிமக்கள் (Senior Citizens) வயதாகும்போது மருத்துவம் மற்றும் பிற செலவுகளுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. முதியோரின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் இதை பரிசீலிக்கும் என நம்பப்படுகின்றது.

மேலும் படிக்க | இந்த வங்கியில் வீட்டு கடன் இருக்கா? மார்ச் 1 முதல் EMI குறைந்துள்ளது

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: UPS அடிப்படையில் அதிரடி ஓய்வூதிய உயர்வு, கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News