EPS Pension: 9 மடங்கு அதிகரிக்கிறதா மாத ஓய்வூதியம்? வலுக்கும் போராட்டம், புதிய அப்டேட் இதோ

EPFO Update:இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய உயர்வுக்கான செய்தி எப்போது கிடைக்கும்? ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? இந்த தவல்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 4, 2025, 01:00 PM IST
  • ஓய்வூதிய உயர்வு இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு பல நன்மைகளை அளிக்கும்.
  • குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்குமா?
  • சமீபத்திய அப்டேட் இதோ.
EPS Pension: 9 மடங்கு அதிகரிக்கிறதா மாத ஓய்வூதியம்? வலுக்கும் போராட்டம், புதிய அப்டேட் இதோ

EPS Pension Latest News: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. கூடிய விரைவில் ஓய்வூதிய அதிகரிப்பு குறித்த அறிவிப்பு வர வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய உயர்வு

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய உயர்வுக்கான செய்தி எப்போது கிடைக்கும்? ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? இந்த தவல்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

Minimum Monthly Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்

இபிஎஸ் -இன் கீழ் கிடைக்கும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என நாடு முழுவதும் உள்ள ஊழியர் சங்கங்கள் அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மகாராஷ்டிராவில் உள்ள ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதிய உயர்வுக்காக போராட்டம் நடத்தினர். செவ்வாயன்று, EPFO ​​ஓய்வூதியதாரர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்பூர் பகுதியில் உள்ள உள்ளூர் அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாசிக் மாவட்ட EPFO ​​ஓய்வூதியதாரர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் தலைவர் ராஜு டெஸ்லே போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். EPFO ​​ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியத் தொகையை ரூ.1000 இல் இருந்து ரூ.9,000 ஆக உயர்த்த கோரி போராடினர். இந்தத் தொகை அவர்களின் பல ஆண்டு கால பங்களிப்புக்கு ஏற்றதாக இருக்கும் என்பது அவர்களது கருத்தாக உள்ளது.

EPS Pensioners: ஓய்வூதிய உயர்வு இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு பல நன்மைகளை அளிக்கும்

ஓய்வூதிய உயர்வு ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும். மேலும், நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவை சமளிக்க, அகவிலைப்படி கொடுப்பனவு, இலவச அரசு மருத்துவ சேவைகள் மற்றும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் சேர்ப்பது உள்ளிட்ட அத்தியாவசிய ஆதரவையும் போராட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.

Private Sector Employees: தனியார் துறை ஊழியர்கள்

EPFO வின் கீழ் இபிஎஃப் கணக்குகளில் பங்களிக்கும் தனியார் துறை ஊழியர்கள் நீண்ட காலமாக தங்கள் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்கக் கோரி வருகின்றனர், இது 2014 முதல் மாதத்திற்கு ரூ.1,000 ஆக உள்ளது. அதன் பிறகு, பணவீக்கம், செலவுகள் என அனைத்திலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் மாத ஓய்வூதியம் மட்டும் மாறாமல் அப்படியே உள்ளது.

ஓய்வூதியதாரர்கள் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1,000 லிருந்து ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என்றும், அதனுடன் டிஏ சலுகைகள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணை இருவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கோரி சுமார் 8 ஆண்டுகள் ஆகின்றன.

EPF Subscribers: இபிஎஃப் சந்தாதார்ரகளின் பங்களிப்பு

EPF உறுப்பினர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை இபிஎஃப் கணக்கில் (EPF Account) பங்களிக்கின்றனர். அதே அளவு பங்களிப்பை நிறுவனமும் அளிக்கின்றது. நிறுவனத்தின் பங்களிப்பில் 8.33 சதவீதம் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திற்கும் (EPS) மீதமுள்ள 3.67 சதவீதம் EPF திட்டத்திற்கும் செல்கின்றன.

EPFO குறைந்தபட்ச ஓய்வூதிய அதிகரிப்பு 2025

EPS-95 ஓய்வு பெற்றவர்களின் குழு, மத்திய பட்ஜெட் 2025 அறிவிப்புக்கு முன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து குறைந்தபட்ச மாதத்திற்கு ரூ.7,500 ஓய்வூதியம் அக உயர்த்துவதற்கான நீண்டகால கோரிக்கையை வலியுறுத்தியது. அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று நிதியமைச்சர் உறுதியளித்ததாக EPS-95 தேசிய போராட்டக் குழு தெரிவித்துள்ளது. 

இபிஎஃப் நிதிக்கு நான்கு தசாப்தங்களாக பங்களித்தவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1,000 அளிக்கப்படுவது நியாயம் இல்லை என்று கூறப்படுகின்றது. மேலும், அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு இடையில், இந்தக் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது. இதில் அரசு மும்முரமாக செயல்பட்டு வருவதாகவும், இதில் தொடர்புடைய தரப்புகளுக்கு இடையில் முழுமையான விவாதங்கள் நடத்தப்பட்டு, அதன் பிறகு EPFO ஓய்வூதிய உயர்வு குறித்த இறுதி முடிவு,எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | UPS vs NPS vs OPS: எதில் அதிக மாத ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும்? கணக்கீடு இதோ

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: இந்த ஊழியர்களுக்கு ஓய்வூதிய நன்மைகள் குறையுமா? நிதி அமைச்சர் அளித்த மாஸ் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News