Senior Citizen Savings Scheme: பணி ஓய்வு பெற்ற பிறகு, முதியவர்களுக்கு உறுதியான வருமான ஆதாரம் எதுவும் இருப்பதில்லை. பெரும்பாலானவர்களுக்கு வாழ்நாள் மூலதனமாக ஓய்வூதிய நிதி இருக்கும். அதை அவர்கள் தங்கள் வசதிக்கேற்பப் பயன்படுத்தி பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். இதன் மூலம் அவர்களது தொகை காலப்போக்கில் வளர்ந்து கொண்டே இருக்கும். பெரும்பாலான முதியவர்கள் முதலீட்டின் அடிப்படையில் எந்த வகையான ஆபத்தையும் எடுக்க விரும்புவதில்லை. அவர்கள் உத்தரவாதமான வருமானத்தைப் பெறக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்
பாதுகாப்பான வழியில் பணத்தை முதலீடு செய்ய எண்ணும் முதியவர்களுக்கு, தபால் அலுவலகத்தில் ஒரு திட்டம் நடத்தப்படுகிறது. அதில் அவர்களுக்கு நல்ல அளவு வட்டி வழங்கப்படுகிறது. திட்டத்தின் பெயர் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம், முதியவர்கள் விரும்பினால், வட்டியில் இருந்து மட்டும் ரூ.12,30,000 சம்பாதிக்கலாம். இதை எப்படி செய்வது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Senior Citizens: மூத்த குடிமக்களுக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்?
அஞ்சல் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் என்பது ஒரு வைப்புத் திட்டமாகும். இதில், ஒரு நிலையான தொகை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யப்படுகிறது. மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் ரூ.30,00,000 வரை முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு ரூ.1000 ஆகும். தற்போது, SCSS திட்டத்தில் டெபாசிட்களுக்கு 8.2 சதவீத வட்டி கிடைக்கிறது.
இந்த வழியில் நீங்கள் வட்டியிலிருந்து மட்டும் ரூ.12,30,000 பெறலாம்
மூத்த குடிமக்கள் வட்டியிலிருந்து மட்டும் ரூ.12,30,000 பெற முடியும். இந்தத் திட்டத்தில் நீங்கள் அதிகபட்சமாக ரூ.30,00,000 டெபாசிட் செய்யலாம். இந்தத் தொகையை ஒரு முதலீட்டாளர் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் 8.2% என்ற விகிதத்தில் ரூ.12,30,000 வட்டி கிடைக்கும். ஒவ்வொரு காலாண்டிலும் ரூ.61,500 வட்டியாக வரவு வைக்கப்படும். இந்த வழியில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகையாக மொத்தம் ரூ.42,30,000 பெறுவீர்கள்.
மறுபுறம், இந்தத் திட்டத்தில் முதலீட்டாலர் 5 ஆண்டுகளுக்கு ரூ.15 லட்சத்தை டெபாசிட் செய்தால், தற்போதைய 8.2 சதவீத வட்டி விகிதத்தின்படி, 5 ஆண்டுகளில் வட்டியாக மட்டும் ரூ.6,15,000 கிடைக்கும். காலாண்டு அடிப்படையில் வட்டியைக் கணக்கிட்டால், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரூ.30,750 வட்டி கிடைக்கும். இந்த வழியில், ரூ.15,00,000 மற்றும் வட்டித் தொகை ரூ.6,15,000 ஆகியவற்றைச் சேர்த்து, மொத்தம் ரூ.21,15,000 முதிர்வுத் தொகையாகப் பெறப்படும்.
இந்த திட்டத்தில் யார் முதலீடு செய்யலாம்?
60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட எவரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். VRS எடுக்கும் சிவில் துறை அரசு ஊழியர்களுக்கும், பாதுகாப்புத் துறையில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கும் சில நிபந்தனைகளுடன் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடைகிறது.
இந்தத் திட்டத்தின் பலன்களை 5 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர விரும்பினால், வைப்புத் தொகை முதிர்ச்சியடைந்த பிறகு, கணக்கு காலத்தை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளலாம். முதிர்ச்சியடைந்த 1 வருடத்திற்குள் இதை நீட்டிக்கலாம். முதிர்வு தேதியில் பொருந்தக்கூடிய விகிதத்தில் நீட்டிக்கப்பட்ட கணக்கில் வட்டி பெறப்படுகிறது. பிரிவு 80C இன் கீழ் SCSS இல் வரி விலக்கு சலுகை கிடைக்கிறது.
மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: HRA எவ்வளவு அதிகரிக்கும்? 7வது ஊதியக்குழுவில் எவ்வளவு அதிகரித்தது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









