)
Pensioners Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட விதிகளின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவையை முடித்த பிறகு தன்னார்வ ஓய்வூதியத்தைத் தேர்வுசெய்தால், விகிதாசார அடிப்படையில் தொகையை பெற (pro-rata assured payment) உரிமை உண்டு என்று பணியாளர் அமைச்சகம் செவ்வாயன்று தெரிவித்தது.
அதாவது, ஊழியர்கள் தன்னார்வ ஓய்வூதியத்தைத் தேர்வு செய்யும்போது உத்தரவாதமான ஊதியம் கிடைக்கும். அவர்களுக்கு ஓய்வூதியம் பெற உரிமை கிடைக்கும். இது தீபாவளிக்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பரிசாக கிடைத்துள்ளது.
UPS: மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை செப்டம்பர் 2 அன்று அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் மத்திய சிவில் சர்வீசஸ் விதிகள், 2025 ஐ அறிவித்துள்ளது. NPS இன் கீழ் ஒரு விருப்பமாக UPS ஐத் தேர்ந்தெடுத்த மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சலுகைகள் தொடர்பான சேவை விஷயங்களை ஒழுங்குபடுத்துவதே இந்த விதிகளின் முக்கிய நோக்கமாகும். இந்த விதிகளின் கீழ் பல முக்கிய அம்சங்களை பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, UPS -ஐ தேர்வு செய்யும் ஊழியர்கள், 20 ஆண்டுகள் சேவையை முடித்த பிறகு சேவையிலிருந்து தன்னார்வ ஓய்வுக்கான தேர்வை செய்யும் வசதி இதில் வழங்கப்படுகின்றது.
"ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 25 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையை முடித்த பின்னரே முழு உறுதியான ஊதியம் கிடைக்கும். இருப்பினும், 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவையை முடித்த பிறகு VRS (தன்னார்வ ஓய்வூதியத் திட்டம்) தேர்வுசெய்தால், உறுதியான ஊதியம் விகிதாசார அடிப்படையில் சந்தாதாரருக்கு செலுத்தப்படும். அதாவது, அவரது கணக்கில் சேர்க்கப்பட்டுள்ள நிதியிலிருந்து, விகிதாசார அடிப்படையில் அவருக்கு வழங்கப்படும்." என அமைச்சகம் தெரிவித்தது.
இந்த நன்மைகளும் கிடைக்கும்
இந்த தொகை ஓய்வு பெற்ற தேதிக்குப் பிறகுதான் ஊழியர்களுக்கு வழங்கப்படும். "தனிப்பட்ட நிதியில் 60 சதவீதத்தை இறுதியாகத் திரும்பப் பெறுதல் மற்றும் ஒவ்வொரு அரை ஆண்டு சேவைக்கும் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 1/10 பங்கு மொத்தப் பலன், ஓய்வூதியக் கிராஜுவிட்டி, விடுப்பு பணமாக்குதல், CGEGIS (மத்திய அரசு ஊழியர் குழு காப்பீட்டுத் திட்டம்) சலுகைகள் போன்ற பிற சலுகைகள் ஓய்வு பெறும்போது பெறலாம்" என்று அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
மேலும், VRS எடுத்த பிறகு, ஆனால் உறுதியான ஊதியம் தொடங்குவதற்கு முன்பு ஊழியர்கள் இறந்தால், சட்டப்பூர்வமாக திருமணமான வாழ்க்கைத் துணைக்கு ஊழியர் இறந்த தேதியிலிருந்து குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். இந்தத் திருத்தத்தை வரவேற்ற பலர், இது அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும், குறிப்பாக மிகவும் கடினமான சூழ்நிலைகளில் பணிபுரியும் துணை ராணுவப் படை வீரர்களுக்கு மிகவும் தேவையான நடவடிக்கை என்று கூறியுள்ளனர். 20 வருட வழக்கமான சேவையை முடித்த பிறகும் துறையில் பணியாற்ற முடியாத அனைத்து ஊழியர்களுக்கும் இது உதவும் என்று கூறப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ