Unified Pension Scheme: ‘ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்’ சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஓய்வூதியத் திட்டம் அடுத்த நிதியாண்டிலிருந்து அதாவது ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியது. மத்திய அரசு ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு (NPS) மாற்றாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.
Old Pension Scheme: மீண்டும் வலுத்த பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான கோரிக்கை
பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டு வர வேண்டும் என நீண்ட நாட்களாக ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் வகையில், பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதிய முறை ஆகிய இரு ஓய்வூதியத் திட்டங்களிலும் உள்ள முக்கிய அமசங்களை ஒன்றிணைத்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்பட்டது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் கடைசி சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது UPS மூலமும் ஊழியர்களுக்கும் அதே சலுகைகள் வழங்கப்படும்.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களின் பங்களிப்பு எவ்வளவு இருக்கும்?
இந்தத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் (DA) 10 சதவீதத்தை பங்களிக்க வேண்டும். அரசாங்கமும் 18.5 சதவீதத்தை பங்களிக்கும். இது தவிர, UPS இன் கீழ் ஒரு தனி இருப்பு நிதியும் அமைக்கப்படும். இதில் அரசாங்கம் கூடுதலாக 8.5 சதவீத பங்களிப்பை வழங்கும். மத்திய அரசு ஊழியர்களின் கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.
Pension: எவ்வளவு காலம் பணிபுருந்த பின் ஓய்வூதியம் கிடைக்கும்?
இந்தத் திட்டத்தின் கீழ், 10 முதல் 25 ஆண்டுகள் பணிக்காலத்தை நிறைவு செய்யும் ஊழியர்களுக்கு விகிதாசார ஓய்வூதியம் வழங்கப்படும். துரதிர்ஷ்டவசமாக ஒரு ஊழியர் இறந்தால், அவரது குடும்பத்திற்கு ஓய்வூதியத்தில் 60 சதவீதம் வழங்கப்படும். இது தவிர, பணியாளரின் ஓய்வு நேரத்தில் பணிக்கொடையுடன் ஒரு மொத்தத் தொகையும் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிக்காலத்தை முடித்த ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.10,000 ஓய்வூதியமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Pensioners: UPS செயல்படுத்தப்படுவதற்கு முன்பு ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களும் சலுகைகளைப் பெறலாம்
குறைந்தது 10 ஆண்டுகள் பணிக்காலத்தை முடித்த ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.10,000 ஓய்வூதியமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், 25 ஆண்டுகள் சேவையை முடித்த பிறகு ஓய்வு பெறும் ஊழியர்கள் மதிப்பிடப்பட்ட ஓய்வூதிய வயதிலிருந்து ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்களாவார்கள். இது தவிர, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு ஓய்வு பெற்ற ஊழியர்களும் இதன் சலுகைகளைப் பெறலாம். பொது வருங்கால வைப்பு நிதியின் (PPF) வட்டி விகிதங்களின் அடிப்படையில் கணக்கிட்டு, முந்தைய காலகட்டத்தின் நிலுவைத் தொகையுடன் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
மேலும் படிக்க | உங்கள் NPS கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது... ஆன்லைனில் அறியும் எளிய வழிமுறை
மேலும் படிக்க | EPFO EDLI Scheme: உறுப்பினர்களுக்கு பெரிய அப்டேட்.... 3 முக்கிய விதிகளில் மாற்றம்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









