ஏடிஎம் மூலம் பணம் எடுப்பவர்களுக்கு ஆப்பு.. ரிசர்வ் வங்கி முக்கிய முடிவு

ATM Fees Hiked New RBI Rules : நீங்கள் ஏடிஎம் கார்டை அடிக்கடி பயன்படுத்தும் நபரா? அப்போ இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். புதிய விதி என்னே என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 24, 2025, 04:19 PM IST
  • பரிமாற்றக் கட்டணம் என்றால் என்ன?
  • ஏடிஎம் கார்டு வழங்கிய வங்கிக்கு செலுத்தும் கட்டண தொகையாகும்.
  • ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டணம்.
ஏடிஎம் மூலம் பணம் எடுப்பவர்களுக்கு ஆப்பு.. ரிசர்வ் வங்கி முக்கிய முடிவு

ATM Fees Hiked : ஏடிஎம் கார்டு வைத்துள்ள இந்திய மக்களுக்காக (ATM card new rules) புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் தற்போது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி வருகிறது. அதன்படி மக்களை கவலைப் படுத்தும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கி ஏடிஎம் பரிவர்த்தனைகள் குறித்து முக்கிய முடிவு எடுத்துள்ளது. அதன்படி ஏடிஎம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். அந்தவகையில் இனி நிதி பரிவர்த்தனைகளுக்கு ரூ.2 கூடுதல் கட்டணம் மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.1 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 

Add Zee News as a Preferred Source

மேலும் இந்த ஏடிஎம் பரிமாற்றக் கட்டண உயர்வானது வருகிற மே 1, 2025 முதல் அமலுக்கு வருகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடி முடிவானது, குறைவான ஏடிஎம்களைக் கொண்ட சிறிய வங்கிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

பரிமாற்றக் கட்டணம் என்றால் என்ன (ATM interchange fee) என்பதை தெரிந்துகொள்ளலாம். ஏடிஎம் பரிமாற்றக் கட்டணம் என்பது, உங்களுக்கு ஏடிஎம் கார்டு வழங்கிய வங்கிக்கு நீங்கள் செலுத்தும் கட்டண தொகையாகும். அதாவது நீங்கள் பணம் எடுக்க வங்கி ஏடிஎம் அட்டையை பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதற்கான பயன்பாட்டு கட்டணமாக உங்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படும் என்பதாகும்.

முன்னதாக, கடந்த ஜூன் 2021 இல், ரிசர்வ் வங்கி ஏடிஎம் பரிமாற்றக் கட்டணத்தை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் புதிய விதிமுறைகளின்படி, நிதி பரிவர்த்தனைகளுக்கு அதாவது ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டணம் ரூ.17 ஆக இருந்த நிலையில் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு அதாவது இருப்பு விசாரணை அல்லது பிற சேவைகளுக்கு பரிமாற்றக் கட்டணம் ரூ.6-ல் இருந்து ரூ.7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த மார்ச் 13, 2025 அன்று ஏடிஎம் பரிமாற்றக் கட்டணங்களை அதிகரிப்பது குறித்து நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India - NPCI) வங்கிகள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு இது குறித்த தகவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

ஏடிஎம் தொழில் கூட்டமைப்பு (ATM Industry - CATMI) இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India - RBI) மற்றும் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) ஆகியவற்றை ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்காக (withdrawing money from ATM) வாடிக்கையாளர்கள் செலுத்தும் பரிமாற்றக் கட்டணத்தை அதிகரிக்கக் கோரியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இனி பொதுமக்கள் ஏடிஎம் மையங்களில் (ATM centres) இருந்து பணம் வித்ட்ரா (Cash Withdrawals) செய்யதால் அதிக கட்டணத்தை வழங்க வேண்டியதிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே தற்போது இந்தியாவில் உள்ள பல ​​வங்கிகள் தங்களுடைய சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஐந்து இலவச பரிவர்த்தனைகளை வழங்கி வருகின்றது. அதன்படி ஏடிஎம் கார்டின் சொந்த வங்கியில் இருந்து பணம் எடுக்க 5 இலவச பரிவர்த்தனைகளும், மற்ற வங்கியின் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க மூன்று இலவச பரிவர்த்தனைகளும் அனுமதிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | தனியார் துறை ஊழியர்களுக்கு பம்பர் அப்டேட்: 9 மடங்கு அதிகரிக்கிறதா மாத ஓய்வூதியம்? புதிய அப்டேட்

மேலும் படிக்க | EPFO: PF கணக்கில் இருந்து முழு பணத்தையும் எடுக்கும் இளம் சந்தாதார்கள்... காரணம் இது தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News