)
Commuted Pension Latest News: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? உங்கள் வீட்டில் மத்திய பணிகளில் இருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள் உள்ளார்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். 8வது ஊதியக்குழுவில் ஓய்வூதியதாரர்களுக்கான கம்யூடட் பென்ஷன் விதிகளில் ஏற்படக்கூடிய முக்கிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Central Government Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்
8வது ஊதியக் குழு 2026 ஆம் ஆண்டு மத்தியில் அல்லது 2027 ஆம் ஆண்டு துவக்கத்தில் அமலுக்கு வர வாய்ப்புள்ளது. எனினும், ஜனவரி 1, 2026 முதல் இதன் நன்மைகளின் அரியர் தொகை ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் கிடைக்கும். இது லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள உயர்வுக்கு வழி வகுக்கும்.
அரசாங்கம் ஜனவரி 16, 2025 அன்று 8வது ஊதியக் குழுவை அறிவித்தது. இருப்பினும், இன்னும் அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் பணி நிறைவடையவில்லை. மேலும் குறிப்பு விதிமுறைகளும் (Terms of Reference) இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ToR-இல் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளில் ஓய்வூதியதாரர்களுக்கு கம்யூடட் விதிகளில் கோரப்பட்டுள்ள மாற்றம் முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
ஓய்வூதியதாரர்களுக்கு அதிகரிக்கும் பணத்தேவை
வயது அதிகரிக்கும் போது, ஓய்வூதியதாரர்களின் தேவைகளும் அதிகரிக்கின்றன. இவற்றில் மருத்துவ செலவுகள் முக்கிய இடத்தை பெறுகின்றன. பணவீக்கத்தை சமாளிக்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்படுகின்றது. வயோதிகத்தில் அதிகரிக்கும் கம்யூடட் ஓய்வூதிய மீட்பு காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக ஆணையம் குறைக்கும் என்று ஓய்வூதிட்யதாரர்கள் நம்புகின்றனர்.
கோரிக்கைகளின் பட்டியலை அளித்த தேசிய கவுன்சில்
மத்திய அரசு ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய கவுன்சில் (JCM) - ஊழியர்களின் பக்கம், 8வது ஊதியக்குழுவிற்கான கோரிக்கைகளின் பட்டியலை அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ளது. ஓய்வூதிய மாற்று காலத்தை 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்பது அந்தப் பட்டியலில் உள்ள முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்.
மார்ச் 11, 2025 அன்று பணியாளர் நலத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற SCOVA (தன்னார்வ நிறுவனங்கள் மீதான நிலைக்குழு) கூட்டத்திலும் இந்தக் கருத்து எழுப்பப்பட்டது.
கம்யூடட் பென்ஷன் என்றால் என்ன?
கம்யூடட் பென்ஷனை மாற்றப்பட்ட ஓய்வூதியம் என்றும் குறிப்பிடலாம். மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நேரத்தில், ஊழியர்கள் தங்கள் மாதாந்திர ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை மொத்தத் தொகையாக எடுத்துக்கொள்ள நெகிழ்வுத்தன்மையை பெறுகிறார்கள். இது கம்யுடேஷன் ஆஃப் பென்ஷன் என அழைக்கப்படுகிறது. பின்னர் அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் அந்தத் தொகையை மீட்டெடுக்க அவர்களின் ஓய்வூதியத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையைக் கழிக்கும். தற்போது, ஓய்வூதியத்தில் தொகை கழிக்கப்படும் கால அளவு 15 ஆண்டுகளாக உள்ளது. அதன் பிறகு முழு ஓய்வூதியம் கிடைக்கத்தொடங்குகிறது. இதை 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் கோரி வருகின்றனர்.
ஓய்வூதிய மீட்பு காலத்தை 12 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏன் உள்ளது?
- ஓய்வூதிய மீட்பு காலம் 15 ஆண்டுகளுக்குப் பதிலாக 12 ஆண்டுகளாக மாற்றப்பட்டால், ஓய்வு பெற்ற ஊழியர்கள் 3 ஆண்டுகள் முன்னதாகவே தங்கள் முழு ஓய்வூதியத்தையும் பெறத் தொடங்குவார்கள்.
- இதன் மூலம் அவர்கள் தங்களது முதுமையில், மருத்துவச் செலவுகள், சமூகப் பொறுப்புகள் மற்றும் குடும்பச் செலவுகளை சிறப்பாகக் கையாள முடியும்.
- வயோதிகத்தில் அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள் மற்றும் வாழ்க்கைச் செலவுகளைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் ஓய்வூதியத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை கழிக்கப்படுவதற்கான கால அளவு 15 ஆண்டுகளாக இருப்பது மிக அதிகம் என்று தொழிற்சங்கங்களும் ஓய்வூதியதாரர்களும் வாதிடுகின்றனர்.
- 12 ஆண்டு காலம் என்பது அரசாங்கத்தின் வருவாயில் அதிக சுமையை ஏற்படுத்தாது.
ஓய்வூதியதாரர்களின் இந்த முக்கிய கோரிக்கை 8வது ஊதியக்குழுவில் பரிசீலிக்கப்பட்டு இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ