)
Pensioners Latest News: மத்திய அரசு ஓய்வூதியதாரரா நீங்கள்? உங்கள் வீட்டில் யாரேனும் மத்திய பணிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை (DoPPW), நாடு முழுவதும் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ் (DLC) பிரச்சாரத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்தப் பிரச்சாரம் நவம்பர் 1 முதல் நவம்பர் 30, 2025 வரை நாடு முழுவதும் 1,600 மாவட்டங்கள் மற்றும் துணைப் பிரிவு தலைமையகங்களில் நடத்தப்படும்.
இந்த சிறப்பு முகாமின் நோக்கம், ஓய்வூதியதாரர்கள் தங்கள் வீட்டிலோ, வீட்டிற்கு அருகிலேயே இந்த வசதியைப் பெறுவதும், வங்கிகள் அல்லது அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியத்தை நீக்குவதும் ஆகும். இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (IPPB) மற்றும் முக்கிய ஓய்வூதிய விநியோக வங்கிகள் இதில் ஒத்துழைக்கின்றன.
கடந்த ஆண்டு, மூன்றாவது டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ் பிரச்சாரத்தில் 1.62 கோடி DLC -கள் டெபாசிட் செய்யப்பட்டன. இந்த பிரச்சாரம் 845 நகரங்களில் தொடங்கப்பட்டது.
80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசாங்கம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த மூத்த குடிமக்கள் அக்டோபர் 1, 2025 முதல் வாழ்க்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மூத்த ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வசதியாக, அக்டோபர் மாதம் முதல் DLC சேவைகளுக்கு தங்கள் கிளைகளைத் தயாராக வைத்திருக்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் முதலே இதற்கான வசதி அளிக்கப்பட்டால் குளிர்காலத்தின் தொடக்கத்தில் முதியவர்கள் மீண்டும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய சிக்கல் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே தங்கள் மொபைல் போன்களைக் கொண்டு வாழ்க்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கலாம். முக அங்கீகாரத்தின் (Face Authentication) மூலம் இதை செய்ய முடியும். இந்த முறை நடக்க முடியாத முதியவர்கள் அல்லது தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். இந்த வசதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இங்கே காணலாம்.
முதலில், உங்கள் ஸ்மார்ட்போனில் கூகிள் பிளே ஸ்டோருக்குச் சென்று “ஆதார் ஃபேஸ் ஆர்டி (Aadhaar Face RD)” செயலியை நிறுவவும். இந்த செயலி UIDAI ஆல் வெளியிடப்பட்டது. முகத்தை ஸ்கேன் செய்ய இது தேவைப்படுகிறது. இதற்குப் பிறகு “Jeevan Pramaan” என்பதற்குச் செல்ல வேண்டும். இது டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை உருவாக்கப் பயன்படுத்தப்படும்.
இரண்டு செயலிகளும் நிறுவப்பட்டதும், ‘ஜீவன் பிரமான்’ செயலியைத் திறக்கவும். இங்கே முதலில் ஆபரேட்டர் பதிவைச் செய்ய வேண்டும். இதில், ஆதார் எண், மொபைல் எண், மின்னஞ்சல் போன்ற தகவல்களை உள்ளிட்டு, OTP மூலம் சரிபார்ப்பை முடிக்க வேண்டும்.
ஆபரேட்டர் பதிவுக்குப் பிறகு, இப்போதுதான் முக்கியமான பணி தொடங்கும். ஓய்வூதியதாரர் விவரங்களை நிரப்பிய பிறகு, செயலி உங்கள் முகத்தை அடையாளம் காணும். ஸ்கேன் செய்வதற்கு முன் முக்கியமான வழிமுறைகள் திரையில் தோன்றும், அவற்றை கவனமாகப் படித்து ஸ்கேன் செய்ய அனுமதிக்கவும். ஸ்கேன் செய்து முடிந்ததும், வெற்றிகரமான DLC சமர்ப்பிப்புச் செய்தி திரையில் தோன்றும். அதில் பிரமான் ஐடி மற்றும் PPO எண் ஆகியவை இருக்கும். இந்த ஐடி மூலம் வலைத்தளத்தைப் பார்வையிட்டு உங்கள் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ