EPF உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்: ஓய்வூதியம், ஊதிய உச்சவரம்பில் மெகா ஏற்றம்

EPFO Latest News: ஊதிய உச்சவரம்பை அரசு ரூ.21,000 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், அதிகமான ஊழியர்கள் EPF மற்றும் EPS இன் பலன்களைப் பெற முடியும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 17, 2025, 03:05 PM IST
  • ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்.
  • இபிஎஃப் உறுப்பினர்களுக்கு என்ன மாற்றம் ஏற்படும்?
  • உங்கள் சம்பளத்தில் இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
EPF உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்: ஓய்வூதியம், ஊதிய உச்சவரம்பில் மெகா ஏற்றம்

EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அவர்களது நீண்ட நாள் கோரிக்கை ஒன்று இன்னும் சில நாட்களில் நிறைவேற்றப்படக்கூடும். EPFO -வின் மூலம் இதற்கான புதிய வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் ஊதிய வரம்பை ரூ.15,000 -இலிருந்து ரூ.21,000 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகின்றது. அதை குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. 

Add Zee News as a Preferred Source

EPFO Wage Ceiling Hike: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்

அரசாங்கம் ஊதிய உச்சவரம்புக்கான விதிகளில் சில புதிய மாற்றங்களைச் செய்யப் போகிறது. தற்போது, ​​ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ், பணியாளரும் நிறுவனமும் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை பங்களிக்கின்றனர். இதற்கான சம்பள வரம்பு ரூ.15,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இப்போது அரசாங்கம் இந்த வரம்பை மாற்றத் தயாராகி வருகிறது. ஊதிய உச்சவரம்பை அரசு ரூ.21,000 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், அதிகமான ஊழியர்கள் EPF மற்றும் EPS இன் பலன்களைப் பெற முடியும். EPFO சம்பள வரம்பை ரூ.15,000 லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றம் செயல்படுத்தப்பட்டால், அதன் தாக்கம் லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது இருக்கும். இந்த மாற்றத்தை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கான விதிகள் என்ன?

EPFO-வின் தற்போதைய விதிகளின்படி, ரூ.15,000 அல்லது அதற்கும் குறைவான அடிப்படை சம்பளம் உள்ள ஊழியர்கள் EPF (ஊழியர் வருங்கால வைப்பு நிதி) மற்றும் EPS (ஊழியர் ஓய்வூதியத் திட்டம்) ஆகியவற்றின் பலன்களுக்குத் தகுதியுடையவர்கள். பணியாளர் மற்றும் முதலாளி இருவரும் சம்பளத்தில் 12% ஐ EPF-க்கு பங்களிக்க வேண்டும். முதலாளியின் 12% பங்களிப்பில், 8.33% EPS (ஓய்வூதியத் திட்டம்) க்குச் செல்கிறது. இந்த தொகை அதிகப்பட்சமாக ரூ.1,250 வரை இருக்கலாம் என்ற விதி உள்ளது.

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு என்ன மாற்றம் ஏற்படும்?

அரசாங்கம் ஊதிய உச்சவரம்பை ரூ.15,000 -இலிருந்து ரூ.21,000 ஆக உயர்த்தினால், அது என்ன மாற்றங்களைக் கொண்டுவரும் என இங்கே காணலாம்.

- EPS ஓய்வூதியத் திட்டத்திற்கு அதிக பணம் செல்லும்: தற்போது, ​​முதலாளி / நிறுவனம் EPS-க்கு ரூ.1,250 பங்களிக்கின்றன. ஆனால் இந்த வரம்பு அதிகரிக்கப்பட்டால், அது ரூ.1,749 ஆக மாறும். அதாவது பணி ஓய்வுக்குப் பிறகு ஊழியர்களுக்கு அதிக ஓய்வூதியம் கிடைக்கும்.

- EPF-ல் அதிக பணம் டெபாசிட் செய்யப்படும்: ரூ.15,000 -க்கு மேல் சம்பளம் பெற்ற ஆனால் EPF விலக்கு குறைவாக இருந்த ஊழியர்களின் முழு பங்களிப்பும் இப்போது அவர்களின் சம்பளத்தின் அடிப்படையில் இருக்கும்.

- இந்தத் திட்டத்தின் கீழ் அதிகமான ஊழியர்கள் வருவார்கள்: முன்னதாக, ரூ.15,000 க்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் EPS இன் பலன்களைப் பெற முடியாது. ஆனால் இப்போது ஊதிய உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டால், ரூ.21,000 வரை சம்பளம் வாங்கும் ஊழியர்களும் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்.

உங்கள் சம்பளத்தில் இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

கையில் கிடைக்கும் சம்பளத்தில் இதன் தாக்கம் இருக்கும்: ஊதியத்தில் PF கழிக்கப்படும் அளவு அதிகரிக்கக்கூடும் என்பதால், உங்கள் நெட் இன் ஹேண்ட் சம்பளம் சற்று குறையக்கூடும். ஆனால் அதன் பலன்கள் ஓய்வு பெறும் நேரத்தில் கிடைக்கும்.

பணி ஓய்வுக்கு பிறகு அதிக சேமிப்பு இருக்கும்: EPF மற்றும் EPS இல் அதிக விலக்குகள் இருக்கும். இது வயதான காலத்தில் அதிக ஓய்வூதியம் மற்றும் சேமிப்புக்கு வழிவகுக்கும்.

நிறுவனத்தின் மீதான சுமை அதிகரிக்கும்: நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பாக அதிக பணத்தை செலுத்த வேண்டியிருக்கும். இதன் காரணமாக சம்பள அமைப்பில் சில மாற்றங்களைக் காணலாம்.

இந்த மாற்றம் எப்போது நிகழும்?

இதுவரை EPFO ​​அல்லது அரசு இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் இது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அரசாங்கம் இது குறித்து ஒரு முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீண்ட காலமாக, தொழிலாளர் சங்கங்களும் ஓய்வூதியதாரர்களும் ஊதிய வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | PM Internship Scheme: மாணவர்களுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை... ஏப்ரல் 22 வரை விண்ணப்பிக்கலாம்

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: வரலாறு காணாத ஊதிய உயர்வு.... முக்கிய பங்காற்றும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News