PF உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்: புதிய திட்டம், நிலையான வட்டி... மத்திய அரசின் மாஸ்டர் பிளான்

EPFO Interest Rate: இபிஎஃப்ஓ வட்டி விகிதம் தொடர்பாக ஒரு சமீபத்திய அப்டேட் கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 19, 2025, 10:40 AM IST
  • இபிஎஃப் நிலையான வட்டி விகிதம்.
  • இதனால் இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்?
  • இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அதிகரிக்கும் வசதிகள்.
PF உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்: புதிய திட்டம், நிலையான வட்டி... மத்திய அரசின் மாஸ்டர் பிளான்

EPFO Update: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. இது இபிஎஃப் தொகைக்கு கிடைக்கும் வட்டி விகிதம் தொடர்பானது. இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு கிடைக்கும் வட்டிக்காக இபிஎஃப் சந்தாதாரர்கள் காத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் இபிஎஃப்ஓ வட்டி விகிதம் தொடர்பாக ஒரு சமீபத்திய அப்டேட் கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அதிகரிக்கும் வசதிகள்

சமீப காலங்களில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்கி அவர்களுக்கான வசதிகளை அதிகரிக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் தாக்கம் இபிஎஃப் உறுப்பினர்களை பாதிக்காமல், அவர்களது நிதி நன்மைகளை காக்க இப்போது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

EPF Fixed Interest Rates: இபிஎஃப் நிலையான வட்டி விகிதம்

EPFO ​​உறுப்பினர்களுக்கு நிலையான வட்டி விகிதங்களை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதற்காக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஒரு உள் ஆய்வை நடத்தி வருகிறது. இதன் ஒரு அங்கமாக அரசாங்கம் EPFO-விற்குள் ஒரு இருப்பு நிதியை உருவாக்கவும் வாய்ப்பு உள்ளது.

EPF Subscribers: இதனால் இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்?

இந்த நடவடிக்கையால் சுமார் 6.5 கோடி உறுப்பினர்கள் பயனடையக்கூடும் என்று அதிகாரிகள் கூறியதாக அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் இபிஎஃப் பங்களிப்பு (EPF Contribution) வெவ்வேறு திட்டங்களில் முதலீடு செய்யப்படுகின்றன. சந்தையில் சாதகமற்ற சூழல் இருந்தால், சந்தை ஏற்ற இறக்கங்கள் உறுப்பினர்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வயப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில், உறுப்பினர்களின் வருமானம் சில நேரங்களில் குறைவாகவும், சில நேரங்களில் அதிகமாகவும் இருக்கலாம்.

நிலைப்படுத்தலுக்கான ஒரு நிதி உருவாக்கப்பட்டால், உறுப்பினர்கள் தங்கள் இபிஎஃப் தொகையைப் (EPF Amount) பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. மேலும் சந்தையில் ஏற்ற இறக்கம் இருந்தாலும், அவர்களுக்கு ஒரு நிலையான வருமானம் கிடைக்கும்.

EPFO, வட்டியாக திரட்டப்படும் அதிகப்படியான தொகையை, இந்த நிதியை உருவாக்கப் பயன்படுத்தக்கூடும். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தத் திட்டம் குறித்து முடிவு எடுக்கப்படலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. EPFO வின் மத்திய அறங்காவலர் குழு (CBT) இதற்கு ஒப்புதல் அளித்தால், அடுத்த ஆண்டு தொடங்கும் நிதியாண்டில் இதை செயல்படுத்தக்கூடும்.

Central Board of Trustees: மத்திய அறங்காவலர் குழுவின் முக்கிய சந்திப்பு

EPFO-வின் CBT கூட்டம் பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் பிஎஃப் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் குறித்த முடிவும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும் என்று உறுப்பினர்கள் எதிர்பார்க்கின்றனர். இருப்பினும், சில குறிப்பிட்ட காரணங்களால் இபிஎஃப் வட்டி விகிதம் இப்போது இருக்கும் 8.25% -இலேயே தொடரலாம் என்றும் ஒரு சாரார் கூறி வருகின்றனர். வட்டி விகிதத்திற்கான முன்மொழிவை EPFO ​​வழங்குகிறது. இது CBT கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, பின்னர் நிதி அமைச்சகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப்படும். ஒப்புதல் கிடைத்தவுடன் இது அமலுக்கு வரும்.

மேலும் படிக்க | விவசாயிகளுக்கு அரசின் பரிசு: கிசான் கிரெட் கார்டு வரம்பு உயர்வு, இனி அதிக கடன் கிடைக்கும்

மேலும் படிக்க | ஓய்வூதியம் கிடையாதா... கவலையை விடுங்கள்... வந்துவிட்டது LIC ஸ்மார்ட் பென்ஷன் திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News