EPFO Update: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு மிக முக்கியமான செய்தி ஒன்று உள்ளது. வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO பங்களிப்புகளை வசூலிப்பதற்காக, EPFO சமீபத்தில் 15 கூடுதல் பொது/தனியார் துறை வங்கிகளுடன் ஒப்பந்தங்களை செய்துள்ளது.
"புதிதாக பட்டியலிடப்பட்ட 15 வங்கிகள், ஆண்டுக்கு ரூ. 12,000 கோடியை நேரடியாக வசூல் செய்ய உதவும். மேலும் இந்த வங்கிகளில் கணக்குகளை பராமரிக்கும் முதலாளிகள் / நிறுவனங்களுக்கு நேரடி அணுகலை வழங்கும். சட்டத்தின் கீழ் வரும் முதலாளிகள் / நிறுவனங்கள் தங்கள் மாதாந்திர பங்களிப்புகளை செலுத்த, EPFO ஏற்கனவே 17 வங்கிகளை பட்டியலிட்டுள்ளது. இதன் மூலம் வங்கிகளின் எண்ணிக்கை மொத்தம் 32 ஆக உயர்ந்துள்ளது," என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
EPFO: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு
புதிய வங்கிகளின் சேர்க்கை, முதலாளிகள் / நிறுவனங்களின் EPFO வசூல்/நிலுவைத் தொகை செலுத்துதல்களை தடையின்றி ஒருங்கிணைக்கும். இது முதலாளிகளுக்கு / நிறுவனங்களுக்கு அக்ரிகேட்டர் கட்டணம் செலுத்தும் வழிமுறையின் தேவையை மேலும் குறைக்கும். இது EPFO மற்றும் முதலாளிகள் / நிறுவனங்கள் என இரு தரப்பும் பரிவர்த்தனை தாமதங்களைக் குறைக்கவும், அதன் மூலம் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்தவும் உதவும் என்று அரசு வெளியீடு தெரிவித்துள்ளது.
List of Banks: EPFO பங்களிப்புகளை வசூலிக்க பட்டியலிடப்பட்டுள்ள 32 வங்கிகளின் முழுமையான பட்டியலை இங்கே காணலாம்
1. ஆக்சிஸ் வங்கி
2. பந்தன் வங்கி
3. பாங்க் ஆஃப் பரோடா
4. பாங்க் ஆஃப் இந்தியா
5. மகாராஷ்டிரா வங்கி
6. கனரா வங்கி
7. செண்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா
8. சிட்டி யூனியன் வங்கி
9. டெவெலப்மெண்ட் பாங்க ஆஃப் சிங்கப்பூர்
10. டெவெலப்மெண்ட் கிரெடிட் பேங்க்
11. பெடரல் வங்கி
12. HDFC வங்கி
13. HSBC வங்கி
14. ICICI வங்கி
15. IDBI வங்கி
16. IDFC ஃபர்ஸ்ட் வங்கி
17. இந்தியன் வங்கி
18. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
19. இண்டஸ்இண்ட் வங்கி
20. ஜம்மு & காஷ்மீர் வங்கி
21. கர்நாடகா வங்கி
22. கரூர் வைஸ்யா வங்கி
23. கோடக் மஹிந்திரா வங்கி
24. பஞ்சாப் நேஷனல் வங்கி
25. RBL வங்கி
26. சவுத் இந்தியன் வங்கி
27. ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி
28. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
29. தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி
30. யூகோ வங்கி
31. யூனியன் வங்கி
32. யெஸ் வங்கி
வங்கிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது EPFO-க்கு நிதி நன்மைகளை வழங்கும். ஏனெனில், எம்பேனல் செய்யப்பட்ட வங்கிகள் மூலம் அனுப்பப்படும் நிலுவைத் தொகை, T+1 நாளில் முதலீட்டிற்குக் கிடைக்கும். ஆனால், அக்ரிகேட்டர் மூலம் கிடைக்கும் தொகை T+2 நாட்களில்தான் கிடைக்கும்.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கும் பலன் கிடைகும்
இது எம்பேனல் செய்யப்படாத வங்கிகளில் வைத்திருக்கும் உறுப்பினர்களின் கணக்குகளின் பெயர் சரிபார்ப்புக்கு EPFO செலுத்த வேண்டிய செலவைக் கணிசமாகக் குறைக்கும். EPF உறுப்பினர்களும் இந்த எம்பேனல் மூலம் பெருமளவில் பயனடைவார்கள்.
இப்போது உறுப்பினர்கள் இந்த வங்கிகளில் பராமரிக்கப்படும் தங்கள் வங்கிக் கணக்குகளை சீட் செய்யும் போது, இவை மற்ற வழிகளில் செலுத்தப்படாமல், இந்த வங்கிகள் மூலம் விரைவான முறையில் சரிபார்க்கப்படும்.
இந்த முயற்சி வணிகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் முதலாளிகள் / நிறுவனங்களுக்கு சேவை வழங்குவதை எளிதாக்குதல் ஆகிய இரண்டையும் மேம்படுத்தும். மேலும் இந்த நன்மைகளின் பலன் இபிஎஃப் சந்தாதாரர்களுக்கும் கிடைக்கும். இது அவர்களின் பங்களிப்புகளை செலுத்துவதில் உள்ள தாமதங்களைக் குறைக்கும். மேலும், நிலுவைத் தொகையை செலுத்துவது தொடர்பான குறைகளுக்காக முதலாளிகள் / நிறுவனங்கள் இந்த வங்கிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும் இது உதவும் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மேலும் கூறியது.
மேலும் படிக்க | இனி ATM இல் கிழிந்த நோட்டு வந்தால் பதட்டம் வேண்டாம்.. என்ன செய்யலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









