EPFO Latest News: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO -இன் சமீபத்திய சில முக்கிய புதுப்பிப்புகளை இங்கே காணலாம்.

EPFO Update: மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யும் நபரா நிங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO -இன் சமீபத்திய சில முக்கிய புதுப்பிப்புகளை இங்கே காணலாம்.
EPFO: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மேலும் 15 பொது மற்றும் தனியார் துறை வங்கிகளுடன் ஒரு கூட்டாண்மையில் ஈடுபட்டுள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டாவியா புதுதில்லியில் இந்த கூட்டாண்மையில் கையெழுத்திட்டார். இந்த 15 வங்கிகள் கூடுதலாக ஆண்டு வசூலில் சுமார் 12,000 கோடி ரூபாய் நேரடி செலுத்துதலை எளிதாக்கும். இதனால் இந்த வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் முதலாளிகள் / நிறுவனங்கள் நேரடியாக இந்த சேவைகளை அணுக முடியும்.
இபிஎஃப்ஓ -இன் கீழ் உள்ள முதலாளிகள் / நிறுவனங்கள் தங்கள் மாதாந்திர பங்களிப்புகளைச் செய்வதில் உதவுவதற்காக, EPFO ஏற்கனவே 17 வங்கிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது. தற்போது மேலும் 15 வங்கிகள் சேர்ந்துள்ளதால், வங்கிகளின் எண்ணிக்கை மொத்தம் 32 ஆக உயர்ந்துள்ளது.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்கள் பற்றி கூறிய அமைச்சர்
மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டாவியா தனது உரையில், EPFO போன்ற நிறுவனங்கள் புதிய இந்தியாவின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன என்பதை எடுத்துரைத்தார். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்த அமைப்பின் முக்கிய பங்கை அவர் வலியுறுத்தினார், EPFO சுமார் 8 கோடி செயலில் உள்ள உறுப்பினர்களுக்கும் 78 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கும் சேவை செய்கிறது. இந்த அமைப்பு லட்சக்கணக்கானவர்களுக்கு அத்தியாவசிய சமூக பாதுகாப்பு சலுகைகளை வழங்குகிறது.
EPF Claim Settlement
EPFO-வின் தற்போதைய பரிணாமம் மற்றும் காலத்திற்கு ஏற்ற மற்றங்களை பற்றி அவர் எடுத்துரைத்தார். குறிப்பாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட EPFO 2.01, க்ளெய்ம் தீர்வு செயல்முறையை பெரிதும் மேம்படுத்திய ஒரு சக்திவாய்ந்த IT அமைப்பாக உள்ளதாக அவர் தெரிவித்தார். 2024-25 நிதியாண்டில், EPFO 6 கோடிக்கும் அதிகமான க்ளெய்ம்களை செட்டில் செய்து ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது என்றும், இது முந்தைய ஆண்டில் (2023-24) தீர்க்கப்பட்ட 4.45 கோடி க்ளெய்ம்களை விட 35 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாடிக்கையாளர் திருப்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக டாக்டர் மண்டவியா குறிப்பிட்டார். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, EPFO 3.0-ஐ நோக்கி தீவிரமாக முன்னேறி வருகிறது என்றும்,, அதன் சேவைகளை வங்கிகள் வழங்குவதைப் போலவே அணுகக்கூடியதாகவும் திறமையானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று, அவர் தெரிவித்தார்.
EPFO Interest Rate: 8.25 சதவீத வட்டி விகிதம்
EPFO தற்போது அதன் பயனாளிகளுக்கு 8.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
EPFO-வில் சேர்க்கப்பட்டுள்ள புதிய வங்கிகள்
EPFO-வில் இணைந்த புதிய வங்கிகளில் HSBC வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி, ஃபெடரல் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, RBL வங்கி, சவுத் இந்தியன் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, IDFC ஃபர்ஸ்ட் வங்கி, UCO வங்கி, கர்நாடகா வங்கி, சிங்கப்பூர் மேம்பாட்டு வங்கி, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, மேம்பாட்டு கடன் வங்கி மற்றும் பந்தன் வங்கி ஆகியவை அடங்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ