)
EPFO Latest News: இபிஎஃப் உறுப்பினர்களும், ஓய்வூதியதாரர்கள் சங்கங்களும் நீண்ட காலமாக குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன. இவர்களுக்கு கூடிய விரைவில் ஒரு நல்ல செய்தி கிடைக்கவுள்ளது. இபிஎஸ் ஓய்வூதியம் அதிகரிக்குமா? இதற்கான அறிவிப்பு எப்போது வரும்? இந்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
நாடு முழுவதும் உள்ள கோடிக்கனக்கான ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய வருமானத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசு, ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS 95) கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்கும் திட்டத்தை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. தற்போது, குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.1,000 ஆக உள்ளது.
குறைந்தபட்ச மாத ஒய்வூதியம் இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. அதன் பிறகு, வாழ்க்கைச் செலவுகள், பணவீக்கம் என பலவற்றில் பல வித மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும், இபிஎஸ் குறைந்தபட்ச ஓய்வூதியம் பல ஆண்டுகளாக மாறாமல் அப்படியே உள்ளது.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியா, இந்த விஷயம் மதிப்பாய்வில் உள்ளது என்றும் விரைவில் மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு வைக்கப்படும் என்றும் கூறினார். ஓய்வூதியதாரர்களுக்கு, குறிப்பாக ஓய்வுக்குப் பிந்தைய வாழ்வாதாரத்திற்காக EPS சலுகைகளை மட்டுமே நம்பியுள்ள குறைந்த வருமானக் குழுக்களில் உள்ளவர்களுக்கு மேம்பட்ட நிதி உதவியை வழங்க இந்த திட்டம் முயல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கத்திற்கு மத்தியில் தற்போதைய ஓய்வூதியத் தொகை அடிப்படை வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்று வாதிடும் பல தொழிலாளர் சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்கள் மேல்நோக்கிய திருத்தத்தைக் கோருகின்றன. அரசாங்கம் ஓய்வூதியதாரர்களின் இந்தக் கவலைகளை ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் ஓய்வூதிய நிதியின் நீண்டகால நிதி நிலைத்தன்மையுடன் ஓய்வூதிய அளவை சமநிலைப்படுத்தும் சாத்தியமான விருப்பங்களை மதிப்பீடு செய்து வருகிறது.
EPS ஒரு வரையறுக்கப்பட்ட பங்களிப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட நன்மைத் திட்டமாக செயல்படுகிறது. நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தில் 8.33 சதவீதத்தை இந்த ஓய்வூதிய நிதிக்கு பங்களிக்கின்றனர். மேலும் இதில் அரசாங்கம் ஒரு சிறிய பங்கைச் சேர்க்கிறது. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் கணக்கியல் மதிப்பீடுகள் நிதியின் கார்பஸில் அழுத்தத்தை சுட்டிக்காட்டியுள்ளன. இது அதிக ஊதியங்கள் மற்றும் நிதி நம்பகத்தன்மை இரண்டையும் உறுதி செய்யும் சீர்திருத்தங்களின் தேவையைத் தூண்டுகிறது.
ஓய்வூதிய மேம்பாட்டிற்கான பல்வேறு மாதிரிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் படிப்படியாக அதிகரிப்பு மற்றும் பணவீக்கத்துடன் இணைக்கப்பட்ட வேரியபிள் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்துதல் ஆகியவை அடங்கும். இந்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்தவுடன், திருத்தப்பட்ட ஓய்வூதியம் 6.5 கோடிக்கும் மேற்பட்ட EPF உறுப்பினர்களுக்கும் லட்சக்கணக்கான ஓய்வு பெற்றவர்களுக்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை, செயல்படுத்தப்பட்டவுடன், அது, இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துவதை நோக்கிய பயனத்தில் முக்கிய ஒரு மைல்கல்லாக இருக்கும். மேலும் தங்களது வாழ்க்கை முழுவதையும் பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட பணிகளுக்காக பங்களித்த ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் இது ஒரு முக்கிய படியாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ