Pensioners Latest News: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. இது அவர்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய செய்தியாக இருக்கும். குறிப்பாக, ஓய்வூதியதாரர்களுக்கான ஒரு முக்கிய அப்டேட்டை சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி அளித்தது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Reserve Bank of India: இந்திய ரிசர்வ் வங்கி கூறியது என்ன?
வங்கிகள் ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை இனியும் பொறுத்துக்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி தயாராக இல்லை. மத்திய அரசின் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் "ஏஜென்சி வங்கிகள்" மூலம் ஓய்வூதியத் தொகையை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், அந்த தாமதத்திற்கும் ஈடுசெய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
வங்கி ஒழுங்குமுறை ஆணையம் இழப்பீட்டு விகிதத்தையும் நிர்ணயித்துள்ளது. ஓய்வூதியம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், வங்கிகள் ஆண்டுக்கு 8% வட்டி செலுத்த வேண்டும் என்று ஆர்பிஐ கூறியுள்ளது. புதிய விதியைக் கூறும் சுற்றறிக்கை புதிய நிதியாண்டின் முதல் மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது.
Retired Government Employees: ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்காக ஆர்பிஐ வெளியிட்ட சுற்றறிக்கை
'ஏஜென்சி வங்கிகளால் அரசு ஓய்வூதியம் வழங்குதல்' என்ற சுற்றறிக்கையில், மத்திய அரசு சிவில் ஓய்வூதியதாரர்களின் கணக்குகளில் ஓய்வூதியம் வரவு வைப்பதில் ஏற்படும் எந்தவொரு தாமதத்திற்கும், ஓய்வூதியம் வழங்கும் அனைத்து வங்கிகளும் அந்த விகிதத்தில் வட்டி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், புதிய விதி அனைத்து வகையான ஓய்வூதியங்களுக்கும் பொருந்தும். அதாவது ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியங்கள் மற்றும் பிற ஓய்வூதியம் தொடர்பான சலுகைகள் என அனைத்திற்கும் இது பொருந்தும்.
Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகை தானாகவே வழங்கப்பட வேண்டும்
சுற்றறிக்கையின் மிக முக்கியமான பகுதி என்னவென்றால், வருடத்திற்கு 8% இழப்பீட்டு வட்டி செலுத்துதல் ஆடோமேடிக்காக, அதாவது வங்கிகள் தரப்பிலிருந்து தானாகவே செய்யப்பட வேண்டும், ஓய்வூதியதாரர் இழப்பீடு கேட்கும் வரை வங்கிகள் காத்திருக்கக்கூடாது. "ஓய்வூதியம்/அதன் நிலுவைத் தொகையை வரவு வைப்பதில் ஏற்படும் தாமதத்திற்கு, ஏஜென்சி வங்கிகள் ஓய்வூதியதாரருக்கு ஆண்டுக்கு 8 சதவீத நிலையான வட்டி விகிதத்தில் இழப்பீடு வழங்கி ஈடுசெய்யும்" என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இழப்பீடு எப்போது வழங்கப்படும் என்பதையும் இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. ஓய்வூதியம் வழங்கும் வங்கி, ஓய்வூதியம் வழங்கப்படும் அதே நாளில் வட்டித் தொகையை ஓய்வூதியதாரரின் கணக்கில் வரவு வைக்க வேண்டும், பின்னொரு நாளில் இதை செய்யக்கூடாது. ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்படும் எந்த தாமதத்தையும் ரிசர்வ் வங்கி பொறுத்துக்கொள்ளத் தயாராக இல்லை என்பதும், ஓய்வூதியதாரர்களின் நிதி உரிமைகளைப் பாதுகாக்க ரிசர்வ் வங்கி ஆர்வமாக உள்ளது என்பதும் சுற்றறிக்கையில் தகவல்கள் அளிக்கப்பட்டுள்ள விதத்திலிருந்து தெளிவாகிறது.
Pension Payment: ஓய்வூதிய வழங்கல்
ஓய்வூதியத்தை சரியான நேரத்தில் வழங்க அல்லது ஓய்வூதியதாரர்களுக்கு இழப்பீடு வழங்க ஒரு உத்தரவை மட்டும் பிறப்பித்துவிட்டு அப்படியே இருக்கும் எண்ணம் ரிசர்வ் வங்குக்கு இல்லை. இதை முழுமையாக செயல்படுத்த ரிசர்வ் வங்கி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. ஓய்வூதிய தாமதங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு பற்றிய பதிவுகளைப் பராமரிக்கவும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பதிவுகள் கேட்கப்படும் போதெல்லாம் அவற்றை உடனடியாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 605% அதிகரித்த குறைந்தபட்ச ஊதியம்: அரசு ஊழியர்களுக்கு வாரி வழங்கிய ஊதியக்குழுக்கள்
மேலும் படிக்க | மே 1 முதல்... இனி இவர்கள் முன்பதிவு பெட்டியில் பயணிக்க கூடாது - ரயில்வே அதிரடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









