தனியார் துறை ஊழியர்களுக்கு ஜாக்பாட்: மிகப்பெரிய ஓய்வூதிய உயர்வு விரைவில்

EPFO Update: சமீபத்தில் ஒரு நாடாளுமன்றக் குழு, தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000 ஆக இருப்பது மிகக்குறைவு என்றும் இதை ரூ.7,500 ஆக அதிகரிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 16, 2025, 02:58 PM IST
  • குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க கோரிக்கை.
  • தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய கணக்கில் எவ்வளவு பணம் கழிக்கப்படுகிறது?
  • இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
தனியார் துறை ஊழியர்களுக்கு ஜாக்பாட்: மிகப்பெரிய ஓய்வூதிய உயர்வு விரைவில்

EPS Pension Latest News: தனியார் துறையில் பணிபுரிபவர்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஒன்று வந்துள்ளது. ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000 -இலிருந்து ரூ.7,500 ஆக உயரக்கூடும். இது ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும்.

Add Zee News as a Preferred Source

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்

தனியார் துறை ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகின்றது. இது தொடர்பாக நாடாளுமன்றக் குழு தனது பரிந்துரையையும் அளித்துள்ளது. தற்போது திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1000 ஆக உள்ளது. இதற்கு முன்னர் இந்த தொகை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Minimum Monthly Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்

EPFO ஓய்வூதியத்தின் பலனைப் பெறும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு, தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் இப்போது ரூ.7,500 ஆக அதிகரிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ஒரு நாடாளுமன்றக் குழு, தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000 ஆக இருப்பது மிகக்குறைவு என்றும் இதை ரூ.7,500 ஆக அதிகரிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. 2014 ஆம் ஆண்டில், மத்திய அரசு EPFO ​​இன் கீழ் குறைந்தபட்ச மாத ஓய்வூதியமான ரூ.250 ஐ ரூ.1000 ஆக உயர்த்தியது.

குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க கோரிக்கை

பாஜக எம்பி பசவராஜ் பொம்மை தலைமையிலான தொழிலாளர் நாடாளுமன்றக் குழு, EPFO ​​ஊழியர்களின் ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக உயர்த்த அரசுக்கு முன்மொழிந்துள்ளது. இதுவரை தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

2014 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது பணவீக்கம் மிகவும் அதிகரித்துள்ளது என்று குழு கூறியது. ஆகையால், அதற்கேற்ப ஊழியர்களுக்கும் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும். ஆகையால்,  பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக அரசாங்கம் போதுமான ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என குழு பரிந்துரைத்துள்ளது.

Private Sector Employees: தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய கணக்கில் எவ்வளவு பணம் கழிக்கப்படுகிறது?

தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் சுமார் 12% ஒவ்வொரு மாதமும் EPF-க்காகக் கழிக்கப்படுகிறது. அதே அளவு தொகையை நிறுவனமும் பங்களிக்கின்றது. நிறுவனம் கொடுக்கும் தொகையில் 8.33% EPS கணக்கிற்கு செல்கிறது. 3.67% தொகை EPF கணக்கில் டெபாசிட் செய்யப்படுகின்றது. இந்த வழியில், ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் மிகச் சிறிய பகுதி ஓய்வூதியத்திற்காக ஒதுக்கப்படுகிறது. ஆகையால், தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் பண நெருக்கடி இல்லாத நல்ல வாழ்க்கை வாழ, ஓய்வூதிய அதிகரிப்பு நல்ல வாய்ப்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

EPS Pensioners: இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டால், அது இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும். இது தவிர, அன்றாடம் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க அகவிலைப்படி கொடுப்பனவு, ஓய்வூதியதாரர் மற்றும் அவரது வாழ்க்கைத் துணைக்கு இலவச அரசு மருத்துவ சேவைகள் போன்ற அத்தியாவசிய ஆதரவையும் இபிஎஃப் உறுப்பினர்கள் கோரியுள்ளார்கள். 

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: அம்மாடி!! 106% ஊதிய உயர்வு.... மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்

மேலும் படிக்க |  SIP Mutual Funds: ரூ.9,999 மாத முதலீட்டில் ரூ.1 கோடி சேர்க்க எவ்வளவு காலம் ஆகும்... எளிய கணக்கீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News