PM SYM: மாதம் ரூ.55 செலுத்தினால் போதும், மாதா மாதம் ரூ.3,000 கிடைக்கும், மத்திய அரசின் மாஸ் திட்டம்

PM-SYM Monthly Pension Scheme: பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் திட்டத்திற்கு யாரெல்லாம் தகுதி பெறுவார்கள்? இதற்கு எப்படி விண்ணப்பிப்பது? இந்த பதிவில் அனைத்து விவரங்களையும் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 10, 2025, 11:51 AM IST
  • PM-SYM திட்டம் என்றால் என்ன?
  • இந்தத் திட்டத்தில் சேர யாருக்கெல்லாம் தகுதி உள்ளது?
  • இதில் எவ்வளவு டெபாசிட் செய்ய வேண்டும்?
PM SYM: மாதம் ரூ.55 செலுத்தினால் போதும், மாதா மாதம் ரூ.3,000 கிடைக்கும், மத்திய அரசின் மாஸ் திட்டம்

Pradhan Mantri Shram Yogi Mandhan Yojana: ஒவ்வொரு வயதிலும் நமக்கு பணத்திற்கான தேவை ஒவ்வொரு விதமாக இருக்கின்றது. குறிப்பாக முதுமையில் பணத்திற்கான தேவை அதிகமாகலாம். ஏனெனில், அந்த வயதில் நம்மால் இள வயது போல பண ஈட்ட முடிவதில்லை. ஆகையால், முதுமைக்கான நிதி தேவைக்கு இள வயதிலேயே திட்டமிடுவது மிக அவசியமாகும்.

Add Zee News as a Preferred Source

அரசு வேலைகளில் உத்தரவாதமான ஓய்வூதியம் கிடைக்கின்றது. தனியார் துறை ஊழியர்களுக்கு இபிஎஸ் ஓய்வூதியம் கிடைக்கின்றது. ஆனால், அனைவருக்கும் உத்தரவாதமான ஓய்வூதியத்துடன் கூடிய அரசு வேலையோ அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட துறை வேலையோ கிடைப்பதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு முதுமைக்கான நிதி பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு பல திட்டங்களை நடத்தி வருகின்றது. 

Pradhan Mantri Shram Yogi Mandhan Yojana

அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்று மத்திய அரசு பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா. மத்திய அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மாதத்திற்கு வெறும் ரூ.55 டெபாசிட் செய்து, 60 வயதிற்குப் பிறகு மாதத்திற்கு ரூ.3,000 ஓய்வூதியம் பெறலாம். அரசு ஊழியர்களைப் போல ஓய்வூதிய சலுகைகளை அனுபவிக்க விரும்பும் நபர்களுக்கு இந்தத் திட்டம்  சிறந்த தேர்வாக இருக்கும். பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் திட்டத்திற்கு யாரெல்லாம் தகுதி பெறுவார்கள்? இதற்கு எப்படி விண்ணப்பிப்பது? இந்த பதிவில் அனைத்து விவரங்களையும் காணலாம்.

PM-SYM திட்டம் என்றால் என்ன?

PM-SYM திட்டம் இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும், அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்காக முக்கியமாக இது தொடங்கப்பட்டுள்ளது. 18 முதல் 40 வயதுக்குட்பட்ட யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்து, 60 வயதிற்குப் பிறகு மாதத்திற்கு ரூ.3,000 ஓய்வூதியம் பெறலாம். மேலும், பயனாளி இறந்துவிட்டால், அவரது வாழ்க்கைத் துணைக்கு ஓய்வூதியத்தில் 50% (மாதத்திற்கு ரூ.1,500) கிடைக்கும்.

PM-SYM: இந்தத் திட்டத்தில் சேர யாருக்கெல்லாம் தகுதி உள்ளது?

இந்தத் திட்டம் குறிப்பாக அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ரிக்‌ஷா இழுப்பவர்கள், விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், தறித் தொழிலாளர்கள், தோல் தொழிலாளர்கள், செருப்பு தைப்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், தெரு வியாபாரிகள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட சில தொழில்களை செய்யும் நபர்கள் இதில் சேர தகுதி பெறுவார்கள். இருப்பினும், இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெற, பயனாளியின் மாத வருமானம் ரூ.15,000 க்கும் குறைவாக இருக்க வேண்டும். மேலும் இதில் சேர விரும்பும் நபர்கள் EPFO, ESIC அல்லது NPS ஆகியவற்றில் உறுப்பினராக இருக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் எவ்வளவு டெபாசிட் செய்ய வேண்டும்?

மாதாந்திர முதலீடு பயனாளியின் வயதைப் பொறுத்தது:

- 18 முதல் 30 வயது வரை: மாதத்திற்கு ரூ.55
- 30 முதல் 40 வயது வரை: மாதத்திற்கு ரூ.100
- 40 வயதுக்கு மேல்: மாதத்திற்கு ரூ.200

இந்த திட்டத்தில் சேர தேவையான ஆவணங்கள்

PM-SYM திட்டத்தில் சேர, பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும்:

- ஆதார் அட்டை
- வங்கி கணக்கு விவரங்கள்
- பொது சேவை மையத்திலிருந்து கையொப்பமிடப்பட்ட படிவம்

இந்த திட்டத்திற்கான முதல் தவணை பொது சேவை மையத்தில் ரொக்கமாக டெபாசிட் செய்யப்பட வேண்டும். அதன் பிறகு, வங்கி டெபிட் மூலம் தானாக தவணைகளை செலுத்தலாம்.

PM-SYM திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

PM-SYM திட்டத்திற்கு மிக எளிதாக விண்ணப்பிக்கலாம். இதற்கான வழிமுறைகள் இதோ:

- உங்கள் அருகிலுள்ள பொது சேவை மையத்திற்கு (CSC) செல்லவும்.
- உங்கள் ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு விவரங்களைச் சமர்ப்பிக்கவும்.
- முதல் தவணைத் தொகையை டெபாசிட் செய்யவும்.
- இதன் பின்னர் உங்கள் PM-SYM ஓய்வூதியக் கணக்கு திறக்கப்படும்.
- உங்கள் மாதாந்திர தவணைகள் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து தானாகவே கழிக்கப்படும்.

மேலும் படிக்க | EPFO புதிய விதிகள்: PF உறுப்பினர்களுக்கு அதிகரித்த நன்மைகள், ரூ.7 லட்சம் இலவச காப்பீடு

மேலும் படிக்க | பெண்களே! இந்த திட்டங்களில் முதலீடு செய்தால் உங்கள் பணம் இரட்டிப்பாகும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News