EPFO வட்டி விகிதம் அதிகரிக்குமா? இன்று முக்கிய கூட்டம், காத்திருக்கும் PF உறுப்பினர்கள்

EPFO Update: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழு பிப்ரவரி 28 ஆம் தேதி, அதாவது இன்று கூடவுள்ளது. இந்த கூட்டத்தில் நடப்பு நிதியாண்டிற்கான (2024-25) வட்டி விகிதம் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள தெரிவிக்கின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 28, 2025, 10:19 AM IST
  • இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்?
  • இன்று உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி காத்திருக்கின்றது.
  • EPFO வட்டி விகிதம் அதிகரிக்குமா?
EPFO வட்டி விகிதம் அதிகரிக்குமா? இன்று முக்கிய கூட்டம், காத்திருக்கும் PF உறுப்பினர்கள்

EPFO Interest Rate: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் இன்று உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி காத்திருக்கின்றது. இன்று நடக்கவுள்ள ஒரு கூட்டத்தில் ஊழியர்களுக்கான சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

Add Zee News as a Preferred Source

Central Board of Trustees: மத்திய அறங்காவலர் குழு

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழு பிப்ரவரி 28 ஆம் தேதி, அதாவது இன்று கூடவுள்ளது. இந்த கூட்டத்தில் நடப்பு நிதியாண்டிற்கான (2024-25) வட்டி விகிதம் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள தெரிவிக்கின்றன. இந்த வாரியம், ஊழியர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர ஏற்பாடுகள் சட்டம், 1952 இன் பிரிவு 5A இன் கீழ் நிறுவப்பட்ட அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இதில் அரசு அதிகாரிகள், தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

EPFO: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு

முந்தைய நிதியாண்டில் (2023-24), EPFO ​​மூலம் ஊழியர்களுக்கு 8.25% வட்டி வழங்கப்பட்டது. அதற்கு முன்னர், 2022-23 நிதியாண்டில், வட்டி விகிதம் 8.15% ஆக இருந்தது. 2021-22 நிதியாண்டில் இது 8.10% ஆக இருந்தது.

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்தி

இன்று நடக்கும் சிபிடி குழு கூட்டத்தில் (CBT Meeting), நடப்பு நிதியாண்டிற்கான (2024-25) வட்டி விகிதம் குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படும். இதற்காக தனியார் துறை ஊழியர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். வட்டி விகிதம் 0.1% அதிகரிக்கக்கூடும் என சிலர் கணித்துள்ள நிலையில், அது மாற்றப்படாமல் அப்படியே வைக்கப்படும் என சில நிபுணர்கள் கருதுகிறார்கள். 

EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்கள் தொகையை செக் செய்வது எப்படி?

இன்னும் சில நாட்களில் வட்டி கணக்கில் வரவு வைக்கப்படும். அதன் பிறகு உங்கள் இபிஎஃப் கணக்கில் (EPF Account) எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை எப்படி அறிவது? சில எளிய வழிகளின் மூலம் வீட்டில் இருந்தபடியே இதை தெரிந்துகொள்ளலாம்.

EPF Balance: இபிஎஃப் இருப்புத்தொகையை செக் செய்ய உதவும் 4 வழிகள் இதோ:
- எஸ்எம்எஸ்
- மிஸ்டு கால்
- இபிஎஃப்ஓ வலைத்தளம்
- உமங் செயலி

SMS: எஸ்எம்எஸ் மூலம் இபிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி?

பயனர்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு “EPFOHO UAN TAM” என்று SMS அனுப்ப வேண்டும். அதன் பிறகு EPF கணக்குத் தகவலுடன் SMS ஒன்று உங்களுக்கு அனுப்பப்படும். UAN என்ற இடத்தில் உங்கள் UAN எண்ணை எழுத வேண்டும்.

Missed Call: மிஸ்டு கால் மூலம் இபிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி?

இபிஎஃப் உறுப்பினர்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். அதன் பிறகு சமீபத்திய PF பங்களிப்பு மற்றும் இருப்பு விவரங்கள் குறித்த SMS வரும்.

EPFO Website: இபிஎஃப்ஓ வலைத்தளம் மூலம் இபிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி?

- EPFO ​​இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான epfindia.gov.in க்குச் செல்லவும்.

- “services” என்பதைக் கிளிக் செய்து “for employees” ​​என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

- ‘Member Passbook’ என்பதைக் கிளிக் செய்தால் அது ஒரு உள்நுழைவுப் பக்கத்தைத் திறக்கும்.

- உங்கள் கணக்கில் லாக் இன் செய்ய, UAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.

- லாக் இன் செய்த பிறகு, உங்கள் கணக்கில் சேர்க்கப்பட்ட வட்டியைக் காணலாம்.

UMANG App: உமங் செயலி மூலம் இபிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி?

- UMANG போர்ட்டலுக்குச் செல்லவும்.

- EPFO ​​ஐத் தேடி, view passbook என்பதைக் கிளிக் செய்யவும்.

- உங்கள் EPF கணக்கின் யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) உள்ளிட வேண்டும்.

- அதன் பின்னர் நீங்கள் Get OTP என்பதைக் கிளிக் செய்து பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP-ஐச் சமர்ப்பிக்க வேண்டும்.

- உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுத்து ஈ-பாஸ்புக்கைப் பதிவிறக்கவும்.

மேலும் படிக்க | மார்ச் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: எல்பிஜி சிலிண்டர், அகவிலைப்படி, UPI, FD விதிகள்.... முழு லிஸ்ட் இதோ

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு மாஸ் திட்டம்: மாதம் ரூ.20,500 வருமானம், அரசின் உத்தரவாதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News