Unified Pension Scheme: சமீபத்தில் அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்தது. தேசிய ஓய்வூதிய முறையை திரும்பப்பெற வேண்டும் என்றும், பழைய ஓய்பூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
UPS From April 1, 2025: ஏப்ப்ரல் 1, 2025 முதல் யுபிஎஸ்
OPS எனப்படும் பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme) மற்றும் NPS எனப்படும் தேசிய ஓய்வூதிய முறை (National Pension System) ஆகிய இரண்டு முறைகளில் உள்ள முக்கிய அமசங்களை இணைத்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. UPS ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விதிமுறைகளை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) அறிவித்துள்ளது.
"மார்ச் 19, 2025 தேதியிட்ட கெஸட் அறிவிப்பின் மூலம் PFRDA விதிமுறைகள் (NPS இன் கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல்), 2025 ஐ வெளியிட்டுள்ளது," என்று நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NPS இன் கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்களுக்காக இந்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட UPS அறிவிப்பைத் தொடர்ந்து இந்த விதிமுறைகள் வெளிவந்துள்ளன. இந்த விதிமுறைகள் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்: PFRDA விதிமுறைகள் மூன்று வகை மத்திய அரசு ஊழியர்களைச் சேர்க்க உதவுகின்றன. UPS -இன் முக்கிய கட்-ஆஃப் தேதிகளை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
(i) ஏப்ரல் 1, 2025 -இன் படி பணியில் இருந்து, NPS இன் கீழ் கவர் செய்யப்பட்டுள்ள மத்திய அரசு ஊழியர்;
(ii) ஏப்ரல் 1, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு மத்திய அரசு சேவைகளில் சேரும் புதிய ஊழியர்கள்;
(iii) NPS-ன் கீழ் கவர் செய்யப்பட்ட, மார்ச் 31, 2025 அன்று அல்லது அதற்கு முன் ஓய்வுபெற்ற அல்லது தன்னார்வ ஓய்வுபெற்ற அல்லது 56(j)-ன் கீழ் அடிப்படை விதிகளின் கீழ் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர். UPS-க்கான விருப்பத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு இறந்துவிட்ட ஓய்வுபெற்ற ஊழியரின் சட்டப்பூர்வமாக திருமணமான வாழ்க்கைத் துணை.
இந்த அனைத்து வகை மத்திய அரசு ஊழியர்களுக்கான சேர்க்கை மற்றும் உரிமைகோரல் படிவங்கள் ஏப்ரல் 1, 2025 முதல் புரோட்டீன் சிஆர்ஏவின் வலைத்தளத்தில் ஆன்லைனில் கிடைக்கும் - https://npscra.nsdl.co.in. ஊழியர்கள் படிவங்களை நேரில் சென்றும் சமர்ப்பிக்கலாம்.
கடந்த ஆண்டு நரேந்திர மோடி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட யுபிஎஸ், மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலையான ஓய்வூதிய பாதுகாப்பை வழங்க முயல்கிறது. அரசு வேலையில் இருப்பவர்கள் மற்றும் ஏற்கனவே NPS-ல் சேர்ந்திருப்பவர்கள் யுபிஎஸ்-ஐத் தேர்வுசெய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









