EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு இன்னும் சில நாட்களில் மிகப்பெரிய செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்புள்ளது. இந்தியா முழுவதும் உள்ள தனியார் துறை ஊழியர்களுக்கு இது ஒரு பெரிய தகவலாக இருக்கும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் ஊதிய வரம்பை ரூ.15,000 -இலிருந்து ரூ.21,000 ஆக உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
EPFO Wage Ceiling Hike: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்
ஊதிய உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இந்து வருகிறது. இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், இதனால், சுமார் 75 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு, குறிப்பாக முன்னர் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் ஓய்வூதியப் பலன்களிலிருந்து விலக்கப்பட்டவர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகள் கிடைக்கும்.
இபிஎஃப்ஓ ஊதிய உச்சவரம்பை உயர்த்துவது என்றால் என்ன? இதனால் ஊழியர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள ஊதிய உச்சவரம்பு உயர்வு
தற்போது, ரூ.15,000 அல்லது அதற்கும் குறைவான அடிப்படை மாத சம்பளம் பெறும் ஊழியர்கள் மட்டுமே கட்டாய EPF மற்றும் EPS கவரேஜுக்கு தகுதியுடையவர்கள். ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் இரு தரப்பும் அடிப்படை சம்பளத்தில் தலா 12% இபிஎஃப் கணக்கில் (EPF Account) பங்களிக்கின்றனர். நிறுவனத்தில் பங்கில் 8.33% இபிஎஸ் கணக்கிற்கு (EPS) செல்கிறது, இது மாதத்திற்கு ரூ.1,250 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சம்பள உச்சவரம்பு ரூ.21,000 ஆக திருத்தப்பட்டால், இந்திய பணியாளர்களில் பெரும் பகுதியினர் பின்வருவனவற்றிற்கான தகுதியைப் பெறுவார்கள்:
- அதிக ஓய்வூதிய பங்களிப்புகள்
- மேம்பட்ட ஓய்வூதிய பாதுகாப்பு
- அதிக EPF சேமிப்புத்தொகை
EPS Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு சம்பள உச்ச வரம்பை உயர்த்துவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள்
ஊதிய உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டால், ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடிய முக்கிய நன்மைகள் பற்றி இங்கே காணலாம்:
- அதிக ஓய்வூதிய பங்களிப்பு: EPS பங்களிப்பு உச்சவரம்பு ரூ.1,250 இலிருந்து ரூ.1,749 ஆக உயரும். இதனால், தகுதியுள்ள ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிதி அதிகரிக்கும்.
- அதிக ஊழியர்கள் இதன் கீழ் கவர் செய்யப்படுவார்கள்: முன்னர் EPS இலிருந்து விலக்கப்பட்ட ரூ.15,001 முதல் ரூ.21,000 வரை ஊதியம் பெறும் தொழிலாளர்கள் இப்போது அதில் சேர்க்கப்படுவார்கள்.
- பெரிய EPF கார்ப்பஸ்: இந்த வருமான வரம்பில் உள்ள ஊழியர்கள் அதிக தொகையை பங்களிப்பார்கள், மேலும் நிறுவனங்களும் அதே அளவு தொகையை அளிக்கும். இது அதிக EPF சேமிப்புக்கு வழிவகுக்கும்.
- அதிகரித்த நிறுவன பொறுப்பு: நிறுவனங்கள் தங்கள் பங்களிப்புகளை அதிகரித்த உச்சவரம்பிற்கு ஏற்ப சரிசெய்ய வேண்டும். இது வணிகங்களுக்கான செயல்பாட்டு செலவுகளை சற்று அதிகரிக்கக்கூடும்.
அரசாங்கத்தின் பங்கு மற்றும் நிதி தாக்கம்
மத்திய அரசு தற்போது EPS-க்கு ஆண்டுதோறும் ரூ.6,750 கோடியை ஒதுக்குகிறது. சம்பள உச்சவரம்பு உயர்த்தப்பட்டால், அதற்கு கூடுதல் நிதி திட்டமிடல் மற்றும் ஒதுக்கீடுகள் தேவைப்படும். ஏனெனில் வரம்பு அதிகரித்த பிறகு அதிகமான ஊழியர்கள் EPS வலையமைப்பிற்குள் வருவார்கள. இந்த நடவடிக்கை சமூக பாதுகாப்பு கவரேஜை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் பரந்த உந்துதலுடன் ஒத்துப்போகும். குறிப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் செமி-ஃபார்மல் துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
ஊதிய உச்சவரம்பு அங்கீகரிக்கப்பட்டால், இந்த மாற்றம் கட்டங்களாக செயல்படுத்தப்படும். மேலும் ஓய்வூதியத் திட்டத்திலிருந்து முன்னர் விடுபட்ட லட்சக்கணக்கான நடுத்தர வருமானம் ஈட்டும் நபர்களுக்கு இது பயனளிக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









