)
Central Government Employees Latest News: தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்களின் கருத்துக்களை மனதில் கொண்டு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) தேர்வு செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 30 வரை நிதி அமைச்சகம் நீட்டித்துள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) தலைவருக்கு எழுதிய கடிதத்தில், நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள நிதி சேவைகள் துறை, UPS ஐத் தேர்வு செய்வதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30, 2025 என்ற தற்போதைய காலக்கெடுவிலிருந்து இரண்டு மாதங்களுக்கு நீட்டித்துள்ளதாக PTI அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில், "UPS இன் கீழ் பல நேர்மறையான மாற்றங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சுவிட்ச் ஆப்ஷன், ராஜினாமா மீதான சலுகைகள், கட்டாய ஓய்வூதியம், வரி விலக்குகள் போன்றவை அடங்கும். இந்த மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, ஊழியர்கள் இந்த விருப்பத்தைப் பயன்படுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன." என தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் இறந்த முன்னாள் ஓய்வு பெற்றவர்களின் சட்டப்பூர்வமாக திருமணமான வாழ்க்கைத் துணைவர்கள் ஆகியோருக்கு UPS ஐத் தேர்வு செய்வதற்கான கடைசி தேதியை இரண்டு மாதங்கள், அதாவது நவம்பர் 30, 2025 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. PFRDA-க்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், நிதியமைச்சர் இதற்கு ஒப்புதல் அளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கருத்துகளின் அடிப்படையில், இந்த காலக்கெடு ஜூலை 1, 2025 தேதியிட்ட கடிதம் மூலம் செப்டம்பர் 30, 2025 வரை நீட்டிக்கப்பட்டது.
- ஜூலை 20 நிலவரப்படி, சுமார் 31,555 மத்திய அரசு ஊழியர்கள் UPS-ஐத் தேர்ந்தெடுத்தனர்.
- அறிக்கைகளின்படி, 2.3 மில்லியன் அரசு ஊழியர்களில் சுமார் 100,000 பேர் செப்டம்பர் 30 காலக்கெடுவிற்குள் UPS-ஐத் தேர்ந்தெடுத்தனர்.
- ஏப்ரல் 1, 2025 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் UPS-ஐ ஒரு விருப்பமாக அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
- UPS ஊழியர்களுக்கு உறுதியான ஊதியங்களை வழங்கும்.
- ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமான UPS -இல் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் பணியை முடித்தவுடன், ஊழியர் ஓய்வு பெறும் போது கடந்த 12 மாதங்களில் பெற்ற சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% ஓய்வூதியமாகக் கிடைக்கும். ஊழியரின் சேவைகாலம் 10 ஆண்டுகளாக இருந்தாலும், ரூ.10,000 குறைந்தபட்ச ஓய்வூதியம் கிடைக்கும்.
- UPS -இல் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10% பங்களிக்க வேண்டும். இதில் அரசாங்கத்தின் பங்களிப்பு 18.5% ஆக இருக்கும்.
- ஊழியர் இறந்தால், பழைய ஓய்வூதியத் திட்டமான OPS போலவே, வாழ்க்கைத் துணைக்கு ஓய்வூதியத்தில் 60% கிடைக்கும். பணி ஓய்வு அல்லது இறப்பு ஏற்பட்டால் பணிக்கொடை மற்றும் மொத்தத் தொகையும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ