EPS Pension Latest News: இந்தியாவில், பொதுவாக அரசு ஊழியர்களுக்கு எப்போதும் தனியார் துறை ஊழியர்களை விட அதிக சலுகைகள் கிடைப்பதுண்டு. எனினும் சமீப காலங்களில் அந்த போக்கு மாறி வருகிறது. தனியார் துறை ஊழியர்களுக்கான ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, பல வித மாற்றங்களை செய்து ஊழியர்களுக்கான வசதிகளையும் நன்மைகளையும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக அவர்களின் ஓய்வூதிய சலுகைகளைப் பொறுத்தவரை, விரைவில் ஒரு நேர்மறையான மாற்றம் வரப்போகிறது. தனியார் துறை ஊழியர்களுக்கு இன்னும் சில நாட்களில் கிடைக்கவுள்ள சில முக்கிய அறிவிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Private Sector Employees: தனியார் துறை ஊழியர்களின் கோரிக்கை
நீண்ட காலமாக, தனியார் துறை ஊழியர்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்கக் கோரி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு இது தொடர்பான ஒரு சிறந்த செய்தி கிடைக்கவுள்ளது.
Minimum Monthly Pension Hike: குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிக்க கோரிக்கை
2025 பட்ஜெட்டுக்கு முன்னதாக, ஓய்வு பெற்ற EPS-95 ஊழியர்கள் குழு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூ.7,500 ஆக உயர்த்தவும், ஓய்வூதியத்தில் அகவிலைப்படி (DA) சேர்க்கப்படவும் கோரிக்கை விடுத்தது. அவர்களின் கோரிக்கைகள் தீவிரமாக பரிசீலிக்கப்படும் என்று நிதியமைச்சர் அவர்களுக்கு உறுதியளித்தார். விரைவில் ஒரு நேர்மறையான அறிவிப்பு வெளியிடப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
EPF Members: ஒரு தசாப்தத்திற்க்கு மேல் காத்திருக்கும் இபிஎஃப் உறுப்பினர்கள்
EPS இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் இதற்கு முன்னர் 2014 செப்டம்பர் மாதம் அதிகரிக்கப்பட்டது. அப்போது அது ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டது. EPF முறையில், ஊழியர் மற்றும் நிறுவனம் இருவரும் பணியாளரின் அடிப்படை சம்பளத்தில் 12% ஐ வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிக்கின்றனர். இதில், நிறுவனத்தின் பங்களிப்பில் 8.33% EPS-க்கு செல்கிறது, மீதமுள்ள தொகை EPF கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு இன்னும் ஓய்வூதிய திருத்தம் செய்யப்படவில்லை. இப்போது ஓய்வூதியம் அதிிக்கப்பட்டால், அது, ஓய்வூதியதாரர்களின் நிதி பாதுகாப்பை பெரிதும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிதி நிவாரணம் கிடைக்கும்
குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டால், அது ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிதி நிவாரணத்தை வழங்கும். ஓய்வூதியத்தில் கணிசமான அதிகரிப்பு உட்பட ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மண்டவியா உறுதியளித்துள்ளார்.
ஓய்வூதியம் அகவிலைப்படியுடன் இணைக்கப்படும்
ஓய்வூதியதார்ரகளுக்கான முக்கிய மாற்றங்களில் ஒன்றாக, அகவிலைப்படி (Dearness Allowance) ஓய்வூதியத்துடன் இணைக்கப்படும் என்று கூறப்படுகின்றது. இந்த நடவடிக்கை ஓய்வூதியதாரர்களின் வருமானத்தை ஏழு மடங்கு வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது EPFO -இல் உறுப்பினர்களாக உள்ள 78 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் இந்த திருத்தத்தால் பயனடைவார்கள்.
ஓய்வூதியதாரர் அமைப்புகளின் முக்கிய கோரிக்கைகள்
ஒரு முன்னணி ஓய்வூதியதாரர் அமைப்பு பின்வரும் பல முக்கிய கோரிக்கைகளை எழுப்பியுள்ளது:
- குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும்.
- ஓய்வூதியதாரர்களுக்கு மேம்பட்ட நிதி பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
- ஓய்வு பெற்றவர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கப்பட வேண்டும்.
- அதிக ஓய்வூதிய சலுகைகள் தொடர்பான சில சிக்கல்கள் சரிசெய்யப்பட வேண்டும்.
இந்த கோரிக்கைகளுக்கு அரசாங்கம் சாதகமாக பதிலளித்துள்ளது. இதன் மூகன், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (Employee Pension Scheme) கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் திருத்தப்படுவதற்கு வலுவான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.
மேலும் படிக்க | EPFO 3.0... மாறும் விதிகள்... கூடும் வசதிகள்... அமைச்சர் கூறிய முக்கிய தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









