தனியார் துறை ஊழியர்களுக்கு ஜாக்பாட்: 7 மடங்கு ஓய்வூதிய உயர்வுக்கு நாடாளுமன்றக் குழு பரிந்துரை

EPFO Update: கோடிக்கணக்கான தனியார் துறை ஊழியர்களுக்கு, அவர்களது நீண்ட நாள் கொரிக்கைக்கு சாதகமான ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 1, 2025, 01:33 PM IST
  • இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.
  • குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்கிறதா?
  • நாடாளுமன்றக் குழுவின் வலுவான வேண்டுகோள்.
தனியார் துறை ஊழியர்களுக்கு ஜாக்பாட்: 7 மடங்கு ஓய்வூதிய உயர்வுக்கு நாடாளுமன்றக் குழு பரிந்துரை

EPS Pension Latest News: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால், உன்களுக்கு ஒரு மகிழ்சியான புதுப்பிப்பு வந்துள்ளது. கோடிக்கணக்கான தனியார் துறை ஊழியர்களுக்கு, அவர்களது நீண்ட நாள் கொரிக்கைக்கு சாதகமான ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

Private Sector Employees: தனியார்துறை ஊழியர்கள்

ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (Employee Pension Scheme) கீழ், தற்போது ரூ.1,000 ஆக உள்ள ஊழியர்களின் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், இந்த தொகையை அதிகரிக்க வேண்டும் என நாடாளுமன்றக் குழுவும் இப்போது அரசாங்கத்திற்கு தீவிரமாக பரிந்துரைத்துள்ளது. 

Minimum Monthly Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்

இதற்கு முன்னர் EPFO, ​​சந்தாதாரர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 2014 இல் மாற்றியது. அப்போது மத்திய அரசு மாதம் ரூ.250 ஆக இருந்த குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதம் ரூ.1,000 ஆக நிர்ணயித்தது. ஆனால், அதற்கு பிறகு பணவீக்கம், ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் செலவுகள் என அனைத்தும் மாறிவிட்டன. ஆனால், அவர்களது குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் அப்படியே உள்ளது.

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களின் தொடர் கோரிக்கை

பணவீக்கம் உயர்ந்து வருவதால், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என்று தொழிற்சங்கங்களும் ஓய்வூதியதாரர் சங்கங்களும் நீண்ட காலமாக கூறி வருகின்றன. கடந்த 11 ஆண்டுகளில் இந்த ஓய்வூதியத் தொகையில் எந்த அதிகரிப்பும் செய்யப்படவில்லை என்றும், இதனால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் வாழ்க்கைச் செலவுகளை கையாள்வது கடினமாக உள்ளது என்றும்  அவர்கள் நிலைமையை விளக்கியுள்ளனர். 

Parliamentary committee: நாடாளுமன்றக் குழுவின் வலுவான வேண்டுகோள்

பாஜக எம்பி பசவராஜ் பொம்மை தலைமையிலான தொழிலாளர் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, EPFO -வின் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை கணிசமாக அதிகரிக்க மத்திய அரசை தீவிரமாக வலியுறுத்தியுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்போது, ​​இந்த ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.1,000 ஆக உள்ளது. பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இந்தத் தொகை மிகக் குறைவு என குழு கருதுகிறது..

EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்

2014 உடன் ஒப்பிடும்போது 2024 இல் பணவீக்கம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆகையால், அதே விகிதத்தில் ஓய்வூதியத்தை அதிகரிப்பது நியாயமானது என்ற தனது முந்தைய பரிந்துரையை குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. நிதி தாக்கங்களை மனதில் கொண்டு, ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பெரிய நலனுக்காக அரசாங்கம் இந்த திசையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழு மேலும் கூறியுள்ளது.

EPS Pensioners: இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு தொகை டெபாசிட் செய்யப்படுகிறது

தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் EPF கணக்கிற்கு 12 சதவீதம் கழிக்கப்படுகிறது. அதே அளவு தொகையை நிறுவனமும் ஊழியர்களின் இபிஎஃப் கணக்கிற்கு செலுத்துகிறது. எனினும் நிறுவனம் டெபாசிட் செய்யும் தொகையில் 8.33 சதவீதம் EPS 95 கணக்கிற்கு செல்கிறது. மீதமுள்ள 3.67 சதவீதம் EPF-இல் டெபாசிட் செய்யப்படுகிறது.

மேலும் படிக்க | EPFO: PF ஆட்டோ க்ளெய்ம் செட்டில்மெண்ட் வரம்பை ரூ.5 லட்சமாக அதிகரிக்க திட்டம்

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: அடேங்கப்பா!! ஜாக்பாட் ஊதிய, ஓய்வூதிய உயர்வு, யாருக்கு எவ்வளவு? கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News