Additional Pension For Central Government Pensioners: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி. மத்திய அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அரசு பல வித சலுகைகலை அளிக்கின்றது. ஓய்வூதியதாரர்கள் 80 வயதை பூர்த்தி செய்த பிறகு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை அதிகரிக்கப்படும் கூடுதல் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்களாகிறார்கள். இதை பற்றியும் ஓய்வூதியம் தொடர்பான இன்னும் சில முக்கிய விதிகள் பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
கூடுதல் ஓய்வூதியம் தொட்ரபான அறிவிப்பு
சில மாதங்களுக்கு முன்னர், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை கூடுதல் ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றம் CCS விதிகள், 2021 இன் விதி 44 இன் துணை விதி 6 இன் தேவைகளுக்கு இணங்க வருகிறது. 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் இந்த கூடுதல் ஓய்வூதியத்திற்கு உரிமை பெறுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஓய்வுபெற்ற அரசு ஊழியருக்கு எண்பது வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயது நிறைவடைந்த பிறகு கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். அது செலுத்த வேண்டிய காலண்டர் மாதத்தின் முதல் நாளிலிருந்து இந்த கூடுதல் ஓய்வூதியம் செலுத்தப்பட வேண்டும்," என்று ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை (DoPPW) ஓய்வூதிய சலுகைகள் குறித்த ஆவணத்தில் கூறியுள்ளது.
வயது வாரியாக 80 வயதிற்கு பிறகு யாருக்கு எவ்வளவு கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் ஓய்வூதியம் பின்வரும் முறையில் வழங்கப்படுகிறது:
- 80 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 85 வயதுக்கு குறைவான ஓய்வூதியதாரர்கள்: அடிப்படை ஓய்வூதியத்தில் 20% கூடுதல் ஓய்வூதியம்
- 85 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 90 வயதுக்கு குறைவான ஓய்வூதியதாரர்கள்: அடிப்படை ஓய்வூதியத்தில் 30% கூடுதல் ஓய்வூதுயம்
- 90 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 95 வயதுக்கு குறைவான ஓய்வூதியதாரர்கள்: அடிப்படை ஓய்வூதியத்தில் 40% கூடுதல் ஓய்வூதியம்
- 96 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 100 வயதுக்கு குறைவான ஓய்வூதியதாரர்கள்: அடிப்படை ஓய்வூதியத்தில் 50% கூடுதல் ஓய்வூதியம்
- 100 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள்: அடிப்படை ஓய்வூதியத்தில் 100% கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும்.
எடுத்துக்காட்டாக, ஆகஸ்ட் 20, 1940 அன்று பிறந்த ஓய்வூதியதாரர் ஆகஸ்ட் 1, 2020 முதல் அடிப்படை ஓய்வூதியத்தில் 20 சதவீத விகிதத்தில் கூடுதல் ஓய்வூதியத்திற்குத் தகுதியுடையவர் என்று DoPPW கூறுகிறது. இதேபோல், ஆகஸ்ட் 1, 1940 அன்று பிறந்த ஓய்வூதியதாரர் ஆகஸ்ட் 1, 2025 முதல் அடிப்படை ஓய்வூதியத்தில் 30 சதவீத விகிதத்தில் கூடுதல் ஓய்வூதியத்திற்குத் தகுதியுடையவர்.
Pension Rules for Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களின் முக்கிய ஓய்வூதிய விதிகள்
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் CCS (ஓய்வூதிய) விதிகளால் நிர்வகிக்கப்படுகிறது. ஒரு அரசு ஊழியர் பொதுவாக பின்வரும் சூழ்நிலைகளில் ஓய்வூதியத்திற்குத் தகுதி பெறுகிறார்:
A. முழுமையான பணிக்காலம் முடிந்த பிறகு ஓய்வு பெறுதல்.
B. பின்வரும் நிபந்தனைகளின் கீழ் ஓய்வு பெறுதல்:
- 30 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையை முடித்த பிறகு அல்லது 20 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையை முடித்த பிறகு தன்னார்வ ஓய்வு பெறுதல்
- குழு A மற்றும் B ஊழியர்கள் 50 வயது அல்லது குழு C ஊழியர்கள் 55 வயதை அடைந்த பிறகு தன்னார்வ ஓய்வு பெறுதல்.
- அரசு ஊழியர் வகித்த பதவியை ரத்து செய்ததன் விளைவாக, DoPT இன் உபரி பிரிவுக்கு மாற்றப்பட்ட பிறகு தன்னார்வ ஓய்வு பெறுதல்
- செயல்திறன் அடிப்படையில், CCS (ஓய்வூதியம்) விதிகளின் விதி 48 இன் கீழ், 50 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையை முடித்த பிறகு (குழு A மற்றும் B விஷயத்தில்)/55 ஆண்டுகள் (குழு C விஷயத்தில்) FR 56(J) இன் கீழ், முன்கூட்டிய ஓய்வு பெறுதல்.
C. விளம்பரத்தின் பேரில் ஒரு பொதுத்துறை/தன்னாட்சி அமைப்பில் எடுத்துக்கொள்ளப்படுதல் அல்லது ஒரு அரசுத் துறையை பொதுத்துறை/தன்னாட்சி அமைப்பாக மாற்றும்போது திறந்த தொகுதி உள்வாங்கலின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்படும்போது.
D. பணியாளரை நிரந்தரமாக சேவைக்கு இயலாததாக்கும் எந்தவொரு உடல் அல்லது மனநலக் குறைபாட்டின் காரணமாகவும் ஓய்வு பெறத் தேர்வுசெய்யும்போது. ஒரு அரசு ஊழியர் 10 வருட தகுதிவாய்ந்த சேவையை முடிப்பதற்கு முன்பே ஓய்வு பெற்றாலும் இந்த ஓய்வூதியம் அனுமதிக்கப்படும்.
E. ஒரு அரசு ஊழியர் தனது நிரந்தரப் பதவியை ரத்து செய்ததன் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டால்.
F. ஏதாவது துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு பிறகு கட்டாய ஓய்வு அல்லது நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்படும்போது.
G. துறை/நீதித்துறை நடவடிக்கைகளில் பணிநீக்கம்/வேலையிலிருந்து அகற்றப்படும்போது, ஒரு அரசு ஊழியர் ஓய்வூதியத்திற்கான தனது உரிமையை இழக்கிறார். இருப்பினும், சிறப்பு பரிசீலனைக்கு தகுதியான வழக்குகளில், தகுதிவாய்ந்த அதிகாரி கருணை உதவித்தொகையை அனுமதிக்கலாம்.
மேலும் படிக்க | NPS: ரூ.4,500 மாத முதலீட்டில்... ஓய்வுக்கு பின் மாதம் ரூ.52,000 பென்ஷன் பெறலாம்
மேலும் படிக்க | 7வது ஊதியக்குழு: ஜூலையில் மீண்டும் அகவிலைப்படி உயர்வு: CPI-IW மூலம் வந்த குட் நியூஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









